தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

தாயுடன் அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் சென்ற இளைஞருக்கு போலீஸார் மாலை அணிவித்து ராஜ மரியாதைச் செலுத்தியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் முந்தைய காலங்களைக் காட்டிலும் தற்போது மிக அதிக வேகமாக பரவி கொண்டிருக்கின்றது. ஆம், கடந்த காலங்களில் ஐம்பது, நூறு என கண்டறியப்பட்டு வந்த வைரஸ் தொற்றின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு உயர்ந்து ஐநூறு, ஆயிரம் என கண்டறியப்பட்டு வருகின்றது. இந்த திடீர் அதிகரிப்பால் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

இத்தகைய அதீத பரவலுக்கு மக்களின் அஜாக்கிரதையான செயல்பாடுகளே முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆம், தேசிய அளவிலான பூட்டுதல் (ஊரடங்கு உத்தரவு) அறிவித்த பின்னரும் மக்கள் ஒரு சிலர் ஆங்காங்கே சுற்றி திரிந்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக, பாதுகாப்பு கவசங்களான மாஸ்க் மற்றும் கையுறை போன்ற எந்தவொரு அம்சமும் பயன்படுத்தாமல் அவர்கள் வலம் வந்தனர்.

MOST READ: நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

இதன் விளைவாக தற்போது அதிக எண்ணிக்கையில் வைரஸ் தொற்று பரவி வருகின்றது. இதன் காரணமாக, தேசியளவிலான ஊரடங்கு உத்தரவு தற்போது மூன்று கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்முறை சில தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

அதாவது, தொழிற்துலை மற்றும் தனியார் நிறுவனங்கள் சில, பல கட்ட கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மக்கள் வழக்கம்போல் நடமாட தடைவிதிக்கப்பட்ட நிலையேக் காணப்படுகின்றது. எனவே, அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, வீணாக வெளியில் சுற்றும் பொதுமக்களைக் கடுமையாக கண்டித்து வருகின்றனர் போலீஸார்.

MOST READ: நடுரோட்டில் தீப்பிடித்த கார்... போலீஸாரால் மயிரிழையில் காப்பாற்றப்பட்ட கல்யாண மாப்பிள்ளை

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

என்னதான் இக்கட்டான சூழ்நிலை காரணமாக அரசு பல வழிமுறைகளை வகுத்து வந்தாலும், போலீஸார் கடும் கெடுபிடிகளைக் காட்டினாலும் ஒரு சிலர் அவற்றைப் பெரிதும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்ட வண்ணமே இருக்கின்றனர்.

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

அந்தவகையில், செயல்பட்ட மகன் மற்றும் தாயை போலீஸார் விநோதமான முறையில் கண்டித்துள்ளனர். அதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களான டுவிட்டர் மற்றும் முகப்புத்தகம் போன்றவற்றில் வைரலாக பரவி வருகின்றது.

அதில், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த இளைஞர் மற்றும் அவரது தாய்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

MOST READ: அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் 3 இந்தியர்களின் சொகுசு கார்!

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

இது வித்தியாசமாக இருக்கே, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு தானே அவர்கள் வெளியே வந்துள்ளனர். அத்தியாவசியத் தேவைக்காக வேளியே வரலாம் அல்லவா., என உங்களுக்கு கேட்கத் தோன்றலாம்.

அத்தியாவசியத் தேவைக்காக வெளியே வருவது தவறல்ல., ஆனால், அவர்கள் வாங்கிய பொருட்களின் எண்ணிக்கைதான் விமர்சனத்தை முன் வைக்கின்ற வகையில் இருக்கின்றது.

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

அதாவது தாய் மற்றும் மகன் இருவரும் இணைந்து சென்று சொற்ப அளவிலான அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்கியிருக்கின்றனர். அதனைத் தனியாக ஒரு நபர் மட்டுமே சென்றுகூட வாங்கிவிட முடியும். இதற்கு இரு நபர் தேவையில்லை என்பதே கூற்று. இதன் காரணத்தினாலயே போலீஸார், தாய் மற்றும் மகனை விநோத முறையில் கண்டித்துள்ளனர்.

MOST READ: குழந்தையின் வீட்டிற்கு ராஜ மரியாதையுடன் வந்த போலீஸ் வாகனங்கள்... காரணம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

இளைஞர் வெளியில் வரும்போது கை குட்டையால் மூக்கு மற்றும் வாய் பகுதியை மூடியிருப்பதை காண முடிகின்றது. ஆனால்,அவரது தாயாரோ மாஸ்க் மற்றும் கை குட்டையால் முகத்தை மறைக்காமல் புடவையைக் கொண்டு மூடியிருந்தார். இதுவும் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

கொரோனா வைரஸ் அதி-தீவிரமாக பரவிக் கொண்டிருக்கின்றதன் காரணத்தினால் காரில் டிரைவருடன் சேர்த்து மூன்று பேரும், இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

அதேசமயம், பாதுகாப்பு அம்சமான மாஸ்க் கட்டாயம் அணிந்தே பயணிக்க வேண்டும் என கூறப்பட்டு வருகின்றது. ஆனால், இதில் எதையுமே கடை பிடிக்காமல் தாய்-மகன் இருவரும் கணிசமான பொருட்களை வாங்க வெளியே வந்தனர். அப்போதுதான் விநோத மரியாதை அவர்களுக்கு போலீஸாரின் வாயிலாக கிடைத்திருக்கின்றது. இந்த மரியாதை என்பது அவமரியாதையின் சின்னமாகவே உள்ளது.

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தின், பாட்டியாலா பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று விதிமீறல் வாதிகளை கண்டிக்கும் விதமாக போலீஸாார் பல யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக, விநோத தண்டனையாக ஆடல், பாடல் மற்றும் மாறுபட்ட உடற்பயிற்சி உள்ளிட்டவை அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

இதுதவிர, வாகனங்களை பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையிலேயே பஞ்சாப் மாநில போலீஸார், விதிமீறலில் ஈடுபட்ட தாய் மற்றும் மகனுக்கு விநோத கண்டிப்பை வழங்கியிருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Punjab Cops Garlanded Mother-Son Duo For Violating Lockdown. Read In Tamil.
Story first published: Tuesday, May 5, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X