புதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு!

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, மற்றும் ஃபோர்ஸா 350 மேக்ஸி ஸ்கூட்டர் மாடல்கள அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டு புதிய மேக்ஸி ஸ்கூட்டர்கள் பற்றிய விபரங்கள், படங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு!

இருசக்கர வாகனத் தயாரிப்பில் ஹோண்டா நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஸ்கூட்டர், சாதாரண வகை பைக் முதல் சூப்பர் பைக் என அனைத்து வகை இருசக்கர வாகனங்களையும் தயாரித்து வாடிக்கையாளர்களிடம் அதிக நன்மதிப்பை பெற்றிருக்கிறது.

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு!

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் மிக வலிமையான நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் பிரம்மாண்டத் தோற்றம் கொண்ட மேக்ஸி ரக ஸ்கூட்டர்கள் பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக உள்ளது. ஃபோர்ஸா என்ற குடும்ப வரிசையில் பல்வேறு சிசி எஞ்சின் திறன் கொண்ட மாடல்களில் இந்த ஸ்கட்டரகள் விற்பனை செய்யப்படுகின்றன.

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஃபோர்ஸா வரிசையில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது ஹோண்டா நிறுவனம். அண்மையில் ஃபோர்ஸா 750 என்ற சக்திவாய்ந்த மேக்ஸி ஸ்கூட்டரை ஹோண்டா வெளியிட்டது.

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு!

இதைத்தொடர்ந்து தற்போது ஃபோர்ஸா 125 மற்றும் ஃபோர்ஸா 350 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாடல்களுமே அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு!

ஹோண்டா ஃபோர்ஸா 125, ஃபோர்ஸா 350 ஸ்கூட்டர் மாடல்களில் முழுமையான எல்இடி ஹெட்லைட், ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம், ஸ்மார்ட் சாவி, ஏசிஜி ஸ்டார்ட்டர் வசதி ஆகியவை உள்ளன.

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு!

ஃபோர்ஸா 125 மாடலின் விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், 40 மிமீ வரை கூடுதலாக நகரும் வகையில் இருக்கிறது. யுஎஸ்பி போர்ட் மூலமாக சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு!

இந்த ஸ்கூட்டரில் 124.9 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. யூரோ-5 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான இந்த எ]்சின் அதிகபட்சமாக 14.75 பிஎச்பி பவரையும், 12.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மணிக்கு 108 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு!

புதிய ஃபோர்ஸா 350 ஸ்கூட்டரில் 330சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சினஅ அதிகபட்சமாக 28.8 பிஎச்பி பவரையும், 31.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலானது மணிக்கு 137 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு!

இரண்டு ஸ்கூட்டர்களிலும் முன்புறத்தில் 15 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 14 அங்குல சக்கரமும் இடம்பெர்றிருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. ஃபோர்ஸா 125 ஸ்கூட்டர் 159 கிலோ எடையும், ஃபோர்ஸா 350 ஸ்கூட்டர் 180 கிலோ எடையும் கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
According to reports, Honda Forza 125 and Forza 350 Maxi scooter models is expected to launch in India by end of next year.
Story first published: Monday, October 26, 2020, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X