பிரிமியம் கார்களுக்கு இணையான விலையுடைய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்... விலைய கேட்டு அசந்துராதீங்க!

பிரிமியம் கார்களுக்கு இணையான விலையில் ஹோண்டா நிறுவனத்தின் ஆஃப்ரிக்கா ட்வின் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரிமியம் கார்களுக்கு இணையான விலையுடைய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்... விலைய கேட்டு அசந்துராதீங்க!

ஹோண்ட நிறுவனம் இந்த வருடத்தை சிறப்பிக்கும் விதமாக பல்வேறு நடவடக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, மக்கள் மத்தியில் அதிகம் வரேவற்பைப் பெற்ற அதன் பிரபல தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக அப்கிரேட் செய்து வருகின்றது.

பிரிமியம் கார்களுக்கு இணையான விலையுடைய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்... விலைய கேட்டு அசந்துராதீங்க!

அப்கிரேஷன் செய்வது மட்டுமின்றி புதிய தயாரிப்புகளாலும் இந்தியர்களைக் கவர்ந்து வருகின்றது. அதன்படி, சிஆர்எஃப்1100எல் என்ற ஆஃப்ரிக்கா ட்வின் மாடல் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்த புத்தம் புதிய மோட்டார்சைக்கிளுக்கு நடுத்தர பிரிமியம் வசதியுடைய எஸ்யூவி கார்களுக்கு இணையான விலையை ஹோண்டா நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது.

பிரிமியம் கார்களுக்கு இணையான விலையுடைய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்... விலைய கேட்டு அசந்துராதீங்க!

ரூ. 15.35 லட்சம் என்ற விலையை அது நிர்ணயித்திருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். ஆன்-ரோடில் வாங்கும்போது இதைவிட சற்று கூடுதல் விலையில் இந்த பைக் கிடைக்கும். குறிப்பாக, பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வசதிகளை உள்ளடக்கியிருப்பதன் காரணத்தினால் இந்த அதீத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரிமியம் கார்களுக்கு இணையான விலையுடைய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்... விலைய கேட்டு அசந்துராதீங்க!

இந்த 2020 ஹோண்ட ஆஃப்ரிக்கா ட்வின் பைக்குகளின் இரு வேரியண்டுகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. அதில், ஒன்று ஸ்டாண்டர்டு வேரியண்டாகவும் மற்றொன்று அட்வென்சர் ஸ்போர்ட்ஸ் வேரியண்டிலும் காட்சியளிக்கின்றது.

இவ்விரு வேரியண்டிகளிலும் ஒரே திறனுடைய பெரியளவு எஞ்ஜினே பொருத்தப்பட்டிருக்கின்றன. அது 1,084 சிசி சக்தி கொண்ட பாரல்லல் ட்வின் எஞ்ஜின் ஆகும்.

பிரிமியம் கார்களுக்கு இணையான விலையுடைய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்... விலைய கேட்டு அசந்துராதீங்க!

எஞ்ஜின் தரத்தில் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கும் இந்த பைக்குகள் உருவத்தில் லேசான மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன. அதாவது, ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்சர் என்பதற்கான வித்தியாசத்தை தோற்றுவிக்கின்ற வகையிலான உருவத்தை அவை பெற்றிருக்கின்றன.

இதில், அட்வென்சர் ரக ஆஃப்ரிக்கா ட்வின் தன்னை ஓர் அட்வென்சர் என்று காண்பிப்பதற்காக சில அம்சங்களை கூடுதலாகப் பெற்றிருக்கின்றது.

பிரிமியம் கார்களுக்கு இணையான விலையுடைய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்... விலைய கேட்டு அசந்துராதீங்க!

அந்த வகையில், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கூடிய வின்ட்ஸ்கிரீன், பெரிய பெட்ரோல் டேங்க், புரொடக்டிவ் ஃபிரேம் ஒர்க், கரடு முரடான சாலையில் பயணிப்பதற்கு ஏதுவான டயர்களுடன் கூடிய அலாய் வீல் உள்ளிட்டவை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.

இந்த தனித்துமான அம்சங்களைப் போலவே இரு பைக்குகளுக்கும் இடையில் சில ஒற்றுமையான அம்சங்கள் காணப்படுகின்றன.

பிரிமியம் கார்களுக்கு இணையான விலையுடைய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்... விலைய கேட்டு அசந்துராதீங்க!

ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்ட 6.5 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மூன்று விதங்களாக இயக்கத்தை கன்ட்ரோல் செய்யும் சிஸ்டம், 6-ஆக்ஸிஸ் இனெர்சியல் அளவிடும் யூனிட், எல்இடி ஹெட்லேம்ப், கார்னரிங் மின் விளக்கு, டிராக்சன் கன்ட்ரோல், டிசிடி கார்னரிங் டிடெக்சன் மற்றும் எலெக்ட்ரானிக் பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்கள்தான் இரு பைக்கிலும் காணப்படும் ஒரே மாதிரியான அம்சங்கள் ஆகும்.

பிரிமியம் கார்களுக்கு இணையான விலையுடைய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்... விலைய கேட்டு அசந்துராதீங்க!

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 1,084 சிசி திறனுடைய பாரல்லல் ட்வின் யூனிட் எஞ்ஜின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரை 7,500 ஆர்பிஎம்மிலும், 105 என்எம் டார்க்கை 6,250 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் மேனுவல் டிரான்மிஷன் அல்லது ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் தேர்வில் கிடைக்கின்றது.

பிரிமியம் கார்களுக்கு இணையான விலையுடைய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்... விலைய கேட்டு அசந்துராதீங்க!

அதேசமயம், இதன் எஞ்ஜின் அதிக எடையைக் கொண்டிருக்கக்கூடாது என்பதற்காக அலுமினியம் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இது எஞ்ஜினின் எடையைக் குறைப்பதுடன், அதிக திறனை வெளிப்படுத்தும் உதவும்.

பிரிமியம் கார்களுக்கு இணையான விலையுடைய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்... விலைய கேட்டு அசந்துராதீங்க!

மேலும், இந்த பைக்குகளை ஆஃப் ரோடில் மட்டுமின்றி ஆன்-ரோடுகளிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை, டூர், அர்பன், கிரவல் மற்றும் ஆஃப்-ரோட் ஆகும். இத்துடன், கூடுதலாக சில ரைடிங் மோட்களையும் வாடிக்கையாளர்களின் தேர்வைக் கொண்டு ஹோண்ட வழங்க இருக்கின்றது.

பிரிமியம் கார்களுக்கு இணையான விலையுடைய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்... விலைய கேட்டு அசந்துராதீங்க!

இதுதவிர பைக்கின் பிரிமியம் தோற்றத்திற்கு பல்வேறு சிறப்பு அலங்காரப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த அலங்கார பொருட்கள் எடைக் குறைவானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்து ஹோண்டா பின வாங்கவில்லை.

இத்துடன், பாதுகாப்பு மற்றும் சொகுசான ரைடிங் அனுபவத்திற்காவும் பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
2020 Honda Africa Twin (CRF1100L) Launched In India: Prices Start At Rs 15.35 Lakh. Read In Tamil.
Story first published: Friday, March 6, 2020, 14:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X