புதிய உச்சத்தில் இருசக்கர வாகன விற்பனை... அடேங்கப்பா இத்தனை சதவீத வளர்ச்சியா! பொறாமைபட வைத்த டிவிஎஸ்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டு நவம்பரில் புதிய விற்பனை இலக்கை டிவிஎஸ் நிறுவனம் தொட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

புதிய உச்சத்தில் இருசக்கர வாகன விற்பனை... அடேங்கப்பா இத்தனை சதவீத வளர்ச்சியா! பொறாமைபட வைத்த டிவிஎஸ்!

கடந்த நவம்பர் மாதம் விற்பனையான புதிய வாகனங்களைப் பற்றிய விபரம் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்த புதிய தகவலின்படி பார்க்கையில் புது வாகனங்களின் விற்பனைக் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது சூடுபிடித்திருப்பதை நம்மால் உணர முடிகின்றது.

புதிய உச்சத்தில் இருசக்கர வாகன விற்பனை... அடேங்கப்பா இத்தனை சதவீத வளர்ச்சியா! பொறாமைபட வைத்த டிவிஎஸ்!

அதாவது, நடப்பாண்டின் தொடக்கத்தில் காணப்பட்ட விற்பனை வறட்சி தற்போது மிகப் பெரிய அளவில் குறைந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, கொரோனாவால் நடைமுறைக்கு வந்த பொதுமுடக்க காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் பல மடங்கு விற்பனை வளர்ச்சியை 2020 நவம்பர் மாதம் பெற்றிருக்கின்றது.

புதிய உச்சத்தில் இருசக்கர வாகன விற்பனை... அடேங்கப்பா இத்தனை சதவீத வளர்ச்சியா! பொறாமைபட வைத்த டிவிஎஸ்!

இதற்கு டிவிஎஸ் நிறுவனம் பெற்றிருக்கும் விற்பனை வளர்ச்சியே முக்கிய சான்று. தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ், செவ்வாய் கிழமை (1 டிசம்பர்) அன்று அதன் சேல்ஸ் ரிப்போர்ட்டை வெளியிட்டது. இந்த தகவலின்படி, கடந்த 2019 டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டு நவம்பரில் 21 சதவீத விற்பனை வளர்ச்சியை அந்த நிறுவனம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

புதிய உச்சத்தில் இருசக்கர வாகன விற்பனை... அடேங்கப்பா இத்தனை சதவீத வளர்ச்சியா! பொறாமைபட வைத்த டிவிஎஸ்!

2020 நவம்பரில் அந்த நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3,22,709 யூனிட் புதிய வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. அதுவே, 2019 நவம்பர் மாதத்தில் பார்த்தோமேயானால் 2,66,582 யூனிட் வாகனங்களையே அது விற்பனைச் செய்திருந்தது. இது இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையாகும்.

புதிய உச்சத்தில் இருசக்கர வாகன விற்பனை... அடேங்கப்பா இத்தனை சதவீத வளர்ச்சியா! பொறாமைபட வைத்த டிவிஎஸ்!

இதேபோன்று, விழா மாதமான அக்டோபரிலும் டிவிஎஸ் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக 3,94,724 யூனிட் புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. அதுவே, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 3,23,368 யூனிட் வாகனங்களையே அது விற்பனைச் செய்திருந்தது.

புதிய உச்சத்தில் இருசக்கர வாகன விற்பனை... அடேங்கப்பா இத்தனை சதவீத வளர்ச்சியா! பொறாமைபட வைத்த டிவிஎஸ்!

இவ்வாறு, கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் நல்ல விற்பனை விகிதத்தைப் பெற்ற வண்ணம் இருக்கின்றது. தற்போது விற்பனையாகியிருக்கும் ஒட்டுமொத்த யூனிட்டுகளில் 3,11,519 யூனிட்டுகள் மட்டுமே இருசக்கர வாகனத்துடையதாகும். மீதமிருப்பவை மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையாகும்.

புதிய உச்சத்தில் இருசக்கர வாகன விற்பனை... அடேங்கப்பா இத்தனை சதவீத வளர்ச்சியா! பொறாமைபட வைத்த டிவிஎஸ்!

இதில், இருசக்கர வாகன விற்பனை வளர்ச்சியை மட்டும் கடந்த வருட நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிட்டு பார்த்தால், 25 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருப்பதை நம்மால் அறிய முடியும். கடந்த ஆண்டு நவம்பரில் 2,49,350 யூனிட்டுகளை மட்டுமே அது விற்பனைச் செய்திருந்தது. இது உள் மற்றும் வெளிநாடு சந்தையில் விற்பனைச் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையாகும்.

புதிய உச்சத்தில் இருசக்கர வாகன விற்பனை... அடேங்கப்பா இத்தனை சதவீத வளர்ச்சியா! பொறாமைபட வைத்த டிவிஎஸ்!

உள்நாட்டு சந்தையில் 2,47,749 யூனிட் வாகனங்கள் விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த வருட நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 30 சதவீத வளர்ச்சியாகும். கடந்த 2019ம் ஆண்டில் 1,91,222 யூனிட் இருசக்கர வாகனங்களை மட்டுமே அது விற்பனைச் செய்திருந்தது.

புதிய உச்சத்தில் இருசக்கர வாகன விற்பனை... அடேங்கப்பா இத்தனை சதவீத வளர்ச்சியா! பொறாமைபட வைத்த டிவிஎஸ்!

மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் என விற்பனையைப் பிரித்து பார்த்தால், 2019 நவம்பர் மாதத்தைக்காட்டிலும் மோட்டார்சைக்கிள் 1,33,531 யூனிட்டுகளுக்கான விற்பனையைப் பெற்று 26 சதவீத வளர்ச்சியையும், ஸ்கூட்டர்கள் 1,05,963 யூனிட்டுகளுக்கான விற்பனையைப் பெற்று 26 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருக்கின்றன.

புதிய உச்சத்தில் இருசக்கர வாகன விற்பனை... அடேங்கப்பா இத்தனை சதவீத வளர்ச்சியா! பொறாமைபட வைத்த டிவிஎஸ்!

ஏற்றுமதியைப் பொருத்தவரை பெரிய வளர்ச்சியை இந்த நிறுவனம் பெறவில்லை. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சொற்பளவிலான எண்ணிக்கையிலேயே விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. கடந்த வாரம் நிவர் புயலால் ஏற்றுமதி பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. வாகனங்களின் ஏற்றுமதி குறைவாக தெண்படுவதற்கு இதுவும் ஓர் காரணம் ஆகும்.

புதிய உச்சத்தில் இருசக்கர வாகன விற்பனை... அடேங்கப்பா இத்தனை சதவீத வளர்ச்சியா! பொறாமைபட வைத்த டிவிஎஸ்!

இருப்பினும், கடந்த காலங்களைக் காட்டிலும் டிவிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டு நவம்பரில் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இது அந்த நிறுவனத்திற்கு நல்ல ஊக்கத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Bike Sales Report For November 2020: TVS Motor Company Register 21% Growth In Yearly Sales. Read In Tamil.
Story first published: Tuesday, December 1, 2020, 20:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X