சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

ஒகினவா நிறுவனத்தின் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக் ஒன்று இந்திய மார்க்கெட்டை அசத்த வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இந்த வரிசையில் இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வந்தன. குறிப்பாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், மத்திய அரசு அதீத ஆர்வம் காட்டி வந்தது.

சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

இந்தியாவின் ஒரு சில முக்கியமான பிரச்னைகளுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வு என்பதே இதற்கு காரணம். இந்தியாவின் பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்களே முக்கியமான காரணமாக இருக்கின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு விரும்புகிறது.

சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும் மின்சார வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பெரும் தொகையை செலவிட்டு வரும் உலக நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது.

சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

இப்படி பல்வேறு நன்மைகள் இருப்பதால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான அத்தனை முயற்சிகளையும் மத்திய அரசு செய்து வந்தது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்னை விஸ்வரூபமெடுத்து ஆட்டத்தை கலைத்து விட்டது. கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு முன்பு வரை இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வரிசையாக அறிமுகமாகி வந்தன.

சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட, முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தைக்கு வந்து கொண்டிருந்தன. ஆனால் ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் அப்படியே முடங்கி போயின. வாகன உற்பத்தி, புதிய வாகனங்கள் அறிமுகம் என அனைத்து பணிகளும் தடைபட்டன.

சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

எனினும் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது வாகன உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக, வாகன விற்பனை அதிகரிக்கலாம் என்ற செய்திகள் வாகன நிறுவனங்களுக்கு புது தெம்பை அளித்துள்ளன.

சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

பேருந்து, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை பாதுகாப்பானதாக கருதலாம். இதன் காரணமாக வாகன விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்து வருகின்றன.

சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை சந்தைக்கு கொண்டு வர முன்னணி நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இதன்படி ஒகினவா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான இது, ஓகி100 என்ற பெயரில் அழைக்கப்படும். நடப்பு 2020-21ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் புது ஓகி100 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஒகினவா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

முன்னணி எலெக்ட்ரிக் டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஒகினவா திகழ்ந்து வருகிறது. ஒகினவா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஒகி100 எலெக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிலோ மீட்டர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

ஒகினவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஜிதேந்தர் சர்மா அளித்துள்ள பேட்டியில், ''ஓகி100 மாடலுடன் வரும் பண்டிகை காலத்தின்போது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் செக்மெண்ட்டில் நாங்கள் நுழைய உள்ளோம். இந்தியா விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கெட் என்பதால், விலையை சவாலாக நிர்ணயிப்பது முக்கியம்'' என்றார்.

சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

ஒகினவா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஓகி100 எலெக்ட்ரிக் பைக்கின் விலை 1 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓகி100 எலெக்ட்ரிக் பைக்கானது, ரிவோல்ட் ஆர்வி400 மாடலுக்கு போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் புரோட்டோடைப் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Okinawa Oki100 Electric Motorcycle India Launch Details, Expected Price. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X