21 நாள் தேசிய ஊரடங்கு! பயன்பாடின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாள் முழு ஊரடங்கு அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், பலரின் வாகனம் பயன்படுத்தப்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அவை, தற்போது கிருமிகளின் கூடரமாக மாறியிருக்கும். ஆகையால், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக என்னவெல்லாம் செய்ய வேண்டும்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

கோரோனா வைரஸ் இடம் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்வது கட்டாய சூழ்நிலையாக மாறியுள்ளது. இந்த வைரஸ் மிக எளிதாக ஒருவரிடம் ஒருவருக்கு பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இதனைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் தற்போது 144 ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இருப்பினும் சில அத்தியாவசிய தேவைகளுக்காக நாம் வெளியில் சென்றுவரும் நிலை உள்ளது. அவ்வாறு நாம் வெளியில் செல்லும்போது கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. இதனாலயே போலீஸார்காரர்கள் வாகன ஓட்டிகளைக் கண்டதும் கண்மூடித்தனமாக அடித்து துவைத்து எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

போலீஸாரின் இந்த கெடுபிடியை நாம் நியாயப்படுத்திவிட முடியாது. இருப்பினும், பல்வேறு தரப்பில் இருந்து வரும் அழுத்தத்தின் காரணமாக போலீஸார் இத்தகைய அத்துமீறல் செயலில் ஈடுபடுகின்றனர். இதனால், கொரோனா தாக்குமோ என்ற அச்சத்தைக் காட்டிலும், போலீஸாரின் கெடுபிடியால் யாரேனும் விபரீதமான நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சமான சூழலே இந்தியாவில் நிலவுகின்றது.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மேலை நாடுகளில் இதுபோன்ற நிலையைத் தவிர்ப்பதற்காக ஓர் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அந்நாட்டு அரசாங்கமே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றது. இதனால், மக்கள் வெளியில் வருவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அவ்வாறில்லாமல் மக்கள், தங்களின் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஆகையால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே சென்றே ஆக வேண்டும் என்ற நிலை தற்போது வரை காணப்படுகின்றது. அவ்வாறு, சென்றுவரும்போது கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள சில வழி முறைகளைக் கடைபிடிப்பது கட்டாயமாகியுள்ளது.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

குறிப்பாக, நாம் பாதுகாப்பு கவசம் அணிந்திருப்பதனால் மட்டும் கொரோனாவிடம் இருந்து தப்பித்துவிடுவோம் என நம்பிவிட வேண்டாம். ஏனென்றால், பல்வேறு பாதுகாப்பு கவசங்களை அணிந்துகொண்டு கொரோனா தொற்றுடையவர்களை பரிசோதித்த மருத்துவர்கள்கூட அந்த வைரஸ் தாக்கத்தின் பாதிப்படைந்திருக்கின்றனர்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஆகையால், இந்த வைரஸ் தொற்றை அவ்வளவு சுலபமாக நாம் நினைத்துவிடக் கூடாது. குறிப்பாக, நாம் வெளியே செல்வதற்கு பயன்படுத்தும் வாகனங்களைக் கையாளும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவற்றின் பல பாகங்கள் கிருமிகளின் வாழ்விடமாக இருக்கின்றன. அந்தவகையில், கார்களின் எந்தெந்த பகுதிகள் எல்லாம் கிருமி தொற்றை ஏற்படுத்தும், அதில் எவற்றையெல்லாம் நாம் அதிக கவனம் செலுத்தி தூய்மைப்படுத்த வேண்டும் என பார்த்தோம்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அந்தவகையில், தற்போது பைக்கில் எந்த பாகங்களெல்லாம் நமக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன என்பதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். முன்பாக நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வெளியிட்டிருந்த கார் பற்றிய தகவலை அறிந்துகொள்ள வேண்டும் என்ற இங்கே க்ளிக் செய்யவும்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இந்திய வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், இங்கு கார்களைக் காட்டிலும் அதிகளவில் இரு சக்கர வாகனங்களே பயன்பாட்டில் இருக்கின்றன. இதில், ஸ்கூட்டரும் அடங்கும்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இவற்றை இயக்கும்போது நமக்கு எந்தவொரு பாதுகாப்பு அரணும் இருப்பதில்லை. இதனாலயே ஸ்கூட்டர் மற்றும் பைக்கில் பயணிக்கும்போது தலைக் கவசம் அணிய வேண்டும் என கூறப்படுகின்றது. ஆனால் இப்போது கொரோனா தொற்று அச்சம் நிலவுவதால் ஹெல்மெட்டைக் காட்டிலும் மாஸ்க்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் வெளியே செல்லும்போது முழு முக ஹெல்மெட்டை அணிந்தால் கூடுதல் பாதுகாப்பில் நம்மால் சென்று வர முடியும்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஏனென்றால், முழு முக ஹெல்மெட் அவ்வளவு எளிதில் வெளிப்புறத்தில் உள்ள சிறிய வகை கிருமிகளை உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. அப்படியே சென்றாலும் நாம் அணிந்திருக்கும் முக மூடிகள் அவற்றை தடுத்துவிடும். ஆகையால், ஹெல்மெட் அணிந்தாலும் கட்டாயம் மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து, ஒவ்வொரு முறையும் ஹெல்மெட்டைப் பயன்படுத்துவதற்கு முன்னர் மற்றும் பின்னர் கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்வது, நம்மைக் கொரோனா வைரஸ் இடம் இருந்து சற்றே தள்ளியே வைக்க உதவும்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

கையுறை

ஹெல்மெட் மற்றும் முக கவசங்களைப் போலவே கையுறைகள் அணிவதும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்த கையுறைகள் கொரோனா வைரஸ் நம் கை வழியாக பரவுவதைத் தவிர்க்க உதவும். கொரோனா மட்டுமின்றி வேறு சில கிருமி தொற்றுகளில் இருந்தும் இது நம்மை பாதுகாக்கும்.

பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படும் அக்ஸசெரீஸ்களில் கைப் பிடிகள் முதன்மை இடத்தில் இருக்கின்றன.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஆகையால், அவற்றைக் கையாளும்போது அதிக கவனம் தேவை. மேலும், இருசக்கர வாகனங்கள் எப்போதும் திறந்த வெளியில் இருப்பதால் அவற்றில் கிருமிகள் படர்வது மிகவும் சாதரணமான ஒன்று. எனவே, பைக்கைப் பயன்படுத்திய பின்னர் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது அதிக பலனை அளிக்கும்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இருசக்கர வாகன கவர்

இரு சக்கர வாகனங்களை மூடி வைக்க பயன்படுத்தும் கவர்களும் மிகப்பெரிய கிருமி பரப்பிகளாக இருக்கின்றன. இவை காற்றில் பறந்து வரும் தூசிகளை மட்டுமின்றி கிருமிகளை தன்மீது படருவதற்கு அனுமதிக்கின்றது. ஆகையால், பைக் அல்லது ஸ்கூட்டர் கவர்களை கையாண்ட பின்னர் கிருமி நாசினியைக் கொண்டு கைகளைச் சுத்தம் செய்வது மிக அவசியம். இதன் மூலம் தேவையற்ற கிருமி தொற்றை நம்மால் தவிர்க்க முடியும்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அதிக சூரிய ஒளியில் பார்க்கிங்

கொரோனா சூரிய ஒளியில் அழிந்துவிடும் என்பதற்கான உறுதியான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.. இருப்பினும், சூரிய ஒளியில் பெரும்பாலான பேக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளால் வாழ முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனடிப்படையிலேயே, உங்கள் வாகனங்களை சூரிய ஒளி படும்படியான இடத்தில் நிறுத்தி வைக்க நாங்கள் அறிவுறுத்துகின்றோம்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இதனால், உங்கள் வாகனங்களின் புதுப்பொலிவு தன்மை மங்க நேரிடலாம். ஆகையால், அதிக நேரம் நிறுத்தி வைக்கமால் குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டும் நிறுத்தி வைத்த பின்னர் மீண்டும் கராஜ் அல்லது நிழலான பகுதிக்கு கொண்டு சென்றுவிடலாம். இல்லையெனில் கிருமி நாசினிகளை உங்களின் கைகளுக்கு பயன்படுத்துவதைப் போன்று வாகனங்களின் மீதும் லேசாக ஸ்பிரே செய்து கொள்ளலாம். இது நிச்சயம் நல்ல பலனை அளிக்கும்.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

தற்போது 21 நாட்களுக்கு முழு அடைப்பு இருப்பதால் பலரின் வாகனம் பயன்பாடின்றி சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்க கூடும். அத்தகைய வாகனங்களை கையாள்வதற்கு முன்பு ஒரு வாட்டர் வாஷ் அல்லது தாங்களே கிருமி நாசினிகளைக் கொண்டு ஓர் சிறிய வாஷை செய்த பின்னர் பயன்படுத்துவது மிகச் சிறந்தது.

21 நாள் தேசிய ஊரடங்கு.. பயன்படின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அவை இருசக்கர வாகனத்தை சுத்தமாக்குவதுடன், அதன்மீது படர்ந்திருக்கும் கிருமிகளையும் அழிக்கும். அதேசமயம், இந்த தேசிய ஊரடங்கு முழுமடைய இன்னும் இரு வாரங்கள் இருப்பதால் உங்களின் வாகனத்தை பாதுகாப்பான இடத்தில், கவர் கொண்டு மூடி வைப்பது மேலும் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்து, கொரோனா போன்ற வைரஸ் தொற்றை அது விளக்கி வைக்க உதவும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Prevent Your Bike From CoronaVirus. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X