Just In
- 38 min ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 8 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 8 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 10 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
Coronavirus Vaccine: தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடக்கம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Movies
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரொம்ப நாள் இல்ல... விரைவில் அறிமுகமாகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்..? எப்போது என தெரியுமா?
ஓலா கால் டாக்சி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கால் டாக்சி சேவையில் ஈடுபட்டு வரும் ஓலா, விரைவில் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவிலும் மின்சார வாகனங்களுக்கான அதிகமாக டிமாண்ட் நிலவி வருவதால் இங்கும் அதன் மின்சார தயாரிப்புகள் களமிறங்க இருக்கின்றது. இதற்கான முயற்சியில் ஓலா மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓலா நிறுவனம் இந்தியாவின் குறிப்பிட்ட நான்கு மாநிலங்களுடன் மின்சார ஸ்கூட்டர்களுக்கான தயாரிப்பு ஆலையை நிறுவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், மிக விரைவில் ஓலா அதன் மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இதன் அறிமுகம் அரங்கேறலாம் என அந்த தகவல்கள் கூறுகின்றன. இதனால், ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் பற்றி எழும்பி வந்த பல்வேறு கேள்விகளுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓலா நிறுவனம், மிக சமீபத்தில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த எடர்கோ நிறுவனத்தை கையகப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிலவற்றில் தனக்கு இருக்கும் பலமான நெட்வர்க்கின்கீழ் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஓலா ஈடுபட்டு வருகின்றது. இந்தியாவில் நிலவும் மின்சார வாகனங்கள் மீதான தேவையைத் தனக்கு சாதமாக்கிக் கொள்ளும்வகையில் தற்போது மிக தீவிரமாக ஓலா மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

எனவேதான் வருகின்ற ஜனவரி மாதம் இதன் மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என உறுதி வாய்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து ஓலாவிடம் இமெயில் வாயிலாக சில ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்த நிறுவனம் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. ஆகையால், இதனை நம்பலாமா? வேண்டாமா? என்ற மன நிலையும் மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் எழும்பியிருக்கின்றது.

இருப்பினும், தற்போது வெளியாகியிருக்கும் தகவல் நம்பகத் தன்மை வாய்ந்தது என கூறப்படுகின்றது. ஓலாவின் இந்த மின்சார ஸ்கூட்டர் 'ரைடு ஷேர்' (வாடகை வாகனம்) துறையில் களமிறங்குவதற்கும் எக்கசக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பிய மின்சார வாகனச் சந்தையிலும் ஓலா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

நெதர்லாந்து நாட்டு நிறுவனத்தைக் கையகப்படுத்திய அந்த தருணமே இந்த தகவல்களை ஓலா வெளியிட்டது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலை உள்ளிட்ட எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஆண்டிற்கு 2 மில்லியன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி திறனுடன் இந்தியாவில் அது கால் தடம் பதிக்க இருக்கின்றது. இதற்காக 100 ஏக்கர் நிலம் மற்றும் சிறப்பு சலுகைக்காகவே நான்கு மாநிலங்களுடன் கடந்த காலங்களில் ஓலா பேச்சு வார்த்தை நடத்தியது.

எடர்கோவின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான ஆப்ஸ்கூட்டர் மாடலையே ஓலா இந்தியாவில் முதல் மாடலாக களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவே, இந்த நிறுவனத்தின் அதிகம் வரவேற்பைப் பெற்ற மின்சார ஸ்கூட்டர் மாடலும்கூட. இந்த மின்சார ஸ்கூட்டரில் இணைப்பு தொழில்நுட்ப வசதி (ஸ்மார்ட் போன்), ஜியோ ஃபென்சிங், 7 இன்ச் அளவிலான தொடுதிரை (அழைப்புகளை ஏற்கும் மற்றும் குறுஞ்செய்தியை படிக்கும் வசதிகளைக் கொண்டது) உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் காட்சியளிக்கின்றன.

ஆப்ஸ்கூட்டர் மின்சார ஸ்கூட்டரில் 3 கிலோவாட் திறனுடைய பிரஷ்லெஸ் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 6kW மற்றும் 50 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். மேலும், இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 240 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய திறனிலேயே வெளிநாடுகளில் இந்த மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதே திறன்களுடனேயே இந்தியாவிலும் இது எதிர்பார்க்கப்படுகின்றது.