புதிய பைக்கின் பெயருக்கு டிரேட்மார்க் பெற்றது டிவிஎஸ்... முழு விபரம்!

புதிய பைக்கிற்கான பெயரை பதிவு செய்து வணிக ரீதியில் பயன்படுத்துவதற்கான டிரேட்மார்க் உரிமையை டிவிஎஸ் பெற்றிருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய பைக்கிற்கான பெயரை டிரேட்மார்க் செய்தது டிவிஎஸ்... முழு விபரம்!

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், புதிய பைக்கிற்கான பெயரை பதிவு செய்து டிரேட்மார்க் உரிமை பெற்றிருக்கிறது.

புதிய பைக்கிற்கான பெயரை டிரேட்மார்க் செய்தது டிவிஎஸ்... முழு விபரம்!

டிவிஎஸ் ரோனின் (TVS Ronin) என்ற பெயரை தனது புதிய பைக்கிற்கு வணிக ரீதியில் பயன்படுத்துவதற்கான டிரேட்மார்க் உரிமையை டிவிஎஸ் மோட்டார் பெற்றிருக்கும் ஆவணத்தை ரஷ்லேன் தளம் வெளியிட்டு இருக்கிறது.

புதிய பைக்கிற்கான பெயரை டிரேட்மார்க் செய்தது டிவிஎஸ்... முழு விபரம்!

இந்த ஆண்டு துவக்கத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த புதிய பெயருக்கு சில தினங்களுக்கு முன் பயன்படுத்தும் உரிமை கிடைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த பெயர் எந்த மாடலுக்கு பயன்படுத்தப்படும் என்பதில் இன்னமும் சந்தேகம் நிலவுகிறது.

புதிய பைக்கிற்கான பெயரை டிரேட்மார்க் செய்தது டிவிஎஸ்... முழு விபரம்!

எனினும், அண்மையில் வந்த தகவல்களின்படி, புதிய 310சிசி மாடலை அறிமுகப்படுத்தும் பணிகளில் டிவிஎஸ் மோட்டார் ஈடுபட்டுள்ளது. இது அட்வென்ச்சர் டூரர் வகை மாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பைக்கிற்கான பெயரை டிரேட்மார்க் செய்தது டிவிஎஸ்... முழு விபரம்!

பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் மற்றும் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்குகளின் அடிப்படையிலான அட்வென்சச்ர் பைக் மாடலாக இருக்கும் என்பது கணிப்பாக உள்ளது.

புதிய பைக்கிற்கான பெயரை டிரேட்மார்க் செய்தது டிவிஎஸ்... முழு விபரம்!

அண்மையில்தான் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் பிஎஸ்6 எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்டது. இந்த பைக்கில் இருக்கும் 312சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் 33.5 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு வழங்கப்படுகிறது. இதே எஞ்சின் கியர்பாக்ஸ் மற்றும் முக்கிய பாகங்களை புதிய டிவிஎஸ் பைக் பகிர்ந்து கொள்ளும்.

புதிய பைக்கிற்கான பெயரை டிரேட்மார்க் செய்தது டிவிஎஸ்... முழு விபரம்!

அதேநேரத்தில், கடந்த 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த ஸெப்லின் என்ற க்ரூஸர் பைக் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் புதிய பைக் வர இருப்பதாகவும், அந்த பைக்கிற்கு இந்த பெயர் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

புதிய பைக்கிற்கான பெயரை டிரேட்மார்க் செய்தது டிவிஎஸ்... முழு விபரம்!

இதனிடையே, இங்கிலாந்தை சேர்ந்த நார்ட்டன் நிறுவனத்தையும் டிவிஎஸ் மோட்டார் தனது துணை நிறுவனத்தின் மூலமாக கையகப்படுத்தி உள்ளது. எனவே, எதிர்காலத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது பிராண்டில் மிகவும் சக்திவாய்ந்த பைக்குகளை களமிறக்குவதற்கான வாய்ப்பை பெறும் சூழலும் உள்ளது.

புதிய பைக்கிற்கான பெயரை டிரேட்மார்க் செய்தது டிவிஎஸ்... முழு விபரம்!

டிவிஎஸ் பிராண்டில் வரும்போது நிச்சயம் விலை மிக சவாலாக நிர்ணயிக்கப்படும். எனவே, இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக ஆவல் நிலவுகிறது. அடுத்த சில மாதங்களில் டிவிஎஸ் ரோனின் பெயர் எந்த பைக்கிற்கு பயன்படுத்தப்படும் என்ற விபரம் வெளிவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதலாம்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motor Company is known to be working on introducing a new motorcycle in the Indian market. The new TVS motorcycle is expected to go on sale in India sometime early next year. Ahead of its launch in the Indian market, Rushlane has released the trademark application of the new product by TVS.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X