புதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

ஹோண்டா நிறுவனத்தின் பிரிமீயம் வகை க்ரூஸர் பைக் மாடல்கள் ரிபெல் என்ற குடும்ப வரிசையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரிபெல் வரிசையில் அதிக செயல்திறன் மிக்க மாடலாக ரிபெல் 1100 இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த பைக் கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

ரிபெல் குடும்ப வரிசையில் விற்பனை செய்யப்படும் ரிபெல் 300 மற்றும் ரிபெல் 500 ஆகிய மாடல்களின் டிசைன் அம்சங்கள் இந்த புதிய ஹோண்டா ரிபெல் 1100 பைக்கிலும் அதிக அளவில் கையாளப்பட்டுள்ளது. ட்ரெல்லிஸ் ஃப்ரேம், அழகிய பெட்ரோல் டேங்க், ஒற்றை இருக்கை அமைப்பு, பெரிய சைலென்சர் குழாய் ஆகியவை இதற்கு வலு சேர்க்கின்றன.

புதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா ரிபெல் 1100 பைக்கில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், சிங்கிள் பாட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு, சவுகரியமான பயணத்தை வழங்கும் வகையிலான ரைடிங் பொசிஷ் ஆகியவை இந்த பைக்கிற்கு வலுசேர்க்கின்றன.

புதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த பைக்கில் முன்னோக்கிய ஃபுட் பெக்குகள், உயர்த்தப்பட்ட அமைப்புடன் ஹேண்டில்பார் மற்றும் தாழ்வான இருக்கை அமைப்பு ஆகியவற்றுடன் ஒரு சிறந்த க்ரூஸர் பைக்கிற்கான தகுதிகளை பெற்றுள்ளது. இந்த பைக்கின் இருக்கை தரையிலிருந்து 698 மிமீ உயரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா ரிபெல் 1100 பைக்கின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக இதன் எஞ்சினை குறிப்பிடலாம். ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 1048சிசி பேரலல் ட்வின் எஞ்சின்தான் இந்த பைக்கிலும் உள்ளது. ஆனால், க்ரூஸர் பைக்கிற்கு உரிய அம்சங்களுடன் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. டிசிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடலானது 10 கூடுதல் எடை கொண்டதாக இருக்கும். இதனால், பைக்கின் எடை 220 கிலோவாக இருக்கும்.

புதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா ரிபெல் 1100 பைக்கில் த்ராட்டில் பை ஒயர், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வீலி கன்ட்ரோல் சிஸ்டம், 4 லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் தொழில்நுட்பம், நான்கு விதமான ரைடிங் மோடுகள் ஆகியவையும் இந்த பைக்கின் மிக முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா ரிபெல் 1100 பைக்கில் முன்புறத்தில் 43 மிமீ இன்வெர்டெட் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 330 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 256 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருககிறது. முன்புறத்தில் 18 அங்குல சக்கரமும் பின்புறத்தில் 16 அங்குல சக்கரமும் உள்ளன.

புதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா ரிபெல் 1100 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து இதுவரை தகவல் இல்லை. எனினும், எதிர்காலத்தில் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த பைக் ஹோண்டா நிறுவனத்தின் பிக்விங் மோட்டார்சைக்கிள் ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்படும்.

Most Read Articles

English summary
Honda has unveiled its new Rebel 1100 cruiser motorcycle for the global markets. The new (2021) Honda Rebel 1100 comes packed with a host of features and equipment, a powerful engine based on the Africa Twin and a design similar to its lower displacement siblings in the cruiser lineup.
Story first published: Saturday, November 28, 2020, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X