மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் !

மின்சார வாகனங்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் வலுவான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில், எதிர்காலத்தில் மின்சார பைக்குகளுக்கும் அதிக வர்த்தக வளம் இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் விரைவில் அறிமுகமாகிறது

இதனால், எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டிலும் புதிய மாடல்களை களமிறக்குவதற்கு பல நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், மின்சார ஸ்கூட்டர்கள் மூலமாக வாடிக்கையாளர்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் ஒகினவா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை விரைவில் களமிறக்க உள்ளது.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் விரைவில் அறிமுகமாகிறது

வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தனது ஒகி100 எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஒகினவா திட்டமிட்டுள்ளதாக ஸிக்வீல்ஸ் தள செய்தி தெரிவிக்கிறது.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் விரைவில் அறிமுகமாகிறது

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் மாடலானது கடந்த 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தயாரிப்புக்கு உகந்த அம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த பைக்கில் உள்ள பேட்டரியை கழற்றி மாட்டும் வசதியுடன் வர இருப்பது மிக முக்கிய அம்சமாக இருக்கிறது. சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியை உடனடியாக மாட்டிக் கொண்டு பயணத்தை தொடரலாம்.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் விரைவில் அறிமுகமாகிறது

மேலும், பிரதமர் மோடியின் Vocal For Local பிரச்சாரத்திற்கு தக்கவாறு, இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கை 100 சதவீத உள்நாட்டு உதிரிபாகங்களுடன் உருவாக்கி இருப்பதாக ஒகினவா தெரிவித்துள்ளது. 100 சதவீத உள்நாட்டு உதிரிபாகங்களுடன் வரும் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலாகவும் பெருமிதத்துடன் தெரிவிக்கிறது ஒகினவா.

உள்நாட்டு உதிரிபாகங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் தயாரிப்புப் பணிகள் நடந்ததாலேயே, இதன் அறிமுகம் தள்ளிப் போய் வருகிறது.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் விரைவில் அறிமுகமாகிறது

புதிய ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் ரூ.1 லட்சத்தை ஒட்டிய விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ரிவோல்ட் ஆர்வி400 பைக் மாடலுக்கு மிக நேரடி போட்டியாக அமையும். பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் சிறப்பான கடன் திட்டங்களை வழங்குவதற்கும் ஒகினவா திட்டமிட்டுள்ளது.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் விரைவில் அறிமுகமாகிறது

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக்கில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 2.5 kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு 100 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது. ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் விரைவில் அறிமுகமாகிறது

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் இருந்தன. ஆனால், தற்போது விற்பனைக்கு வரும் மாடலில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், மோனோ ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றிருக்கும். இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும், சிபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கும்.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் விரைவில் அறிமுகமாகிறது

எல்இடி விளக்குகள், ஸ்மார்ட்ஃபோன் கனெகெட்டிவிட்டி வசதி, ஜியோ ஃபென்சிங் வசதி, பைக்கின் இருப்பிடத்தை கண்காணிக்கும் வசதி உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது. 125சிசி பெட்ரோல் பைக்குகளுக்கு நிகரான செயல்திறனை வழங்கும்.

Most Read Articles
மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa will be launching its first electric motorcycle in the country called the Oki100. Jeetender Sharma, Managing Director, Okinawa Scooters, has confirmed that the motorcycle will be arriving sometime during the festive season this year.
Story first published: Friday, September 25, 2020, 11:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X