ஏப்ரலில் இந்தியாவிற்கு வரும் ட்ரையம்ப்பின் புதிய டைகர் 900சிசி பைக்...

ட்ரையம்ப் நிறுவனம் புதிய டைகர் 900 மாடல் பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவர தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த புதிய பைக்கின் அறிமுகம் வருகிற ஏப்ரல் மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

ஏப்ரலில் இந்தியாவிற்கு வரும் ட்ரையம்ப்பின் புதிய டைகர் 900சிசி பைக்...

ஆனால் ஏப்ரல் மாதம் முதலாவதாக டைகர் 900 பைக்கின் எந்த வேரியண்ட் அறிமுகமாகவுள்ளது என்பது தெரியவரவில்லை. நமக்கு தெரிந்தவரை இதன் டாப் வேரியண்ட்களான ஜிடி ப்ரோ மற்றும் ரேலி ப்ரோவும் இவற்றிற்கு அடுத்த நிலையில் உள்ள ரேலி வேரியண்ட்டும் அறிமுகமாகலாம்.

ஏப்ரலில் இந்தியாவிற்கு வரும் ட்ரையம்ப்பின் புதிய டைகர் 900சிசி பைக்...

மேலும் ட்ரையம்ப் டைகர் 900 பைக் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.13 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பிஎஸ்6-க்கு இணக்கமான 888சிசி இன்லைன்-3-சிலிண்டர் என்ஜின் 1-3-2 என்ற வரிசையில் ஆற்றலை வெளிப்படுத்தும்.

ஏப்ரலில் இந்தியாவிற்கு வரும் ட்ரையம்ப்பின் புதிய டைகர் 900சிசி பைக்...

இந்த டைகர் மாடலின் முந்தைய தலைமுறை பைக்கானது 800சிசி என்ஜினுடன் 1-2-3 என்ற வரிசையில் ஆற்றலை பைக்கிற்கு வழங்கி வந்தது. இருப்பினும் இந்த பழைய என்ஜின் வெளிப்படுத்திய 95 பிஎச்பி ஆற்றலை தான் இந்த பிஎஸ்6 என்ஜினும் வெளிப்படுத்தவுள்ளது.

ஏப்ரலில் இந்தியாவிற்கு வரும் ட்ரையம்ப்பின் புதிய டைகர் 900சிசி பைக்...

ஆனால் வெளிப்படுத்தப்படும் டார்க் திறனில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது முந்தைய 800சிசி என்ஜினை விட 8 என்எம் அதிகமாக 87 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கும். அதேபோல் 8050 ஆர்பிஎம் வரை செல்லாமல் 7250 ஆர்பிஎம்-லேயே இந்த டார்க் திறனை பிஎஸ்6 என்ஜின் வெளிப்படுத்திவிடும்.

ஏப்ரலில் இந்தியாவிற்கு வரும் ட்ரையம்ப்பின் புதிய டைகர் 900சிசி பைக்...

என்ஜின் பைக்கிற்கு வழங்கும் எரிபொருள் திறனை ரைடர் 7.0 இன்ச் வண்ண டிஎஃப்டி திரையின் மூலம் அறிய முடியும். குறைவான வேகத்தில் இரண்டு சிலிண்டரில் இயங்கும்போதும் அதன் என்ஜின் செயல்திறனை திரையில் இந்த 900சிசி பைக் காட்டும்.

ஏப்ரலில் இந்தியாவிற்கு வரும் ட்ரையம்ப்பின் புதிய டைகர் 900சிசி பைக்...

7.0 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் டாப் வேரியண்ட்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. விலை குறைவான டைகர் 900 மாடல்களுக்கு 5.0 இன்ச்சில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் க்ரூஸர் கண்ட்ரோலும் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் இந்தியாவிற்கு வரும் ட்ரையம்ப்பின் புதிய டைகர் 900சிசி பைக்...

டாப் வேரியண்ட்களான ஜிடி-க்கும் ரேலி ப்ரோ-க்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. அதாவது ஜிடி வேரியண்ட்டில் மார்சோக்சி சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவே ரேலி வெர்சனில் ஷோவா சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் இந்தியாவிற்கு வரும் ட்ரையம்ப்பின் புதிய டைகர் 900சிசி பைக்...

ப்ரேக்கிங் பணியை இரண்டிலும் ப்ரெம்போ ஸ்டைல்மா காலிஃபர்கள் கவனிக்கின்றன. இந்த ப்ரேக்கிங் சிஸ்டம் முதன்முதலாக டுகாட்டி பணிகளே வி4 பைக்கில் அறிமுகமாகியிருந்தது. புதிய டைகர் 900 பைக்கில் மிக முக்கியமான அப்டேட்டாக எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கூடுதலாக இஎம்யூ அடிப்படையிலான ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் இந்தியாவிற்கு வரும் ட்ரையம்ப்பின் புதிய டைகர் 900சிசி பைக்...

இந்த சிஸ்டம் கார்னரிங் ஏபிஎஸ்-ஐ காண்டினென்டல் உடன் பெற்றுள்ளது. இதனுடன் மழை, சாலை, ஸ்போர்ட், ரைடர், ஆப்-ரோடு மற்றும் ஆப்-ரோடு ப்ரோ மற்றும் பை-டைரக்‌ஷனல் விரைவான-ஷிஃப்டர் என்ற 6 விதமான ரைடிங் மோட்களையும் கொண்டுள்ளது.

ஏப்ரலில் இந்தியாவிற்கு வரும் ட்ரையம்ப்பின் புதிய டைகர் 900சிசி பைக்...

ட்ரையம்ப் நிறுவனத்தின் இந்த புதிய டைகர் 900 பைக் மாடல் முதன்முதலாக கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தின் ஹிங்க்லே நகரில் உள்ள ட்ரையம்ப் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் மூலம் உலக சந்தைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் விலை இங்கிலாந்தில் 9,500 பவுண்ட்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8.85 லட்சம்) தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Triumph’s All-new Tiger 900 Is Coming To India In April
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X