Just In
- 4 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 6 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 8 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 8 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய கவாஸாகி இசட் எச்2 எஸ்இ சூப்பர் பைக் வெளியீடு!
கூடுதல் தொழில்நுட்ப சிறப்புகளுடன் கூடிய கவாஸாகி இசட் எச்2 எஸ்இ சூப்பர் பைக் உலக அளவில் பொது பார்வைக்கு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள் குறித்த தகவகல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

கவாஸாகி நிறுவனத்தின் உயர்தர பிரிமீயம் வகை சூப்பர் பைக் மாடல்களாக எச்2 வரிசை மாடல்கள் உள்ளன. இந்த எச்2 வரிசையில் நேக்கட் ரக வடிவமைப்பு கொண்ட மாடலாக இசட் எச்2 எஸ்இ மாடல் இருந்து வருகிறது. அதாவது, எஞ்சின் உள்ளிட்ட பாகங்கள் மறைப்பு எதுவும் இல்லாமல் திறந்த அமைப்பாக இருப்பதே நேக்கட் ரக மாடலாக குறிப்பிடப்படுகிறது.

2021 மாடலாக வர இருக்கும் புதிய இசட் எச்2 எஸ்இ சூப்பர் பைக்கில் கவாஸாகியின் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் தொழில்நுட்பம் கொண்ட செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டம் உள்ளது. நிகழ்நேர முறையில் சாலை மற்றும் ரைடிங் மோடுக்கு தக்கவாறு சஸ்பென்ஷன் அமைப்பின் செயல்பாடுகள் மாறிக் கொள்ளும்.

இந்த பைக்கில் முன்புறத்தில் ஷோவா நிறுவனத்தின் 43 மிமீ அப்சைடு ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு பிக்கிபேக் ரிசர்வாயர் கொண்ட ஷோவா சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன. ஷோவா நிறுவனத்தின் ஸ்கைஹூக் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்கைஹூக் தொழில்நுட்பம் மூலமாக சஸ்பென்ஷன் அமைப்பானது ஒரு மில்லிசெகண்ட் நேரத்தில் சாலை நிலை மற்றும் வாகனத்தின் வேகத்தை உணர்ந்து கொண்டு அதற்கு தக்கவாறு சிறப்பான நிலைத்தன்மையை வழங்கும் வகையில் மாறிக் கொள்ளும்.

இந்த பைக்கில் மற்றொரு முக்கிய அம்சமாக, பிரேக்கிங் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முன்சக்கரத்தில் பிரெம்போ ஸ்டைல்மா மோனோபிளாக் ரேடியல் மவுண்ட் அமைப்புடன் 4 பிஸ்டன் காலிபர் மற்றும் டியூவல் செமி ஃப்ளோட்டிங் 320மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் கொண்ட 260 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது.

இந்த பைக்கில் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. கவாஸாகியின் இன்டெலிஜென்ட் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், குயிக் ஷிஃப்டர், லான்ச் கன்ட்ரோல், கார்னரிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம், 6 ஆக்சிஸ் ஐஎம்யூ சாதனம், டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் என பல முக்கிய தொழில்நுட்பங்கள் மூலமாக இந்த பைக்கின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றன.

இந்த பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய வண்ணத் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், ஷிஃப்ட் இன்டிகேட்டர், ஓடோ மீட்டர், டியூவல் டிரிப் மீட்டர்கள், எரிபொருள் மானி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. கைப்பிடியில் உள்ள சுவிட்ச் மூலமாக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளை ஓட்டுபவர் பெற முடியும்.

புதிய இசட் எஸ்2 எஸ்இ பைக்கில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை புளூடூத் மூலமாக ஸ்மார்ட்ஃபோனுடன் இணைத்துக் கொள்வதற்கான கனெக்ட்டிவிட்டி வசதியும் உள்ளது. ரிமோட் முறையில் ரைடிங் மோடை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இதற்காக, RIDEOLOGY THE APP என்ற பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் அப்ளிகேஷனும் வழங்கப்படுகிறது.

இந்த பைக்கில் எல்இடி பல்புகள் கொண்ட ஹெட்லைட், டெயில் லைட் ஆகியவை உள்ளன. சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் அமைப்பு , சிறப்பான ரைடிங் பொசிஷன் ஆகியவையும் முக்கிய விஷயங்களாக இருக்கும்.

புதிய கவாஸாகி இசட் எச்2 எஸ்இ பைக்கில் 998சிசி சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 198 பிஎச்பி பவரையும், 137 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்ட்டுளளது. பை டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் மற்றும் ஸ்லிப்-அசிஸ்ட் க்ளட்ச் வசதிகளும் உள்ளன.