மோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..

இந்திய சந்தையில் முடிவு வந்த 2019-20 பொருளாதார ஆண்டில், அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தாண்டு மார்ச் மாதம் வரையில் விற்பனையான மோட்டார்சைக்கிள்களின் பெயர்கள் விற்பனை எண்ணிக்கையுடன் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் காண்போம்.

மோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..

2019-20 நிதியாண்டில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் மொத்தம் 26,32,800 யூனிட்கள் (ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கும் சேர்த்து) விற்பனையுடன் முதலிடத்தில் உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் மொத்த விற்பனையில் ஸ்பிளெண்டர் பைக் மாடலின் பங்கு இன்றியமையாதது ஆகும்.

மோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..

இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஹோண்டாவின் சிறப்பான விற்பனை ஸ்கூட்டர் மாடலான ஆக்டிவா உள்ளது. விற்பனையில் 25 லட்சத்தை இந்த பொருளாதார ஆண்டில் கடந்துள்ள ஹோண்டா ஆக்டிவா சென்ற நிதியாண்டில் மொத்தம் 25,91,059 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

மோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..

அதுவே 2018-19 பொருளாதார ஆண்டில் 30,08,334 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் சந்தையில் விற்பனையாகி இருந்தன. இதன்மூலம் இந்த ஸ்கூட்டர் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 14 சதவீத வீழ்ச்சியை விற்பனையில் சந்தித்துள்ளது. இருப்பினும் 2019-20 நிதியாண்டில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டராக ஆக்டிவா தான் விளங்குகிறது.

மோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..

இவற்றிற்கு அடுத்து எச்எஃப் டீலக்ஸ் பைக் மாடல் 20 லட்ச விற்பனை எண்ணிக்கையுடன் கடந்த பொருளாதார ஆண்டில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதனை தொடர்ந்து ஹோண்டாவின் சிபி ஷைன் 9 லட்சத்து 50 ஆயிரம் விற்பனை எண்ணிக்கைகளை சந்தையில் பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

மோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..

ஹோண்டா ஆக்டிவாவை தவிர்த்து வேறெந்த ஸ்கூட்டர் மாடலும் விற்பனையில் 6 லட்ச மைல்கல்லை தொடவில்லை. டிவிஎஸ் மோட்டார்ஸின் ஜூபிடர் 5,95,545 விற்பனை எண்ணிக்கையுடன் ஸ்கூட்டர்களின் விற்பனை லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய பொருளாதார ஆண்டை காட்டிலும் 24 சதவீதம் குறைவாகும்.

மோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..

ஏனெனில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் அந்த காலக்கட்டத்தில் 7,88,417 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் சீரிஸ் பைக்குகள் அவற்றின் முக்கியமான போட்டி மாடலான டிவிஎஸ் அப்பாச்சியை மிக பெரிய அளவிலான வித்தியாசத்துடன் முந்தியுள்ளது.

மோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..

2019-20 பொருளாதார ஆண்டில் பஜாஜ்-ன் பல்சர் வரிசை பைக்குகள் மொத்தம் 8,56,026 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதுவே டிவிஎஸ் அப்பாச்சியின் விற்பனை எண்ணிக்கை 3,65,232 யூனிட்களாகும். மொத்தமாக இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களை பொறுத்த வரையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2019-20 பொருளாதார ஆண்டில் 62,31,458 மோட்டார்சைக்கிள்களை சந்தையில் விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது.

மோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..

இருப்பினும் இந்த எண்ணிக்கை 76,12,775 ஹீரோ மோட்டார்சைக்கிகள் விற்பனையான 2018-19 பொருளாதார ஆண்டை காட்டிலும் 18.1 சதவீதம் குறைவாகும். இதற்கு அடுத்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 47,06,589 மோட்டார்சைக்கிளின் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ளது.

மோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..

இந்த நிறுவனமும் இதற்கு முந்தைய நிதியாண்டு உடன் ஒப்பிடும் போது விற்பனையில் 14.7 % வீழ்ச்சியை தான் சந்தித்துள்ளது. விற்பனையில் வளர்ச்சியை கண்ட ஒரே நிறுவனமாக சுசுகி மோட்டார்சைக்கிள் ப்ராண்ட் விளங்குகிறது. முடிந்துள்ள 2019-20 பொருளாதார ஆண்டில் 6,85,223 மோட்டார்சைக்கிள்களை விற்றுள்ள இந்நிறுவனம் இதற்கு முந்தைய ஆண்டில் 6,68,787 மோட்டார்சைக்கிள்களை விற்றிருந்தது.

மோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..

இதன் மூலம் இந்நிறுவனத்தின் விற்பனை 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது. விற்பனையில் மிக பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்த நிறுவனம் என்றால் அது யமஹா தான். இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை இந்த பொருளாதார ஆண்டில் சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளது. 2019-20 பொருளாதார ஆண்டில் பெரும்பான்மையான நிறுவனங்கள் விற்பனையில் சரிவை தான் அடைந்துள்ளன.

மோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..

கடந்த நிதியாண்டு உடன் ஒப்பிடும்போது இந்த பொருளாதார ஆண்டில் 18 சதவீதம் குறைவாகவே மோட்டார்சைக்கிகள் சந்தையில் விற்பனையாகியுள்ளன. ஸ்கூட்டர்களை விட இரு மடங்கு அதிகமாக பைக் மாடல்கள் விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Over 26 lakh units of Hero splendor sold in 2019-20 fy.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X