2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...!

ஒகினவா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் மேக்ஸி-ஸ்கூட்டர் விரைவில் டெல்லியில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ளது. இந்நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் அறிமுக மாடலை கடந்த 2017ல் அறிமுகப்படுத்தியிருந்தது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...!

ஓகினவாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வேகமாகவும் ஜாலியான பயணத்தையும் தரக்கூடியதாக உள்ளதால் எதிர்பார்த்ததை விட வாடிக்கையாளர்களிடையே வேகமாக பிரபலமாகியுள்ளன. இந்நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தையில் ரூ.40,000லிருந்து ரூ.1.14 லட்சம் வரையில் விற்பனை செய்து வருகிறது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...!

இந்நிலையில் ஒகினவா நிறுவனம் தற்போது புதியதொரு சவாலுக்கு தயாராகியுள்ளது. அதுதான் இந்த புதிய மேக்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம். இந்த ஸ்கூட்டருடன் ஒகி100 என்கிற பெயர் கொண்ட எலக்ட்ரிக் பைக்கும் இந்நிறுவனத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...!

வெளியாகியுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் புகைப்படங்களை பார்க்கும்போது இந்த ஸ்கூட்டர் கிட்டத்தட்ட சுசுகி புர்க்மேன் மேக்ஸி-ஸ்கூட்டரை போல் தோற்றமளிக்கிறது. மேலும் இந்த புகைப்படங்கள் ஆரஞ்ச் நிறத்தில் பெயிண்ட் அமைப்பையும், கூடுதல் சவுகரியத்திற்காக சற்று உயரமாக வடிவமைக்கப்பட்ட பின்புற இருக்கையையும் இந்த ஸ்கூட்டர் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகின்றன.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...!

பெயரில் மேக்ஸி என்கிற வார்த்தையை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பெயருக்கு ஏற்றாற்போல் அளவிலும் பெரியதாகவே உள்ளது. இதனால் உயரமான ஆட்களுக்கு இந்த ஸ்கூட்டர் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

பொதுவாக மிகவும் உயரமானவர்கள் ஸ்கூட்டர்களை வளைவுகளில் இயக்கும்போது அவர்களது கைமுட்டி, ஹேண்டில்பாரில் இடிக்கும். ஆனால் இது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நடக்காது என எதிர்பார்க்கலாம்.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...!

இந்த ஒகினவா க்ரூஸ் மேக்ஸி-எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள வசதிகளை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இந்த ஸ்கூட்டர் அறிமுகத்தின்போது ரீ-ஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் தொழிற்நுட்பத்தை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...!

அதேபோல் இருசக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், முழுவதும் டிஜிட்டலாக மாற்றப்பட்ட இண்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பயன்படுத்தும் வகையிலான இருக்கைகளுக்கு அடியில் சேமிப்பிடம் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் உள்ளிட்டவையும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பாக்கலாம்.

அகற்றக்கூடிய விதத்திலான லித்தியம்-இரும்பு பேட்டரியை பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற இந்த ஸ்கூட்டர், சிங்கிள் சார்ஜில் 150கிமீ தூரம் வரையிலும், அதிகப்பட்சமாக 120kmph வேகத்தில் இயங்கக்கூடியது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...!

மற்ற நாடுகளில் இருந்து பாகங்களாக இந்தியாவில் இறக்குமதி செய்து அசெம்பிள் செய்து இந்த ஸ்கூட்டரை விற்பனை செய்யவுள்ளது. குறிப்பிட்ட சில ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சீனாவில் உள்ள ஜெஜியாங் லுயுவான் என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது. யும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பாக்கலாம்.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...!

விரைவில் ஒகினவா நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒரே ஒரு மேக்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டுவரும் சுசுகி புர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை விட 50மிமீ அதிக நீளமுடையது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...!

இந்திய சந்தையில் கவர்ச்சியான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து விற்பனை செய்துவரும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஒகினவா, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இவி வாகனங்களை அறிமுகப்படுத்த தொடர்ந்து தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.10 லட்சத்தில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: ExpressDrives

Most Read Articles
மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa Electric Maxi Scooter To Debut At Auto Expo 2020: Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X