டாப்பு டக்கர்! அதிக ரேஞ்ஜ் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா... பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டருக்கு இதுதான் வில்லன்!

அதிக ரேஞ்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கால் டாக்சி நிறுவனமான ஓலா, இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

வாடகை கார் சேவையில் ஈடுபட்டு வரும் பிரபல ஓலா நிறுவனம், விரைவில் உலக வாகன சந்தையில் மின்சார இருசக்கர வாகனங்களை களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாக்சி சேவையில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கி வரும் ஓலா, டட்ச் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனமான எடெர்கோ-வை விலைக்கு வாங்கியிருக்கின்றது.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

இதைத்தொடர்ந்தே, அதன் பிரபல மின்சார இருசக்கர வாகனங்களை உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்கு களமிறக்க அது திட்டமிட்டு வருகின்றது. இதனடிப்படையிலேயே இந்தியாவிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

இதற்காக, ஆப்ஸ்கூட்டர் என்னும் மடாலை அது தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்தியாவில் நிலவும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான டிமாண்டை பூர்த்தி செய்யும் வகையில் அதனை களமிறக்க ஓலா திட்டமிட்டுள்ளது. இது ரைட் ஷேர் துறையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகின்றது.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

எனவே, எடெர்கோ ஆப்ஸ்கூட்டர் இந்தியாவில் களமிறக்கப்படும் என்றால் அது தற்போது விற்பனையில் இருக்கும் ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐ க்யூப் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் போட்டியாளனாக விளங்கும்.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

எடெர்கோ ஓர் புத்தம் புதிய மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது கடந்த 2018ம் ஆண்டுதான் தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டது.

அதிக நிதி நெருக்கடி காரணமாக அந்த நிறுவனம் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன்காரணமாகவே, தனது குறிப்பிட்ட பங்குகளை ஓலாவிற்கு அது விற்பனைச் செய்துள்ளது.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

ஆகையால், டட்ச் நாட்டில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு வந்த எடெர்கோ நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் தற்போது இனி உலக நாடுகள் பலவற்றிற்கு பறந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

இதனடிப்படையில், ஒரு சில நாடுகளில் விற்பனைக்காகவும், ஒரு சில நாடுகளில் ரைட் ஷேர் (வாடகை வாகன) திட்டத்தின்கீழும் அவை களமிறக்கப்பட இருக்கின்றன. எடெர்கோ நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எக்கசக்க தொழில்நுட்ப அம்சங்களை வாரி வழங்கி இருக்கின்றது.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

குறிப்பாக, கன்னெக்டிங் வசதி, ஜியோ ஃபென்சிங் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்டவை மனம் கவர் சிறப்பு அம்சங்களாக காட்சியளிக்கின்றது. இதுபோதாதென்று கூடுதல் கவருதலை தோற்றுவிக்கும் வகையில் 7 இன்ச் தொடுதிரை அந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த திரை பேட்டரியின் திறன், சார்ஜ், அழைப்பு, குறுஞ்செய்தி, இசை உள்ளிட்ட பலவற்றை வழங்கும் தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கின்றது.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

மேலும், இந்த ஸ்கூட்டரில் அதிக திறனை வழங்கும் வகையில் 3கிலோவாட் உடைய பிரஷ்லெஸ் மின் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இது 6kW மற்றும் 50 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த சக்தியானது ஸ்கூட்டரை வெறும் 3.9 விநாடிகளில் 45 கிமீ வரையிலான வேகத்தைத் தொட உதவும். இதற்கு போட்டியாக இந்தியாவில் கிடைக்கும் ஏத்தர் 450 மாடல் வெறும் 40 கிமீ வேகத்தை மட்டுமே எட்டும் வகையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

எனவே, இந்த ஸ்கூட்டர் அதிக திறன் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி ஆப்ஸ்கூட்டரில் மூன்று விதமான பேட்டரிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் தனி தனியாக கழட்டி சார்ஜ் செய்துகொள்ள முடியும். மேலும், ஒரு பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 80 கிமீ வரை பயணிக்க முடியும்.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

அப்படியானால், ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் மூன்று பேட்டரிகளையும் முழுமையாக சார்ஜ் செய்தால் 240 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இது தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மற்ற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் மிக அதிக ரேஞ்ஜ் திறன் ஆகும்.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

ஆகையால், இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் களமிறங்கினால் மற்ற மின்சார ஸ்கூட்டர்களுக்கு தலைவனாக இது மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், போட்டியும் மிக அதிகளவில் காணப்படும் என தெரிகின்றது.

பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப்... அதிக ரேஞ்ஜ் வழங்கும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா!

டட்ச் நாட்டில் மட்டும் விற்பனைக்கு கிடைத்து வரும் இந்த ஸ்கூட்டர் விரைவில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதைத்தொடர்ந்தே இந்தியாவில் 2021ம் ஆண்டில் களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Ola Planning To Launch AppScooter EV In India Next Year. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X