ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வருகிறது... புதிய தகவல்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது என்ற விபரம் வெளியாகி இருக்கிறது.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வருகிறது... புதிய தகவல்!

குர்கான் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒகினவா நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. ஒகினவா ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் பிரபமடைந்துள்ள நிலையில், அந்நிறுவனம் சந்தையை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி உளளது.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வருகிறது... புதிய தகவல்!

இதற்கு தக்கவாறு, 4 புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அதிரடியாக களமிறக்க உள்ளது. இந்த மாடல்கள் விபரம் குறித்த தகவல்களை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வருகிறது... புதிய தகவல்!

கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஒகினவா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜீதேந்தர் ஷர்மா,"வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நன்கு புரிந்து கொண்டுள்ளோம். அதற்கு தக்கவாறான மின்சார இருசக்கர வாகனங்களை களமிறக்கும் திட்டத்தை வைத்துள்ளோம்.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வருகிறது... புதிய தகவல்!

வர்த்தக பயன்பாடு மற்றும் தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாடல்களை உருவாக்கி களமிறக்க உள்ளோம். வணிக ரீதியிலான மாடல்கள் பொருட்களை சுமந்து கொண்டு சிறப்பாக செல்லும் வகையில் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது," என்று தெரிவித்துள்ளார்.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வருகிறது... புதிய தகவல்!

இதனிடை.யே, ஐ பிரெய்ஸ் மற்றும் பிரெய்ஸ் புரோ ஆகிய இரண்டு செயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்களை ஒகினவா விற்பனை செய்து வருகிறது. இனி அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வருகிறது... புதிய தகவல்!

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் மாடலானது வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த புதிய ஒகி100 எலெக்ட்ரிக் பைக் தொழில்நுட்ப அளவில் மிகச் சிறந்ததாக இருப்பதுடன், 150சிசி பெட்ரோல் பைக்குளுக்கு இணையான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வருகிறது... புதிய தகவல்!

மேலும், ஒகி100 பைக்கில் கனெக்டெட் வெஹிக்கிள் தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த மின்சார பைக் நேரடியாக ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு போட்டியாக வர இருக்கிறது. மேலும், க்ரூஸர் என்ற மேக்ஸி ரகத்திலான மின்சார ஸ்கூட்டரையும் ஒகினவா வரும் ஆண்டு கொண்டு வர இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 120 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வருகிறது... புதிய தகவல்!

நகர்ப்புற சந்தையை தவிர்த்து ஊரகப் பகுதிகளிலும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருந்து வருகிறது. இதனை மனதில் வைத்து ஊரகப் பகுதிகளிலும் மின்சார இருசக்கர வாகனங்களை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக ஒகினவா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 350 டீலர்களை வைத்துள்ள இந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டுக்குள் 500 டீலர்களுடன் செயல்பட திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஒகினவா #okinawa
English summary
According to news report, Okinawa is planning to launch Oki100 electric bike in India by March, 2021.
Story first published: Tuesday, December 15, 2020, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X