'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்!

டிவிஎஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நார்ட்டன் நிறுவனம் விரைவில் தனது புதிய வி4 ஆர்ஆர் சூப்பர் பைக்கை விரைவில் வெளியிட உள்ளது. இந்த புதிய பைக் மாடல் குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்!

இங்கிலாந்தை சேர்ந்த நார்ட்டன் நிறுவனம் பிரிமீயம் பைக் தயாரிப்பில் மிகவும் பாரம்பரியம் மிக்கது. ஆனால், சந்தைப் போட்டி, வர்த்தக்கத்தில் தடுமாற்றம் போன்ற காரணங்களால், மோசமான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், நார்ட்டன் நிறுவனத்தை சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் கையகப்படுத்தியது.

'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்!

மேலும், நார்ட்டன் நிறுவனத்தின் வர்த்தகத்தை தூக்கி நிறுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், டிவிஎஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு முதல் சூப்பர் பைக் மாடலை நார்ட்டன் வெளியிட உள்ளது.

'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்!

இதன்படி, நார்ட்டன் நிறுவனத்தின் புதிய வி4 ஆர்ஆர் சூப்பர் பைக் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய மாடல் வெளியிடப்பட உள்ளதாக நார்ட்டன் நிறுவனத்தின் சிஇஓ ஜான் ரஸ்ஸெல் தெரிவித்துள்ளார்.

'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்!

நார்ட்டன் நிறுவனத்தின் 2021 மாடலாக வரும் வி4 ஆர்ஆர் சூப்பர் பை்கில் 1,200 சிசி வி4 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

இந்த பைக்கில் 7 அங்குல எச்டி திரை கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கும். சாலை நிலைகளுக்கு தக்கவாறு மாற்றுவதற்கான ரைடிங் மோடுகள், ஓலின்ஸ் சஸ்பென்ஷன்கள், பிரெம்போ பிரேக்குகள், கார்பன் ஃபைபர் பாடி என வேற லெவல் அம்சங்களுடன் இந்த புதிய சூப்பர் பைக் வர இருக்கிறது.

'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்!

இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட இருக்கும் இந்த புதிய நார்ட்டன் வி4 ஆர்ஆர் சூப்பர் பைக் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். பாரம்பரியம் மிக்க நார்ட்டன் நிறுவனத்தின் மிக உயரிய அம்சங்கள் கொண்ட பைக் மாடலாக வருவதால், வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

Most Read Articles

மேலும்... #நார்ட்டன் #norton
English summary
Norton Motorcycles is all set to unveil its first motorcycle under its new TVS-ownership. The company CEO, John Russell has confirmed that the brand will unveil their first superbike, the 2021 V4 RR before the end of this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X