சர்வதேச சந்தைக்கு வருகிறது யமஹாவின் புதிய க்ரூஸர் ரக பைக்...

யமஹா நிறுவனத்தின் புதிய தயாரிப்பு பைக் மாடலான போல்ட் க்ரூஸரை பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் காண்போம்.

சர்வதேச சந்தைக்கு வருகிறது யமஹாவின் புதிய க்ரூஸர் ரக பைக்...

வி-ட்வின் என்ஜின் ஆற்றலின் மூலமாக இயங்கவுள்ள இந்த க்ரூஸர் ஸ்டைல் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் வரும் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய போல்ட் பைக், தற்போதைய மாடலில் இருந்து பெரியளவில் எந்த தோற்ற மாற்றத்தையும் பெறவில்லை.

சர்வதேச சந்தைக்கு வருகிறது யமஹாவின் புதிய க்ரூஸர் ரக பைக்...

இதனால் இந்த புதிய பைக் வழக்கமான ரெட்ரோ-பாப்பர் தோற்றத்தில் தான் காட்சியளிக்கிறது. சிறிய அளவிலான கிராஃபிக்ஸ்களுடன் 13-லிட்டர் பெட்ரோல் டேங்கை கொண்டுள்ள இந்த பைக்கில் 941சிசி வி-ட்வின், ஏர்-கூல்டு, 4-வால்வு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைக்கு வருகிறது யமஹாவின் புதிய க்ரூஸர் ரக பைக்...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 54 பிஎச்பி பவரையும், 3000 ஆர்பிஎம்-ல் 80 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

சர்வதேச சந்தைக்கு வருகிறது யமஹாவின் புதிய க்ரூஸர் ரக பைக்...

புதிய போல்ட் பைக்கில் ஒரே-துண்டாக எல்இடி டெயில்லைட்டை வழங்கியுள்ள யமஹா நிறுவனம் ரெட்ரோ-ஸ்டைலில் டர்ன் இண்டிகேட்டர்களை பொருத்தியுள்ளது. தரையில் இருந்து இருக்கையின் உயரம் மிகவும் குறைவாக 690மிமீ-ல் கொடுக்கப்பட்டுள்ளதால், உயரம் குறைவான ரைடர்களும் போல்ட் க்ரூஸர் மாடலை எளிதாக ஓட்டலாம்.

சர்வதேச சந்தைக்கு வருகிறது யமஹாவின் புதிய க்ரூஸர் ரக பைக்...

ரைடர்கள் மோட்டார்சைக்கிள் ரைடிங்கை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க, ரைடிங் எர்கோனோமிக்ஸ் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இந்த பைக்கில் முழு-டிஜிட்டலில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் உள்ளது. கவனிக்கத்தக்க மாற்றமாக 2020 யமஹா போல்ட் பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட்டில் வேறுப்பட்ட பொஷிசனில் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைக்கு வருகிறது யமஹாவின் புதிய க்ரூஸர் ரக பைக்...

மேலும் யமஹா நிறுவனம் 2020 போல்ட் பைக்கிற்கு பர்ப்ளிஷ் ப்ளூ மெட்டாலிக் நிறத்தேர்வை கூடுதலாக வழங்கியுள்ளது. மற்றப்படி புதிய போல்ட் மாடல் தற்போதைய தலைமுறை போல்ட் பைக்கில் இருந்து எந்த மாற்றத்தையும் பெறவில்லை. புதிய யமஹா போல்ட் ஸ்டாண்டர்ட் & ஆர் என்ற இரு வேரியண்ட்களில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.

சர்வதேச சந்தைக்கு வருகிறது யமஹாவின் புதிய க்ரூஸர் ரக பைக்...

இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஸ்போக் சக்கரங்களுடனும், ஆர் வேரியண்ட் வார்ப்பு சக்கரங்களுடனும் காட்சியளிக்கும். அதேபோல் போல்ட் ஆர் வேரியண்ட்டின் பின் சஸ்பென்ஷனில் தங்க நிறம் ஹைலைட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. இரு வேரியண்ட்களிலும் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் நிலையாக வழங்கப்படவுள்ளது.

சர்வதேச சந்தைக்கு வருகிறது யமஹாவின் புதிய க்ரூஸர் ரக பைக்...

கருப்பு மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கும் யமஹா போல்ட் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் விலை 9,79,000 யென் ஆக (இந்திய மதிப்பில் ரூ.6.94 லட்சம்) நிர்ணயிக்கப்படவுள்ளது. புதியதாக சேர்க்கப்பட்டுள்ள பர்ப்லிஷ் ப்ளூ மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கவுள்ள போல்ட் ஆர் வேரியண்ட் இந்திய ரூபாய் மதிப்பில் 7.26 லட்சத்தை விலையாக பெறவுள்ளது. இந்த இரு வேரியண்ட்களும் ஜப்பானில் வருகிற ஜூன் 18ஆம் தேதி முதல் விறபனையை துவங்கவுள்ளன.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
New Yamaha Bolt cruiser revealed, to go on sale internationally in June
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X