ஜனாதிபதி பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு..! எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!

மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த நாட்டு ஜனாதிபதி, மஹிந்திராவின் எந்த தயாரிப்பு பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு... எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!

இந்தியாவின் மிக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஓர் அங்கமாக பீஜோ நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. பிரான்ஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், நான்கு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு... எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!

குறிப்பாக முச்சக்கர வாகனத்தை தயாரிப்பதில் இந்நிறுவனம் பெயர்போன ஒன்றாக இருக்கிறது. எனவேதான் பீஜோ தயாரிப்பில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பிரபல மெட்ரோபாலிஸ் முச்சர வாகனத்தை பிரான்ஸ் நாடு, அதன் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு பணியில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு... எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!

மெட்ரோபாலிஸ் ஓர் மூன்று சக்கரங்களைக் கொண்ட ஸ்கூட்டராகும். இந்த வாகனத்தையே ஜனாதிபதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரான்ஸ் அரசு வாங்கி குவித்துள்ளது. மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரை பீஜோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பிரான்சில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு... எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!

இம்மாதிரியான மூன்று சக்கர வாகன அமைப்பில் பீஜோ அறிமுகப்படுத்துவது இது இரண்டாவது மாடலாகும். முன்னதாக இ-லூதிக்ஸ் எனும் மாடலை அது களமிறக்கியிருந்தது. இது, ஓர் மின்சார ஸ்கூட்டராகும். இதனையும் பிரான்ஸ் அரசு குடியரசு தலைவரின் பாதுகாப்பு பணியில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகின்றது.

ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு... எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!

இந்த நிலையிலேயே புதிய தயாரிப்பான மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரையும் பிரான்ஸ் அரசு தனது பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பில் சேர்ப்பதற்காக களமிறக்கியிருக்கின்றது. பீஜோ பிரான்ஸை மையமாகக் கொண்டு இயங்கினாலும், அது தற்போது இந்திய தயாரிப்பாக மாறியிருக்கின்றது. உரிமையாளராக மஹிந்திரா குழுமம் மாறியதை அடுத்து இந்த அந்தஸ்தை அது பெற்றிருக்கின்றது. எனவேதான் இந்த நிகழ்வை இந்தியா தற்போது கொண்டாடி வருகின்றது.

ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு... எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!

இதுகுறித்து மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக, "நாங்கள் நல்ல நிறுவனத்தின் வாயிலாக மிக சுமூகமாக நகர தொடங்கியுள்ளோம். "பீஜோ மோட்டார்சைக்கிள்" ஓர் @MahindraRise நிறுவனத்தின் தயாரிப்பு" என அவர் பெருமிதம் கொண்டார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு... எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!

மஹிந்திரா குழுமத்தின் சர்வதேச செயல்பாட்டு நிர்வாகியாக பிரகாஷ் வகங்கர் செயல்பட்டு வருகின்றார். இவரும், தனது டுவிட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திராவின் கூற்றையே உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பீஜோ மெட்ரோபாலிஸ் 2020 குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு பணிக்காக எலிசி அரண்மனை முன்பு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு... எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!

பிரான்ஸ் அரசு மெட்ரோபாலிஸ் முச்சக்கர வாகனத்தை பாதுகாப்பு பணிக்காக களமிறக்கியதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அதன் முச்சக்கர வாகன அமைப்பே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த வாகனத்தை சென்டர் அல்லது பக்கவாட்டு ஸ்டாண்ட்டுகளைப் பயன்படுத்தாமலே தன்னிச்சையாக நிறுத்த முடியும். மேலும், ஓட்டுநர் திடீரென எழுந்து நின்றாலும் இந்த ஸ்கூட்டர் எந்தவொரு சிக்கலைச் சந்திக்காமல் தொடர்ச்சியாக முன்னேறும்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு... எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!

எனவே பாதுகாப்பு பணியின் போது திடீர் மோதல்களை போலீஸாரால் எளிதில் கையாள முடியும். குறிப்பாக, மோட்ரோபாலிஸ் நகர்ந்துக் கொண்டிருக்கும்போதே போலீஸாரால் எழுந்து நின்று எதிரிகளைக் கையாள முடியும். எனவேதான் இந்த சிறப்பு திறன் வாய்ந்த மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரை பிரான்ஸ் அரசு அதன் பாதுகாப்பு பணியில் களமிறக்கியிருக்கின்றது.

ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு... எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!

பாதுகாப்பு படை வீரர்கள் இந்த மோட்டார்சைக்கிளை எப்படி பயன்படுத்துகின்றனர் என்ற வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும். இதுபோன்ற சிறப்பு வசதிகளை இந்த முச்சக்கர வாகனம் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே பிரான்ஸ் அரசு மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரைக் களமிறக்கியிருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவானது குவாங்டாங் காவல்துறை வீரர்கள் பயற்சி எடுக்கும்போது எடுக்கப்பட்டதாகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Peugeot Metropolis Added To Presidential Fleets in France. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X