லீட்-அமில பேட்டரி வாகன விற்பனையை கைவிடும் ஒகினவா... இந்த திடீர் முடிவிற்கான காரணம் என்ன தெரியுமா?

ஒகினவா நிறுவனம் லீட் ஆசிட் பேட்டரி வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை கை விட இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.

லீட்-அமில பேட்டரி வாகன விற்பனையை கைவிடும் ஒகினவா... இந்த திடீர் முடிவிற்கான காரணம் என்ன தெரியுமா?

மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஒகினவா தனது லீட்-அசிட் பேட்டரிகளைக் கொண்ட மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனையில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இந்நிறுவனம், இந்தியாவில் மலிவு விலையில் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது.

லீட்-அமில பேட்டரி வாகன விற்பனையை கைவிடும் ஒகினவா... இந்த திடீர் முடிவிற்கான காரணம் என்ன தெரியுமா?

இந்த நிலையிலேயே தனது இருசக்கர மின்சார வாகனங்களின் தரத்தை உயர்த்தும் விதமாக இந்த அறிவிப்பை ஒகினவா வெளியிட்டிருக்கின்றது. லித்தியம்-அயன் பேட்டரி கொண்ட தயாரிப்புகளின் உற்பத்தியை ஊக்குவிக்கின்ற வகையில் இந்த அறிவிப்பை அது வெளியிட்டுள்ளது.

லீட்-அமில பேட்டரி வாகன விற்பனையை கைவிடும் ஒகினவா... இந்த திடீர் முடிவிற்கான காரணம் என்ன தெரியுமா?

ஒகினாவா நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதித்த புதிதில் லீட்-அசிட் பேட்டரிகளையே அதன் மின்சார இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அவ்வப்போது லித்தியம் அயன் பேட்டரிகள் கொண்ட வாகனங்களை அது அறிமுகப்படுத்தியது. ஆகையால், இந்நிறுவனத்தின்கீழ் இரு தரத்திலான பேட்டரி வாகனங்களுமே கிடைத்து வந்தன.

லீட்-அமில பேட்டரி வாகன விற்பனையை கைவிடும் ஒகினவா... இந்த திடீர் முடிவிற்கான காரணம் என்ன தெரியுமா?

இதற்கே ஒகினாவா தற்போது முற்று புள்ளி வைத்திருக்கின்றது. லீட் ஆசிட் பேட்டரி கொண்ட வாகனங்களைக் காட்டிலும், லித்தியம் அயன் பேட்டரிக் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கே நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதுவே, லீட் ஆசிட் பேட்டரி கொண்ட வாகனங்களின் விற்பனையை ஒகினவா நிறுத்தும் முடிவிற்கு காரணமாக இருக்கின்றது.

லீட்-அமில பேட்டரி வாகன விற்பனையை கைவிடும் ஒகினவா... இந்த திடீர் முடிவிற்கான காரணம் என்ன தெரியுமா?

இதுமட்டுமின்றி, விரைவில் சார்ஜாகும் திறன் மற்றும் நீண்டு உழைக்கும் திறன் உள்ளிட்டவற்றை லித்தியம் அயன் பேட்டரிகள் கொண்டிருக்கின்றன. இதுவே மக்கள் அதிகம் லித்தியம் அயன் பேட்டரிகளை விரும்ப காரணமாக இருக்கின்றது. அதேசமயம், தற்போது வரை ஒகினவா நிறுவனம் 34 ஆயிரம் யூனிட் லீட் ஆசிட் பேட்டரி கொண்ட மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்திருக்கின்றது.

லீட்-அமில பேட்டரி வாகன விற்பனையை கைவிடும் ஒகினவா... இந்த திடீர் முடிவிற்கான காரணம் என்ன தெரியுமா?

இந்த நிறுவனம் ஒட்டுமொத்தமாக 74,500 வாகனங்களை விற்பனைச் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் 90 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்பனைச் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa Discontinuous Lead-Acid Battery Pack Based e-Scooters In India. Read In Tamil.
Story first published: Thursday, December 10, 2020, 17:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X