கொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்!

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தனது புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு தேதி குறித்துள்ளது ட்ரையம்ஃப் பைக் நிறுவனம். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்!

கொரோனா வைரஸ் வேகம் அனைவரையும் அஞ்சி நடுங்க வைத்துள்ள இந்த வேளையில், ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் வர்த்தக திட்டங்களை ஒத்திப்போட்டு வருகின்றன. கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார், பைக் மாடல்களின் அறிமுகத்தை பல முன்னணி நிறுவனங்கள் தள்ளி வைத்து வருகின்றன.

கொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்!

ஆனால், சில நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான வழிமுறைகளை கையில் எடுத்துள்ளன. சில நிறுவனங்கள் செய்திக் குறிப்பு மூலமாக ஆட்டோமொபைல் துறைக்கு அறிமுகத் தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றன.

MOST READ: 2021 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய அசத்தலான டீசர் புகைப்படம் வெளியீடு..!

கொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்!

அந்த வகையில், தனது புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக்கின் அறிமுகத்திற்கு ட்ரையம்ஃப் நிறுவனம் தேதி குறித்துவிட்டது. வரும் 22ந் தேதி ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் மாடலை இந்தியாவில் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக அறிமுகம் செய்வதற்கு ட்ரையம்ஃப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்!

கடந்த மாதம் 25ந் தேதியே இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ட்ரையம்ஃப் தேதி குறித்து வைத்திருந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக, ஒத்தி போட்டது. எனினும், ஆன்லைன் முறையில் விற்பனையை துவங்கிவிடலாம் என்ற முடிவில் இந்த முறை திடமாக அறிமுகத் தேதியை குறித்துவிட்டதாக நம்பப்படுகிறது.

MOST READ: புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட்.. ஆச்சரியப்படுத்திய மாருதி...

கொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்!

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக்கில் ஏராளமான புதிய அம்சங்களுடன் வசீகரமாக இருக்கிறது. இந்த பைக்கில் இரண்டு எல்இடி ஹெட்லைட் கள்ஸ்ட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுனூடாக பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹெட்லைட் அமைப்பே மிரட்டலாக இருக்கிறது.

கொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்!

இந்த பைக்கில் மறு வடிவமைப்பு பெற்ற புதிய பாடி பேனல்கள் மற்றும் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மூலமாக புதிய பொலிவுடன் காட்சி அளிக்கிறது. புதிய டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. புளூடூத் இணைப்பு, கோ புரோ கேமரா கன்ட்ரோல் வசதியுடன் இருப்பது முக்கிய விஷயமாக இருக்கிறது.

MOST READ: 'துளியும் கவலை வேண்டாம்'!... இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஃபியட் கொடுத்த உறுதிமொழி

கொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்!

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக்கில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று சிலிண்டர்கள் அமைப்புடைய 765 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 79 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

கொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்!

இந்த எஞ்சின் ஆரம்ப நிலையிலும், நடுத்தர நிலையிலும் அதிக செயல்திறனை காட்டும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், அப்சைடு டவுன் குயிக் ஷிஃப்டர் வசதி இடம்பெற்றுள்ளது.

MOST READ: குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

கொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்!

இந்த பைக்கில் ஆர்ஸ் மாடலில் ரேஸ் டிராக்குகளில் பயன்படுத்துவதற்கான பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஓலின்ஸ் எஸ்டிஎக்ஸ்40 மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

கொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்!

இதுதவிர்த்து, முன்சக்கரத்தில் பிரெம்போ நிறுவனத்தின் 310 மிமீ ஃப்ளோட்டிங் டிஸ்க்குளுடன் கூடிய பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

கொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்!

தற்போது விற்பனையில் இருக்கும் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் ரூ.11.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடல் ரூ.25,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கேடிஎம் 790 ட்யூக், டுகாட்டி மான்ஸ்ட்டர் 821, சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் 750 உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
British premium bike maker, Triumph will launch the new Street Triple RS In India on April 22, 2020.
Story first published: Friday, April 17, 2020, 17:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X