அப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்!

பியாஜியோ நிறுவனம் "இஎஸ்ஆர்1" என்கிற புதிய முத்திரையை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்!

பியாஜியோவின் புதிய இஎஸ்ஆர்1 என்கிற முத்திரை புதிய அப்ரில்லா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் வெளிவரும் அப்ரில்லா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்நுட்ப பாகங்களை வெஸ்பா எலக்ட்ரிகாவில் இருந்து பெறலாம்.

அப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்!

பியாஜியோவின் வெஸ்பா எலக்ட்ரிக்கா கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ளது. இஎஸ்ஆர்1 என்ற முத்திரை ஸ்டைலிஷான வடிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வர்த்தக முத்திரை தாக்கல் மனுவில் எந்த இடத்திலும் பியாஜியோவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

அப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்!

மோட்டார்சைக்கிள் என்ற இணையத்தள பக்கத்தின் மூலமாக வெளிவந்துள்ள இந்த முத்திரையில் எஸ்ஆர் என்கிற பகுதி அப்ரில்லா எஸ்ஆர் வரிசை ஸ்கூட்டர்களில் வழங்கப்படும் எஸ்ஆர் லோகோவுடன் ஒத்துப்போவதை வைத்துதான் இந்த புதிய முத்திரையை பியாஜியோ பதிவு செய்திருக்கலாம் என நாங்கள் கூறுகின்றோம். அதிலும் அப்ரில்லா பிராண்டில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட எஸ்ஆர்-ஜிபி ரெப்லிகாவுடன் இந்த முத்திரை பெரிய அளவில் ஒத்து காணப்படுகிறது.

அப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்!

பியாஜியோவின் அறிவுசார் சொத்து விஷயங்களை கையாளும் இத்தாலிய சட்ட நிறுவனமான ஜேக்கபாக்கி & பார்ட்னர்ஸ் எஸ்.பி.ஏ., உரிமையாளர் சார்பாக இந்த வர்த்தக முத்திரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதான் "இஎஸ்ஆர்1" முத்திரை உண்மையில் பியாஜியோவின் தயாரிப்பிற்கானது என்பதற்கான வலுவான அறிகுறியாகும்.

அப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்!

அப்ரில்லா எஸ்ஆர் வரிசையில் 50சிசி-இல் இருந்து 160சிசி வரையில் ஸ்கூட்டர்கள் தற்சமயம் உள்ளன. ஆனால் அப்ரில்லா பிராண்டில் இதுவரை எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் தயாரிப்பில் இல்லை. பியாஜியோ தான் வெஸ்பா எலக்ட்ரிக்கா என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது.

அப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்!

அப்ரில்லா இஎஸ்ஆர்1 பெரும்பான்மையான பாகங்களை வெஸ்பா எலக்ட்ரிக்காவில் இருந்து எடுப்பது மட்டுமின்றி, யார் கண்டது இது முழுக்க முழுக்க வெஸ்பா எலக்ட்ரிக்கா ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டதாக கூட இருக்கலாம். இந்த எலக்ட்ரிக் அப்ரில்லா ஸ்கூட்டரின் படங்கள் வெளிவர மாதக்கணக்கில் ஆகும்.

Most Read Articles

மேலும்... #பியாஜியோ #piaggio
English summary
Piaggio Files Trademark For Electric Aprilia Scooter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X