உலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...

மஹிந்திரா க்ருப்பில் உள்ள பியோஜியோட் மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்ட் டிஜாங்கோ 125 ஸ்கூட்டரில் 210வது ஆண்டு நிறைவிற்கான ஸ்பெஷல் எடிசனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய ஸ்கூட்டர் மாடலை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...

இந்த புதிய எடிசன் ஸ்கூட்டர் பியோஜியோட் மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்டின் ஆண்டு நிறைவிற்கானது இல்லை. ஒட்டு மொத்த பியோஜியோட் க்ரூப்பின் 210வது ஆண்டு நிறைவுவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது.

உலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...

1810-ல் பியோஜியோட் குடும்பம் பிரான்ஸில் காப்பி கொட்டைகள் மற்றும் பைசைக்கிள் மூலமாக வணிகத்தை துவங்கினார். இருப்பினும் நமக்கு தற்போது தெரியும் பியோஜியோட் 1896ல்தான் துவங்கப்பட்டது.

உலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...

கடந்த 2015ல் மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப், பிஎஸ்ஏ க்ரூப்பின் மோட்டார்சைக்கிள் பிரிவின் பெரும்பான்மையான பங்கை (51%) கைப்பற்றியது. அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டில் முழுவதுமாக பியோஜியோட் மோட்டார்சைக்கிள்ஸ் மஹிந்திரா க்ரூப்பின் துணை பிராண்டாக மாறியது.

உலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...

இருந்தாலும் பியோஜியோட் க்ரூப்பின் 210ஆம் ஆண்டு நிறைவு ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் பியோஜியோட் மோட்டார்சைக்கிள் பிராண்டில் இருந்து வெளிவந்துள்ளது. வெறும் 21 யூனிட் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரில் பிரெஞ்சு நாட்டு தேசிய கொடி பிரதான பெயிண்ட் அமைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

உலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...

இதன்படி இதன் பெயிண்ட் அமைப்பில் நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்கள் அடங்கியுள்ளன. வெள்ளை நிற பெயிண்ட் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் பிரெஞ்சு நாட்டு கொடியின் நிறங்கள் செங்குத்தாக வழங்கப்பட்டுள்ளன.

உலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...

பக்கவாட்டு பேனல்கள் பெரும்பான்மையாக நீல நிறத்தையே கொண்டுள்ளன. இருப்பினும் வெள்ளை மேற்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் நீல நிறங்களை இடையில் சில்வர் நிற க்ரோம் ஸ்ட்ரிப் பிரிக்கிறது. இவற்றிற்கு மேற்புறத்தில் உள்ள இருக்கைகள் முழுவதும் சிவப்பு நிறத்தில் வெள்ளை நிற தையல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

உலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...

இதன் இரட்டை இருக்கை அமைப்புடன் பின் இருக்கை பயணிக்கு கூடுதலான முதுகிற்கான குஷினும் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் ‘210 வருடம் நிறைவு' என்ற முத்திரைகளை சுற்றிலும் பெற்று வந்துள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் உண்மையில் அட்டகாசமாக உள்ளது.

உலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...

பியோஜியோட் டிஜாங்கோ 125 ஸ்கூட்டரில் இந்த ஸ்பெஷல் எடிசன் கொண்டுவரப்பட்டுள்ளதால் இதில் 125சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10.14 பிஎச்பி மற்றும் 8.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

உலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...

சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும் பின்புறத்தில் மோனோஷாக்கும் உள்ளன. இதன் 12 இன்ச் அலாய் சக்கரங்கள் ஏபிஎஸ் உடன் இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகளை கொண்டுள்ளது. டிஜாங்கோ 210வது ஆண்டுநிறைவு எடிசனின் விலை 437,800 ஜப்பானிஸ் யென்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3.1 லட்சமாகும்.

Most Read Articles

English summary
Peugeot Django 125 210th Anniversary Edition Launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X