ரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட புதிய ஷைன் 125 பைக் மாடலை இந்தியாவில் ரூ.67,857 விலையுடன் அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்6 மாற்றத்தால் இந்த பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தையில் சிறப்பாக விற்பனையாகும் 125சிசி பைக் மாடல்களுள் ஷைனும் ஒன்று.

ரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6

இந்த புதிய பிஎஸ்6 ஷைன் பைக், ஹோண்டாவின் அமைதியான புரட்சி என்ற திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பிஎஸ்6 பைக்கில் காப்புரிமை பெற்ற ஏசிஜி ஸ்டார்டர் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6

இந்த தொழிற்நுட்பம் வளைவுகளில் பைக்கில் ஏற்படும் அதிர்வுகளை குறைக்க உதவும். மற்றொரு புதிய ஸ்விங் பேக் வசதி பிஸ்டன் ‘ரன்னிங் ஸ்டார்ட்' செய்வதற்காக என்ஜினை சற்று எதிர்புறமாகவும் சுழல செய்யும். இதனால் என்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு அதிகளவில் ஆற்றலை செலவிட தேவையில்லை.

ரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6

ஸ்டார்ட் சொலினாய்டு, ஆட்டோமேட்டிக் சோக் சிஸ்டமாக அனைத்து நிலைகளிலும் ஒரு-முறை ஸ்டார்டிங் செயல்பாட்டிலேயே செயல்படக்கூடியது. இதன் இயந்திர பாகங்கள் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6

இதில் பிஎஸ்6 தரத்தில் உள்ள 125சிசி என்ஜின் அமைப்பில் ப்ரோகிராம் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் எரிபொருள் திறனை 14 சதவீதம் அதிகமாக வழங்கும். இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணக்கப்பட்டுள்ளது.

ரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6

முன்னதாக இதன் என்ஜின் பிஎஸ்4 தரத்தில் அதிகப்பட்சமாக 10 பிஎச்பி பவரையும் 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வந்தது. மேலும் இதனுடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது. பிஎஸ்6 அப்டேட்டால் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6

மற்ற முக்கியமான அம்சங்களாக என்ஜின் கில் ஸ்விட்ச், பாஸ் ஸ்விட்ச், டிசி ஹெட்லேம்ப், 5 முறைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்புற சஸ்பென்ஷன் மற்றும் ஈக்யூலிசர் உடன் உள்ள ஹோண்டாவின் காம்பி-ப்ரேக் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6

திருத்தியமைக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பெற்றுள்ள இந்த பிஎஸ்6 ஷைன் பைக்கில் அலாய் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ட்ரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான ப்ரேக் அமைப்புகளையும் இந்த பிஎஸ்6 பைக் பெற்றுள்ளது.

ரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6

பின்புற சக்கரத்தில் எச்இடி லோ ரோலிங் ரெசிஸ்டன்ஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது ஹோண்டா ஷைன் பிஎஸ்6 பைக் 5மிமீ அதிகமாக க்ரவுண்ட் கிளியரென்ஸை பெற்றுள்ளது. அதேபோல் வீல்பேஸும் 19மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக சிறப்பான நிலைத்தன்மை பைக்கில் இருக்கும்.

ரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6

சவுகரியமான பயணத்திற்கு இருக்கை 27மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. பைக்கின் கிராஃபிக்ஸ் வேலைப்பாடுகளிலும் ஹோண்டா நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்த புதிய பிஎஸ்6 பைக்கிற்கு கருப்பு, ஜெனி, க்ரே மெட்டாலிக், ரீபல் ரெட் மெட்டாலிக் மற்றும் தடகள நீலம் மெட்டாலிக் போன்ற நிறத்தேர்வுகளை வழங்கியுள்ளது.

ரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6

இவற்றுடன் 6 வருட (நிலையாக 3 ஆண்டுகள் + கூடுதல் தேர்வாக 3 ஆண்டுகள்) உத்தரவாதத்தையும் ஹோண்டா நிறுவனம் ஷைன் பிஎஸ்6 மாடலுக்கு வழங்கியுள்ளது. மாதந்தோறும் கணிசமான விற்பனை எண்ணிக்கையை பெற்றுவரும் ஹோண்டா ஷைன் பைக் தற்போது பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் இதன் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda Shine BS6 Launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X