ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் vs பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ்.. எது ஜெயிச்சுதுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல ட்வின் மாடல் மோட்டார்சைக்கிள் ஒன்றான இன்டர்செப்டர் 650, பிரிமியம் தரத்தில் விற்பனையாகும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்குடன் டிராக் ரேஸில் ஈடுபட்டு ஆச்சரியமளிக்கும் தகவலை வெளிக்காட்டியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

இரு சக்கர வாகனங்களை வாங்குவதில் இந்தியர்கள் மத்தியில் புதிய விதமான எதிர்பார்ப்பு நிலவுகின்றது. குறிப்பாக, இந்தியர்கள் பலர் பெரியளவிலான, அதிக திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின்களைக் கொண்ட பைக்குகளை வாங்குவதிலேயே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

இந்தியர்களின் இந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் பல பன்னாட்டு நிறுவனங்கள் அதன் அதி திறனுடைய டூ வீலர்களை இங்கு அறிமுகம் செய்து வருகின்றது.

பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி உள்நாட்டு நிறுவனங்களும் தங்களின் பங்காக அதிதிறன் வாய்ந்த பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

அந்தவகையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பழமை வாய்ந்த நிறுவனமான ராயல் என்பீல்டு கடந்த ஆண்டில் ட்வின் மாடல்களான இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டர் ஜிடி650 ஆகிய இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்தது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

இதில், அதிகம் வரவேற்பைப் பெற்று வரும் மாடலாக இன்டர்செப்டர் 650 இருக்கின்றது. இது இந்தியாவில் ட்வின் சிலிண்டர் அமைப்பில் மிக மிக குறைந்த விலையில் கிடைக்காக பைக்காக உள்ளது. இதுவே, இந்தியாவில் இந்த பைக் அதிக வரவேற்பைப் பெற முக்கிய காரணமாக இருக்கின்றது. குறிப்பாக, இந்த பைக் பணத்தின் மதிப்பிற்கேற்ற தரமான இருசக்கர வாகனம் என போற்றப்படுகின்றது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

இதனை உறுதிப்படுத்துவதற்காக இன்டர்செப்டர் 650 பைக்கின் உரிமையாளர், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் காஸ்ட்லி பைக்கான ஜி 310 ஜிஎஸ் பைக்குடன் ரேஸ் செய்து பார்த்துள்ளார். இதில், கிடைத்த ஆச்சரியமான பதிலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்த வீடியோவை கேஎஸ்சி வ்லோக்ஸ் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

போட்டியில் ஈடுபட்டு இரு பைக்குகளும் வித்தியாசமான பிரிவுகளில் தயாரிக்கப்பட்ட டூ வீலர்கள் ஆகும். ஆகையால், அவற்றின் பயன்பாடும், திறன் வெளியேற்றம் வெவ்வேறானதாக காணப்படும்.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

அந்தவகையில், இன்டர்செப்டர் 650 பைக் டூரிங் ரக மோட்டார் சைக்கிளுக்கான திறனைக் கொண்டிருக்கின்றது. இதேபோன்று, பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக் அட்வென்சர் ரக மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த மோட்டார் சைக்கிள் கேடிஎம் 390 ஏடிவி மற்றும் ராயல் என்பீல்டின் ஹிமாலயன் ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

ஆனால், டிராக் ரேஸ் போட்டியின்போது ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 பைக்குடன் மோதியிருக்கின்றது. இந்த போட்டியின் முதல் சுற்றில் இந்த வீடியோவை வெளியிட்ட, அதாவது இன்டர்செப்டரின் உரிமையாளரே அந்த பைக்கை இயக்கினார். இவருக்கு போட்டியளிக்கும் விதமாக பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கை அவரது நண்பர் ஓட்டினார்.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

இவர்கள் இருவரும் ரேஸ் செய்வதற்காக நேரான மற்றும் அதிகம் வாகன நடமாட்டம் இல்லாத நெடுஞ்சாலை ஒன்றை பயன்படுத்தியிருக்கின்றனர். இதை உறுதி செய்யும் வகையில் வீடியோ இருக்கின்றது.

போட்டி இனிதே தொடங்கியது. இதில், ஆரம்பத்தில் இருந்து ராயல் என்பீல்டின் இன்டர்செப்டர் 650 பைக் முன்னிலை வகிக்கின்றது. இதேநிலைதான் இறுதி வரையிலும் நீடிக்கின்றது. தொடர்ந்து ஆரம்பத்தில் இருந்து, அதிக விலைக் கொண்ட பிரிமியம் ரக பைக்காக கருதப்படும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக் பின்னடைவையேச் சந்தித்தது.

இதையடுத்து, இரண்டாம் கட்ட போட்டி உடனுக்குடன் தொடங்குகின்றது. அப்போது, இளைஞர்கள் தங்கள் வாகனங்களை மாற்றிக் கொள்கின்றனர்.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

இந்த சூழ்நிலையிலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டர் 650 பைக் அதி வேகத்தில் சீறிப்பாய்ந்து முதல் இடத்தைப் பிடித்தது. மேலும், இன்டர்செப்டர் 650 பைக்க முந்த முடியாமல் பிஎம்டபிள்யூ திணறிவாறு மண்ணைக் கவ்வியது. ஆகையால், இந்த போட்டியில் வெற்றியாளராக ஒருமானதாக ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 தேர்வு செய்யப்பட்டது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

இதற்கு அந்த பைக்கின் அதிக இழுவை திறனே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த போட்டியைத் தொடங்குவதற்கு முன்பாக பலர் பிஎம்டபிள்யூ பைக்கே வெற்றி பெறும் என எதிர்பார்த்தனர். ஏன், நம்மில் பலரும்கூட இதையே எதிர்பார்த்திருப்போம். ஆனால், இதில் ட்விஸ்ட் வழங்கும்விதமாக இன்டர்செப்டர் 650 வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கில் 647 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்ஜினைப் பயன்படுத்தியிருக்கின்றது. இது, அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த அதீத திறனினாலயே பிஎம்டபிள்யூவின் பிரிமியம் தரத்திலான பைக்கை அசால்ட் செய்திருக்கின்றது இன்டர்செப்டர் 650.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 vs பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்.. எது ஜெயிச்சதுனு தெரிஞ்சா நிச்சயம் அசந்துருவீங்க..!

இதேபோன்று, பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கில் 34 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்ட 313 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது, இன்டர்செப்டரைக் காட்டிலும் மிகக் குறைந்த திறன் ஆகும். இதனாலயே இன்டர்செப்டரிடம் தாக்கு பிடிக்க முடியாமல் தற்போது மண்ணைக் கவ்வியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
RE Interceptor 650 vs BMW G 310 GS Drag Race Video. Read In Tamil.
Story first published: Monday, March 16, 2020, 19:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X