டக்கார் ராலியில் அதிர்ச்சி... ஹீரோ அணி வீரர் பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணம்

டக்கார் ராலியில் இன்று நடந்த பயங்கர விபத்தில் சிக்கி, ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி வீரர் பாவ்லோ கான்கால்வ்ஸ் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.

ஹீரோ அணி வீரர் பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணம்

டக்கார் ராலி போட்டியின் 7-வது ஸ்டேஜ் போட்டி இன்று நடந்து வருகிறது. நேற்று ஓய்வு நாளையடுத்து, இன்று வீரர்கள் புதிய உற்சாகத்துடன் பங்கேற்றனர். உலகின் மிகவும் பிரபலமான ராலி பந்தய வீரரும், இந்தியாவின் ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்கேற்றிருந்த பாவ்லோ கான்கால்வ்ஸ் மிகவும் சிறப்பான முறையில் பந்தயத்தை எதிர்கொண்டு தரவரிசையிலும் சிறப்பான இடத்தை பதிவு செய்து வந்தார்.

ஹீரோ அணி வீரர் பாவ்லோ பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணம்

இன்று 7வது ஸ்டேஜ் போட்டியானது ரியாத் நகரிலிருந்து வடி அல் தவசிருக்கு நடந்த 7வது ஸ்டேஜ் போட்டியில் பாவ்லோ பாவ்லோ கான்கால்வ்ஸ் பங்கேற்றார். போட்டியின் 276வது கிலோமீட்டர் தூரத்தில் அவர் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

ஹீரோ அணி வீரர் பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணம்

இதையடுத்து, டக்கார் ராலி அமைப்பினருக்கு, விபத்து குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. சுய நினைவு இல்லாமல் கிடந்த அவரை ஹெலிகாப்டரில் சென்ற மீட்புக் குழுவினர் மீட்டு, லேலா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஹீரோ அணி வீரர் பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணம்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். விபத்தில் சிக்கிய அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ அணி வீரர் பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணம்

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பாவ்லோ கான்கால்வ்ஸ் மரணம் ராலி பந்தய ரசிகர்களையும், வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஹீரோ அணி வீரர் பாவ்லோ பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணம்

டக்கார் ராலியில் பங்கேற்கும் வீரர்களில் அதிக அனுபவம் வாய்ந்த வீரராக பாவ்லோ கான்கால்வ்ஸ் இருந்து வந்தார். தற்போது 13வது முறையாக டக்கார் ராலியில் பங்கேற்றிருந்தார்.

ஹீரோ அணி வீரர் பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணம்

கடந்த 2006ம் ஆண்டு முதல் டக்கார் ராலியில் பங்கேற்று அவர் 4 முறை முதல் 10 இடங்களுக்குள் வந்த பெருமைக்குரியவர். 2015ம் ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்து டக்கார் ராலியில் முதன்மையான பைக் பந்தய வீரராக பெருமையை பெற்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஆறாவது ஸ்டேஜில் பைக் பிரிவில் முதல் 10 இடங்களுக்குள் வந்து அசத்திய அவர், திடீரென மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி ரசிகர்களை உலுக்கி உள்ளது.

ஹீரோ அணி வீரர் பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணம்

பாவ்லோ கான்க்ளேவஸ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு டக்கார் ராலி அமைப்பு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளது. அவருக்கு டிரைவ்ஸ்பார்க் தளம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Most Read Articles
 
English summary
Hero Motosports rider Paulo Goncalves has died in fatal accident after 276 kms of the day's ride in the seventh stage of Dakar Rally.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X