2020 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் இந்தியாவிற்கு வந்துவிட்டது... ஆனா விலைதான் மயக்கத்தை வரவைக்குது...

ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் 2020 ஃபேட் பாய் க்ரூஸர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 48 மற்றும் 48 ஸ்பெஷல் பைக்குகளுக்கு பிறகு இந்த மார்ச் மாதத்தில் அறிமுகமாகும் மூன்றாவது ஹார்லி டேவிட்சன் பைக் மாடலாக ஃபேட் பாய் விளங்குகிறது.

2020 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் இந்தியாவிற்கு வந்துவிட்டது... ஆனா விலைதான் மயக்கத்தை வரவைக்குது...

எக்ஸ்ஷோரூமில் ரூ.18.25 லட்சத்தை ஆரம்ப விலையாக பெற்றுள்ள இந்த 2020 ஹார்லி டேவிட்சன் பைக்கானது இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதில் ஒரு வேரியண்ட்டில் மில்வாக்கி-எய்ட் 107 என்ஜினும் மற்றொரு வேரியண்ட்டில் மில்வாக்கி-எய்ட் 114 என்ஜினும் வழங்கப்படவுள்ளன.

2020 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் இந்தியாவிற்கு வந்துவிட்டது... ஆனா விலைதான் மயக்கத்தை வரவைக்குது...

இதில் கூடுதல் ஆற்றல்மிக்க என்ஜினை பெற்றுள்ள வேரியண்ட் ரூ.20.10 லட்சத்தில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த இரு என்ஜின் அமைப்புகளிலும் எச்-டி-யின் எலக்ட்ரானிக் செக்யூன்ஷியல் போர்ட் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

2020 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் இந்தியாவிற்கு வந்துவிட்டது... ஆனா விலைதான் மயக்கத்தை வரவைக்குது...

ஆனால் இப்போதுவரை இதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் குறிப்பிடவில்லை. புதிய ஃபேட் பாய் பைக்கில் வழங்கப்பட்டுள்ள 1745சிசி வி-ட்வின் ஏர்-கூல்டு மில்வாக்கி-எய்ட் 107 என்ஜின் அதிகப்பட்சமாக 3000 ஆர்பிஎம்-ல் 144 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கவல்லது.

2020 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் இந்தியாவிற்கு வந்துவிட்டது... ஆனா விலைதான் மயக்கத்தை வரவைக்குது...

அளவில் பெரியதான 1868சிசி வி-ட்வின் ஏர்-கூல்டு மில்வாக்கி-எய்ட் 114 என்ஜின் 156 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மற்றப்படி தனது முந்தைய வெர்சன் பைக்கில் இருந்து தோற்றத்தை அப்படியே இந்த 2020 பைக் பெற்றுள்ளது.

2020 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் இந்தியாவிற்கு வந்துவிட்டது... ஆனா விலைதான் மயக்கத்தை வரவைக்குது...

இதனால் அதே 2,370மிமீ நீளம், 1665மிமீ வீல்பேஸ் உள்ளிட்ட அளவுகள் தொடர்ந்துள்ளன. தரையில் இருந்து வெறும் 670மிமீ உயரத்தில் ரைடர் இருக்கையை பெற்றுள்ள இந்த புதிய பைக்கில் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 115மிமீ-ஆக கொடுக்கப்பட்டுள்ளது.

2020 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் இந்தியாவிற்கு வந்துவிட்டது... ஆனா விலைதான் மயக்கத்தை வரவைக்குது...

ஹார்லி டேவிட்சனின் இந்த 2020 க்ரூஸர் மாடலின் இரு வேரியண்ட்களுக்கும் அதிக எண்ணிக்கையில் நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஆரம்ப நிலை வேரியண்ட்டான மில்வாக்கி-எய்ட் 107 தெளிவான கருப்பு, நீலம்/பச்சை கலவை, பார்ராகுடா சில்வர், ரிவர் ராக்கி க்ரே/கருப்பு மற்றும் பார்ராகுடா சில்வர்/ப்ளாக் டெனிம் என்ற ஐந்து பெயிண்ட் தேர்வுகளை பெற்றுள்ளது.

2020 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் இந்தியாவிற்கு வந்துவிட்டது... ஆனா விலைதான் மயக்கத்தை வரவைக்குது...

டாப் வேரியண்ட்டான மில்வாக்கி-எய்ட் 114, பளபளப்பான சிவப்பு, மிட்நைட் ப்ளூ மற்றும் ஸிபிர் ப்ளூ/ப்ளாக் சங்லோ என்ற மூன்று நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது. கிளாசிக் அமெரிக்கன் டிசைனை கொண்டுள்ள 2020 ஃபேட் பாய் பைக் ஹார்லி டேவிட்சனின் பிரபலமான க்ரூஸர் மாடல்களில் ஒன்றாக உள்ளது.

2020 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் இந்தியாவிற்கு வந்துவிட்டது... ஆனா விலைதான் மயக்கத்தை வரவைக்குது...

அதிகளவில் க்ரோம்களையும் சவுகரியமான ரைடிங் பொசிஷனையும் இந்த புதிய பைக் கொண்டுள்ளதால் எதிர்பார்த்ததை விட கூடுதலான விற்பனை எண்ணிக்கைகளை வரும் மாதங்களில் இந்திய சந்தையில் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு இந்திய சந்தையில் இந்தியன் ஸ்காட் முக்கியமான போட்டி மாடலாக விளங்கும்.

Most Read Articles
English summary
2020 Harley-Davidson Fat Boy Launched In India: Prices Start At Rs 18.25 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X