2020 கவாஸாகி நிஞ்சா 650 & இசட்650 பிஎஸ்6 பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கியது...

கவாஸாகி இந்தியா நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான அப்டேட் செய்யப்பட்ட நிஞ்சா 650 மற்றும் இசட்650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவை இந்தியாவில் துவங்கியுள்ளது. இதுகுறித்த முழு தகவல்களை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

2020 கவாஸாகி நிஞ்சா 650 & இசட்650 பிஎஸ்6 பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கியது...

முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதால் இந்த இரு மோட்டார்சைக்கிள்களுக்கான புக்கிங்களை நாடு முழுவதும் உள்ள கவாஸாகி நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் ஏற்க ஆரம்பித்துள்ளன. பிஎஸ்6 அப்டேட் உடன் கூடுதலாக மேலும் சில அப்டேட்களை பெற்றுள்ள இசட்650 மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.25- 6.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2020 கவாஸாகி நிஞ்சா 650 & இசட்650 பிஎஸ்6 பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கியது...

மற்றொரு பிஎஸ்6 மோட்டார்சைக்கிளான 2020 நிஞ்சா 650 பைக் ரூ.6.65- 6.79 லட்சத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன்மூலம் இவை இரண்டும் கிட்டத்தட்ட ரூ.55,000 அளவில் விலை உயர்வை பெறவுள்ளன. கவாஸாகியின் இந்த இரு 650சிசி பைக்குகளும் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருந்தது.

2020 கவாஸாகி நிஞ்சா 650 & இசட்650 பிஎஸ்6 பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கியது...

ஆனால் அதற்குள்ளாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ துவங்கியதால் இவற்றின் அறிமுகம் தள்ளிப்போனது. இதில் 2020 இசட்650 பிஎஸ்6 பைக், புதிய இசட்900 மாடலில் இருந்து ஹெட்லேம்ப்பை பெற்றுள்ளது.

2020 கவாஸாகி நிஞ்சா 650 & இசட்650 பிஎஸ்6 பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கியது...

இருப்பினும் இசட்650 மாடலில் இந்த ஹெட்லேம்ப், கூர்மையான தோற்றத்தில் மிகவும் முரட்டுத்தனமாக எல்இடி தரத்தில் உள்ளது. இதனுடன் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள டிஎஃப்டி திரை மற்றும் ரிடியோலஜி மூலமாக பைக்குடன் ஸ்மோர்ட்போனை ப்ளூடூத் மூலமாக இணைக்க முடியும்.

2020 கவாஸாகி நிஞ்சா 650 & இசட்650 பிஎஸ்6 பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கியது...

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 649சிசி இணையான-இரட்டை என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 67.3 பிஎச்பி பவரையும், 6700 ஆர்பிஎம்-ல் 64 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் பிஎஸ்4 தரத்தில் 67.2 பிஎச்பி பவர் மற்றும் 65.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

2020 கவாஸாகி நிஞ்சா 650 & இசட்650 பிஎஸ்6 பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கியது...

2020 கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கில் புதிய டிசைனில் எரிபொருள் டேங்க் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட பின்புற பகுதி உடன் மொத்த பைக்கின் தோற்றமும் புதிய கூர்மையான மற்றும் முரட்டுத்தனமான வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இரட்டை ஹெட்லேம்ப் அமைப்பு தற்போது எல்இடி பல்புகளை கொண்டுள்ளது.

2020 கவாஸாகி நிஞ்சா 650 & இசட்650 பிஎஸ்6 பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கியது...

இதன் 4.3 இன்ச் டிஎஃப் திரையின் மூலமாகவும் ரிடியோலஜி ஆப்-ஐ இணைக்க முடியும். நிஞ்சா 650 பைக்கில் வழங்கப்பட்டுள்ள 649சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 66.4 பிஎச்பி மற்றும் 6700 ஆர்பிஎம்-ல் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தவல்லது. ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கான இதன் இந்த 2020 வெர்சனில் டார்க் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

2020 கவாஸாகி நிஞ்சா 650 & இசட்650 பிஎஸ்6 பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கியது...

மற்றப்படி இந்த இரு 2020 பைக்குகளிலும் டெக்னிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வகையில் இதன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸும், பின்புறத்தில் மோனோஷாக்கும் சஸ்பென்ஷன் அமைப்புகளாக தொடர்ந்துள்ளன. ப்ரேக்கிற்கு இரு சக்கரங்களிலும் பெடல் டிஸ்க் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கின் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

2020 கவாஸாகி நிஞ்சா 650 & இசட்650 பிஎஸ்6 பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கியது...

2020 நிஞ்சா 650 பிஎஸ்6 மாடலுக்கு லைம் க்ரீன் எபோனி மற்றும் பெர்ல் ஃப்ளாட் ஸ்டார்டஸ்ட் வொய்ட் என்ற இரு நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள கவாஸாகி நிறுவனம், இசட்650 பிஎஸ்6 பைக்கை மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளாக் என்ற ஒரே ஒரு பெயிண்ட் அமைப்பில் மட்டும் தான் விற்பனை செய்யவுள்ளது. இவற்றின் டெலிவிரி பணிகள் தற்போதைய லாக்டவுன் முடிவுக்கு வந்த பின் துவங்கவுள்ளது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2020 Kawasaki Ninja 650 & Z650 BS6 Bookings Open In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X