ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்!

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விலை விபரம் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்!

ஜாவா பைக் மாடல்களுக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கிறது. இதற்கு தக்கவாறு ஜாவா நிறுவனத்தின் ஸ்டான்டர்டு 300 மற்றும் 42 ஆகிய இரண்டு பைக் மாடல்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரண்டு பைக்குகளிலும் 293சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் தற்போது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்லது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஜாவா 300 மற்றும் 42 பைக் மாடல்களில் இருக்கும் பிஎஸ்-6 எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வந்துள்ளது. தனது பாரம்பரிய இரட்டை குழல் சைலென்சர்களையும் தக்க வைத்துள்ளது.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்!

பல பைக் மாடல்களின் பிஎஸ்-6 எஞ்சின் திறனை வெளிப்படுத்துவதில் சிறிது குறைவாக இருக்கிறது. ஆனால், இந்த எஞ்சின் திறனை வெளிப்படுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை. பழைய அளவில் சக்தியை வெளிப்படுத்தும் திறன் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்!

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்!

இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது. மேலும், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் அல்லது டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளர் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஜாவா 300 பிஎஸ்-6 பைக்கின் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.1.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், டியூவல் சேனல் மாடலுக்கு ரூ.1.82 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-4 மாடலைவிட ரூ.8,000 முதல் ரூ.10,000 வரையிலான கூடுதல் விலையில் பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்!

மறுபுறத்தில் ஜாவா 42 பிஎஸ்-6 மாடலின் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடலுக்கு ரூ. 1.60 லட்சமும், டியூவல் சேனல் ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.1.69 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-4 மாடலைவிட ரூ.5,000 வரை கூடுதல் விலையில் பிஎஸ்-6 மாடல்கள் வந்துள்ளன.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Classic Legends Private Limited has launched the Bharat Stage VI (BS6) models of the Jawa 300 and 42 bike models in India
Story first published: Monday, March 2, 2020, 13:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X