'சத்தியமா நம்புங்க இது ஒரு இ-ஸ்கூட்டர்' - சூட்கேஸ் வடிவத்தில் வாகனம்! இது நுரையீரலை பலபடுத்துமாம்..!

"சூட்கேஸ் மாதிரி இருக்கு இதே போய் மின்சார ஸ்கூட்டர்னு கதை விடுரீங்க" என்று கூறுமளவிற்கு புதுமையான தோற்றத்தில் ஓர் இ-ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

பார்ப்பதற்கு சூட்கேஸ் வடிவில் இருக்கின்ற வகையிலான மின்சார வாகனம் ஒன்றை சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் போய்மோ (POIMO - POrtable and Inflatable MObility) என்ற மின்வாக உற்பத்தி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

இதுவரை மின்சார வாகன உலகம் கண்டிராத தோற்றத்தில் இது இருப்பதால் உலக மின்வாகன ஆர்வலர்கள் மத்தியில் இந்த வாகனம் பேராவலை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இதற்கு முன்பாக மடித்து வைத்துக்கொள்ளக்கூடிய ரகத்திலான வாகனங்களை மட்டுமே நாம் சந்தையில் பார்த்திருக்கின்றோம். அம்மாதிரியான வாகனங்கள் மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வருக்கின்றன.

MOST READ: விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... வீடியோ!

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

ஆனால், இந்நிலையை மாற்றும் விதமாக புதுரக மின்வாகனம் ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது, பலூன் ரக மின்சார வாகனம் ஆகும். பொதுவாக, காற்றில் பறக்கும் ஹைப்பர் பலூன்கள் மட்டுமே இந்த ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வருக்கின்றன. எனவே, சாலையில் இயங்கும் வாகனங்களில் பலூன் வடிவமைப்பில் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

இதற்கு முன்பாக இம்மாதிரியான வாகனத்தை எந்தவொரு நிறுவனமும் அறிமுகம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த வாகனத்திற்கு போய்மோ ஐஎன்டி032 (POIMO INT032) என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்கேட்டிங் வாகனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

MOST READ: நம்ம ஊரிலும் இனி இப்படிதான் படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

இதன் அடிப்பக்கத்திற்கான மோட்டார் மற்றும் வீல் அமைப்பு தனியாகவும், பயணி அமர்ந்து செல்வதற்கான இருக்கை அமைப்பு மற்றும் ஹேண்டில் பார் ஆகியவை தனியாகவும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த இருக்கை அமைப்பை, வீல் அடிப்பகுதியுடன் இணைத்து, காற்று நிரப்பிய பின்னரே ஒரு நபர் அமர்ந்து செல்லும் வாகனமாக அது மாறுகின்றது.

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

இந்த ரகத்திலான வாகனத்தைதான் போய்மோ தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம், இதுபோன்ற வித்தியாசமான வாகனத்தை சீன சந்தையில் அறிமுகம் செய்வது முதல் முறையல்ல.

பேக்-பேகிற்குள் மடித்து வைத்துக்கொள்ளக்கூடிய போய்மோ ஐஎன்டி032 வாகனத்தைப் போலவே வாகனங்களில் மடித்து எடுத்தும் செல்லுகின்ற வகையிலான சிறிய வாகனங்களையும் அது அறிமுகம் செய்துள்ளது.

MOST READ: ஊரடங்கினால் ஹோண்டா சிட்டி காரை வீடாக மாற்றிக்கொண்ட 6 அடி பாம்பு.. இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ?

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

அதேசமயம், தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த வாகனத்தின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் பலருக்கு எழும்பியிருக்கலாம். அது நியாயம் தான். ஏனென்றால் வாகனத்தின் டிசைன் அந்த மாதிரியிருக்கின்றது.

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

இத்தகைய சந்தேகம் உடையவர்களுக்கான பதிலையும் அந்நிறுவனம் வழங்கியிருக்கின்றது. அதாவது, இந்த இ-ஸ்கூட்டரை என்னதான் வளைத்து நெலித்து ஓட்டினாலும் எளிதில் கவிழ்ந்துவிடாது என்ற உறுதியை அது வழங்கியிருக்கின்றது.

MOST READ: வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

மேலும், குறைந்தபட்ச வேகத்தில் இது செல்லும் திறனை இது பெற்றிருப்பதால் அதிக பாதுகாப்பு கொண்ட வாகனமாக கருதப்படுகின்றது. இதுமட்டுமின்றி, இந்த வாகனத்தில் பயணிக்கும்போது நுரையீரலை வலுப்பெற செய்கின்ற அதிர்வுகள் ஏற்படும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. எனவே, போய்மோ ஐஎன்டி032-இல் பயணிப்பவர்களுக்கு நுரையீரல் கூடுதல் பலமடையும் என தெரிகின்றது.

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

வெறும் 5.5 கிலோ மட்டுமே எடையுள்ள இந்த மின் வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்தால் 15 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் பின்னர், தேவைப்பட்டால் காற்றை இறக்கிவிட்டு பைக்குள் எடுத்து வைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து, மீண்டும் இதனை பயன்படுத்த வேண்டுமானால் காற்று நிரப்பி அதனை பழைய நிலைக்கு கொண்டுவரலாம். இதற்காக தனி காற்று நிரப்பும் எந்திரம் நிறுவனம் சார்பில் வழங்கப்படும்.

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

இதன் பேட்டரி திறன் மற்றும் எஞ்ஜின் திறன் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த மிகக் குறைந்த வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருப்பதால் நகர்புற பயன்பாட்டாளர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் இதனை தாராளமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ற சாத்தியக்கூறுகள் பலவற்றை இந்த மின்வாகனம் பெற்றிருக்கின்றது. அதாவது, ரிமோட் மூலம் இயக்கும் திறன் போய்மோ ஐஎன்டி032 மின் வாகனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேசமயம், தற்போது கோவிட்-19 வைரஸ் பிரச்னை காரணமாக உலக நாடுகள் பல தங்கள் மக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

இந்த கோட்பாட்டிற்கு போய்மோ ஐஎன்டி032 நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. ஏனென்றால், இந்த வாகனத்தில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லவதற்கான அமைப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், இருவர் பயணித்தால் இந்த வாகனம் தாங்குமா, என்பதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

சத்தியமா நம்புங்க இது மின்சார ஸ்கூட்டர்... சூட்கேஸ் வடிவத்தில் இ-ஸ்கூட்டர்... இதுல பயணிச்சா நுரையீரலுக்கு நல்லதா?

தற்போது போய்மோ ஐஎன்டி032 முன்மாதிரி மாடலாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இன்றளவும் பயன்பாட்டிற்கான உற்பத்தி தொடங்கப்படவில்லை என்பது வேதனையளிக்கும் தகவலாகவே உள்ளது. எனவே, இது ஓரிரு வருடங்கள் கழித்த பின்னரே உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்கு கிடைக்கும் எனவே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இந்தியாவில் இதன் விற்பனை வருகை சந்தேகம்தான் எனவும் கூறப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
POIMO Unveiled Prototype Inflatable Electric Scooter INT032. Read In Tamil.
Story first published: Wednesday, May 20, 2020, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X