புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் இந்திய அறிமுக தேதி விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்

கடந்த ஆண்டு செப்டம்பரில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மாடலில் எஞ்சின் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்

இந்த நிலையில், இந்த புதிய மாடல் வரும் 5ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இது பிரிமீயம் அட்வென்ச்சர் டூரர் பைக் மாடல் வாங்க விரும்புவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மற்றும் ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், இரண்டு வேரியண்ட்டுகளுமே விற்பனைக்கு கொண்டு வரப்படுமா அல்லது ஆப்ரிக்கா ட்வின் வேரியண்ட் மட்டுமே வருமா என்பது குறித்த இதுவரை தகவல் இல்லை.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்

முக்கிய மாற்றமாக ஃபேரிங் பேனல்கள், இலகுவான ஃப்ரேம் அமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், கையாளுமை மற்றும் ஏரோடைனமிக்ஸ் சிறப்பாக மேம்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்

இந்த புதிய மாடலில் 999சிசி எஞ்சினுக்கு பதிலாக புதிய 1,084 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் அளிக்கும்.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்

இந்த எஞ்சினில் பல அலுமினிய பாகங்களுடன் இலகுவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும். மேனுவல் மாடல் 20.4 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 20.8 கிமீ மைலேஜையும் வழங்கும்.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்

புதிய ஆப்ரிக்கா ட்வின் பைக்கில் ஹோண்டாவின் செலக்ட்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட், 3 லெவல் எலெக்ட்ரானிக் எஞ்சின் பிரேக்கிங், வீலி கன்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்

இந்த பைக்கில் தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. புளூடூத் இணைப்பு வசதி, ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் வசதிகளும் உள்ளன.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்

புதிய ஆப்ரிக்கா ட்வின் பைக்கில் டூர், அர்பன், கிராவல் மற்றும் ஆஃப் ரோடு என நான்குவிதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. தவிரவும், ஓட்டுபவர் விருப்பத்தின் பேரில் இரண்டு டிரைவிங் மோடுகளையும் செட்டிங் செய்ய முடியும்.

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக தேதி விபரம்

மேனுவல் மாடல் 226 கிலோ எடையும், சிவிடி மாடல் 236 கிலோ எடையும் கொண்டது. இந்த மாடலில் 18.8 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக்கில் முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

Most Read Articles
English summary
The all-new Honda CRF1100L Africa Twin will be launched in India on March 5, 2020.
Story first published: Wednesday, February 26, 2020, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X