ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுகம்... இந்தியாவின் முதல் 100 சிசி பிஎஸ்-6 பைக் மாடல்!

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் 100 சிசி பிஎஸ்-6 மாடலாக வந்திருக்கும் இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. இந்நிறுவனத்தின் மிக குறைவான விலை மாடலாக எச்எஃப் டீலக்ஸ் விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், அண்மையில் ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக்கை பிஎஸ்-6 எஞ்சினுடன் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இதைத்தொடர்ந்து, இரண்டாவது பிஎஸ்-6 மாடலாக எச்எஃப் டீலக்ஸ் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. அழகிய டிசைன், விலை குறைவான தேர்வாக இருந்து வரும் இந்த பைக்கில் தற்போது பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்டு வந்திருப்பது புத்தாண்டில் பட்ஜெட் விலையில் பைக் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு சரியான தேர்வாக அமையும்.

புதிய ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுகம்

புதிய ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் செல்ஃப் ஸ்டார்ட் - அலாய் வீல் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் - அலாய் வீல் - ஐ3எஸ் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.55,925 எக்ஸ்ஷோரூம் விலையும், விலை உயர்ந்த வேரியண்ட்டிற்கு ரூ.57,250 எக்ஸ்ஷோரூம் விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக்கில் ஹை- டென்ஸில் ஸ்டீல் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது சிறப்பான கையாளுமையையும், அதிக உறுதியான கட்டமைப்பையும் வழங்கும்.

இந்த பைக்கின் 100 சிசி எஞ்சினில் கார்புரேட்டருக்கு பதிலாக, புரோகிராம்டு ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் Xsens என்ற பெயரில் குறிப்பிடப்படும் 10 சென்சார்கள் துணையுடன் எரிபொருளை சரியான முறையில் செலுத்தும் புதிய தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது.

இதனால், எரிபொருள் சிக்கனம் 9 சதவீதம் அதிகரிக்கும் என்பதுடன், மாசு உமிழ்வும் வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 7.94 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 2 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் ட்வின் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.

இந்த பைக்கில் 18 அங்குல டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. டிரம் பிரேக்குகள் உள்ளன. இந்த பைக் 1,965 மிமீ நீளமும், 720 மிமீ அகலமும், 1,045 மிமீ உயரமும் கொண்டது. 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது. இந்த பைக்கின் வீல் பேஸ் நீளம் 1,235 மிமீ ஆக இருக்கிறது.

புதிய ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பிஎஸ்-6 பைக் புதிய வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது. டெக்னோ புளூ, ஹெவி க்ரோ- க்ரீன் ஆகிய புதிய வண்ணத் தேர்வுகளிலும், கருப்பு மற்றும் சிபப்பு, கருப்பு மற்றும் கருப்பு- ஊதா-சாம்பல் வண்ணக் கலவை தேர்வுகளிலும் கிடைக்கும்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஹீரோ மோட்டோகார்ப் ஷோரூம்களிலும் இந்த புதிய பைக் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாகவும், பிஎஸ்-6 எஞ்சின் கொண்ட முதல் 100 சிசி பைக் மாடலாகவும் வந்திருப்பது, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Hero MotoCorp has launched the HF Deluxe with BS6-compliant engine for a starting price of Rs 55,925 (ex-showroom, Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X