சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவின் நடுத்தர வகை அட்வென்ச்சர் ரக பைக் மார்க்கெட்டில் சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அதற்கு இணையான தரத்துடன் எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக, அறிமுகம் பல மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது.

சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய பைக் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பைக்கும், இந்தியாவில் வந்துள்ள மாடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.

சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ஆஸ்திரேலியாவில் புதிய சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கானது கருப்பு மற்றும் சிவப்பு வண்ணத் தேர்விலும், வெள்ளை மற்றும் தங்க வண்ண ரிம்கள் கொண்ட வண்ணத் தேர்விலும், சில்வர் மற்றும் நீல வண்ண ரிம்கள் கொண்ட தேர்விலும் வந்தது. ஆனால், இந்தியாவில் வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட பிஎஸ்-4 மாடலில் இருந்து பெரிய டிசைன் மாற்றங்கள் இல்லை. வண்ணத் தேர்வுகள் மட்டுமே புதிதாக மாறி இருக்கின்றன. இந்த பைக்கில் ஸ்டெப் அப் இருக்கை அமைப்பு, சரிவான அமைப்புடைய எரிபொருள் கலன், விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கின் பிஎஸ்6 மாடலில் வி-ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 645சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 62 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த அட்வென்ச்சர் பைக்கில் முன்புறத்தில் 19 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன. பிரிட்ஜ்ஸ்டோன் பேட்லேக்ஸ் அட்வென்ச்சர் ஏ40 டியூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த பைக்கில் முன்புறத்தில் 43 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்களும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் ட்வின் பிஸ்டன் காலிப்ர்கள் கொண்ட 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் கொண்ட 260 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இந்த பைக் 216 கிலோ எடை கொண்டது.

புதிய சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி அட்வென்ச்சர் பைக்கின் பிஎஸ்-6 மாடலுக்கு ரூ.8.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்-4 மாடலைவிட இந்த பிஎஸ்-6 மாடல் ரூ.1.39 லட்சம் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Japanese bike manufacturer Suzuki has launched new V-Strom 650XT bike with BS6 compliant engine in India.
Story first published: Monday, November 23, 2020, 15:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X