டிவிஎஸ் கொடுக்கும் பூஸ்ட்டால் சுறுசுறுப்பு... அடுத்து 2 பைக்குகளுக்கு முன்பதிவை துவங்கியது நார்ட்டன்!

டிவிஎஸ் நிறுவனத்தின் கீழ் வந்துள்ள நார்ட்டன் நிறுவனம் அடுத்து இரண்டு புதிய பைக் மாடல்களை களமிறக்க உள்ளது. இந்த மாடல்களுக்கு ஆன்லைனில் முன்பதிவையும் துவங்கி இருக்கிறது. இந்த பிரிமீயம் பைக் மாடல்களின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டிவிஎஸ் கொடுக்கும் 'பூஸ்ட்'டால் சுறுசுறுப்பு... அடுத்து 2 பைக்குகளுக்கு முன்பதிவை துவங்கியது நார்ட்டன்!

பிரிமீயம் பைக் தயாரிப்பில் பிரபலமான இங்கிலாந்தை சேர்ந்த நார்ட்டன் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இந்த நிலையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் நிறுவனம் நார்ட்டன் நிறுவனத்தை கடந்த ஆண்டு கையகப்படுத்தியது. இதையடுத்து, புதிய முதலீடுகளுடன் வர்த்தகத்தை தூக்கி நிறுத்துவதற்கு தீவிரமாக களமிறங்கி உள்ளது நார்ட்டன் நிர்வாகம்.

டிவிஎஸ் கொடுக்கும் 'பூஸ்ட்'டால் சுறுசுறுப்பு... அடுத்து 2 பைக்குகளுக்கு முன்பதிவை துவங்கியது நார்ட்டன்!

அண்மையில் வி4 ஆர்ஆர் என்ற 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை விரைவில் களமிறக்க உள்ளதாக அறிவித்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய சூப்பர் பைக் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் கொடுக்கும் 'பூஸ்ட்'டால் சுறுசுறுப்பு... அடுத்து 2 பைக்குகளுக்கு முன்பதிவை துவங்கியது நார்ட்டன்!

இதைத்தொடர்ந்து தற்போது அடுத்து இரண்டு ஸ்க்ராம்ப்ளர் வகை பைக் மாடல்களையும் களமிறக்க உள்ளதை நார்ட்டன் உறுதி செய்துள்ளது. அதாவது, இந்த புதிய மாடல்கள் 650சிசி எஞ்சினுடன் வர இருக்கின்றன.

டிவிஎஸ் கொடுக்கும் 'பூஸ்ட்'டால் சுறுசுறுப்பு... அடுத்து 2 பைக்குகளுக்கு முன்பதிவை துவங்கியது நார்ட்டன்!

நார்ட்டன் அட்லஸ் நோமட் 650 மற்றும் அட்லஸ் ரேஞ்சர் 650 என்ற பெயர்களில் இந்த புதிய மாடல்கள் வர இருக்கின்றன. இதில், அட்லஸ் நோமட் 650 பைக் சாதாரண சாலைகள் மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாகவும், ரேஞ்சர் 650 மாடலானது ஆஃப்ரோடு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்க்ராமப்ளர் வகை மாடலாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் கொடுக்கும் 'பூஸ்ட்'டால் சுறுசுறுப்பு... அடுத்து 2 பைக்குகளுக்கு முன்பதிவை துவங்கியது நார்ட்டன்!

2021 மாடலாக வரும் நார்ட்டன் அட்லஸ் நோமட் 650 மற்றும் ரேஞ்சர் 650 ஆகிய இரண்டு மாடல்களிலும் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 650சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமா 84 பிஎச்பி பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டிவிஎஸ் கொடுக்கும் 'பூஸ்ட்'டால் சுறுசுறுப்பு... அடுத்து 2 பைக்குகளுக்கு முன்பதிவை துவங்கியது நார்ட்டன்!

இந்த இரண்டு பைக்குகளையும் வாங்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் தங்களது விருப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்வதற்கான வாய்ப்பை நார்ட்டன் அறிவித்துள்ளது. முன்பதிவு செய்வதற்கு 500 இங்கிலாந்து பவுண்ட்டுகள் புக்கிங் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் கொடுக்கும் 'பூஸ்ட்'டால் சுறுசுறுப்பு... அடுத்து 2 பைக்குகளுக்கு முன்பதிவை துவங்கியது நார்ட்டன்!

நார்ட்டன் வி4 ஆர்ஆர் சூப்பர் பைக் விரைவில் வெளியிடப்பட்டாலும், அடுத்த ஆண்டு பிற்பாதியில்தான் உற்பத்திக்கு செல்லும் என்று தெரிகிறது. அதேபோன்று, இந்த புதிய அட்லஸ் நோமட் 650 மற்றும் ரேஞ்சர் 650 பைக் மாடல்கள் தொடர்ந்து மேம்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக, நார்ட்டன் நிறுவனம் விரைவில் உறுதியானத் தகவல்களை வெளியிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

மேலும்... #நார்ட்டன் #norton
English summary
Norton Motorcycles has confirmed new Atlas 650 scrambler bike models and released online form on the brand's website inviting expressions of interest for the new bike models.
Story first published: Friday, December 4, 2020, 13:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X