இந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்... செலவான தொகை சுமார் ரூ.2.5 லட்சம்...

சுமார் 65 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் இரட்டை சிலிண்டர் அமைப்புடன் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக இந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் ஸ்கூட்டர் என்ற பெயரை பெற்றுள்ள இந்த லம்ப்ரெட்டா ஸ்கூட்டரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்... செலவான தொகை சுமார் ரூ.2.5 லட்சம்...

ஒரு காலத்தில் இந்திய சாலைகளை 2-ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள்களும் ஸ்கூட்டர்களும் தான் ஆட்சி செய்து வந்தன. ஆனால் அதன்பின் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டுவரப்பட்ட புதிய மாசு உமிழ்வு விதிகளும் கட்டுப்பாட்டு வழிமுறைகளும் அவ்வாறான வாகனங்களை தற்போது முற்றிலும் தயாரிப்பு பணிகளில் இருந்து அகற்றிவிட்டன.

இந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்... செலவான தொகை சுமார் ரூ.2.5 லட்சம்...

இன்னும் சொல்ல போனால் 2-ஸ்ட்ரோக் வாகனங்கள் தற்போது எங்கும் தயாரிக்கப்படுவதில்லை. இதனால் 2-ஸ்ட்ரோக் இரு சக்கர வாகனங்களை இப்போதும் வைத்திருப்பவர்கள் மிகவும் அரிதானவர்களாக தான் உள்ளனர். இந்த வகையில் பழமையான லம்ரெட்டா ஸ்கூட்டர் ஒன்று இந்தியாவின் முதல் மற்றும் ஒரே 2-சிலிண்டர் ஸ்கூட்டராக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்... செலவான தொகை சுமார் ரூ.2.5 லட்சம்...

ஆனால் உண்மையில் இந்த மாடிஃபை பணியில் உட்படுத்தப்பட்டிருப்பது விஜய் சூப்பர் மார்க்2 என்ற 1980களில் விற்பனையில் இருந்த ஸ்கூட்டர் மாடலாகும். பிறகு இந்த மாடல் தான் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு லம்ரெட்டாவாக உருவாக்கப்பட்டது. இந்த மாடிஃபை பணிகளை பெங்களூரை சேர்ந்த ஸ்கிந்தீப் என்பவர் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்... செலவான தொகை சுமார் ரூ.2.5 லட்சம்...

டாட்டூ கலைஞரான இவர் 2-ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள்கள் என்றால் உயிரை விடுபவர். இந்த மாடிஃபை பணிகள் கடந்த ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இந்த பணியை ஸ்கிந்தீப்பின் நண்பர் தான் முதலில் ஆரம்பித்துள்ளார். அதன்பின்னர் தான் இந்த பணியில் ஸ்கிந்தீப்பும் இணைந்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்... செலவான தொகை சுமார் ரூ.2.5 லட்சம்...

இந்த மாடிஃபை ஸ்கூட்டரில் முக்கிய அம்சமாக தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட ஸ்கூட்டருக்கு பதிலாக யமஹா பன்ஷீ ஏடிவி என்ற நான்கு சக்கர வாகனத்தில் இருந்து இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 65 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்... செலவான தொகை சுமார் ரூ.2.5 லட்சம்...

யமஹா மற்றும் லம்ரெட்டா என்ற இரு பிராண்ட்கள் இணைந்துள்ளதால் இந்த வாகனத்திற்கு யம்ப்ரெட்டா என்ற பெயரை உருவாக்கிய கலைஞர்கள் வைத்துள்ளனர். இந்த புதிய என்ஜின் பொருத்துவதற்கு தேவைப்பட்ட கூடுதல் இடத்திற்காக சேசிஸ் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்... செலவான தொகை சுமார் ரூ.2.5 லட்சம்...

இந்த குறையை சமாளிக்க கஸ்டம் ஃப்ரேம் புதியதாக தயாரிக்கப்பட்டு இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. இது சேசிஸை பிடித்து கொள்ளும். மேலும் இந்த என்ஜின் லிக்யூடு-கூல்டு வகை என்ஜின் ஆகும். ஸ்கூட்டரின் முன்புறத்தில் ரேடியேட்டர் மிகவும் அருமையான விதத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்... செலவான தொகை சுமார் ரூ.2.5 லட்சம்...

அதேபோல் யமஹா முத்திரையுடன் ஸ்கூட்டரின் முன்புறத்தில் கஸ்டம் ஏசி துவாரங்களையும் கொண்டுவந்துள்ளனர். மேலும் ப்ரேக்கிங் பணியையும் மேம்படுத்தும் விதமாக முன் சக்கரத்தில் இரட்டை டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்... செலவான தொகை சுமார் ரூ.2.5 லட்சம்...

இந்த மாடிஃபிகேஷன் மாற்றங்களுடன் கிக்ஸ்டார்ட்டிற்கு மாற்றாக செல்ஃப் ஸ்டார்ட் சிஸ்டமும் இந்த லம்ப்ரெட்டா ஸ்கூட்டரில் கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றுடன் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் என்ற ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பை பற்றியும் சொல்லியே ஆக வேண்டும்.

இந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்... செலவான தொகை சுமார் ரூ.2.5 லட்சம்...

ஸ்கீந்தீப்பின் நண்பர் பெங்களூரில் மோட்டோமேட்டிக் ஆர் & டி மையத்தை செயல்படுத்தி வருகிறார். அவரின் மூலமாகவே இந்த ஸ்கூட்டருக்கு புதிய பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த முழு மாடிஃபை பணிகளுக்கு கிட்டத்தட்ட 1 வருடமானது மட்டுமில்லாமல் சுமார் ரூ.2.5 லட்சம் செலவாகியுள்ளது.

Image Courtesy: Motomatic R&D/Instragram

6

Most Read Articles
English summary
India’s one & only twin cylinder Lambretta makes a WHOPPING 65 BHP
Story first published: Monday, September 14, 2020, 12:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X