Just In
- 22 min ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 1 hr ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 3 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 13 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- Finance
நரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..!
- Sports
4வது போட்டியில வெற்றிக்கு போராடும் இந்தியா... குறுக்கால மழை வரும்னு சொல்றாங்க!
- News
சென்னை ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த கமல்ஹாசன்!
- Movies
எம்.ஜி.ஆர். 104வது பிறந்த நாள்.. தலைவி டீம் வெளியிட்ட ஸ்பெஷல் ஸ்டில்.. டிரெண்டாகும் ஹேஷ்டேக்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியன் பைக்காக மாறிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு... இதற்கான செலவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு பைக் பல லட்ச ரூபாய் செலவில் இந்தியன் பைக்காக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் ஆச்சரியமளிக்கும் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில் தண்டர்பேர்டு மாடலும் ஒன்று. இந்த பைக்கையே இளைஞர் ஒருவர் உச்சபட்ச செலவில் விலையுயர்ந்த இந்தியன் நிறுவனத்தின் பைக்காக மாற்றியிருக்கின்றார்.

அண்மைக் காலங்களாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களைச் சார்ந்து அதிகளவில் இருசக்கர வாகன மாடிஃபிகேஷன் அரங்கேறி வருகின்றது. இந்த நிலையிலேயே புதிதாக தண்டர்பேர்டு பைக்கிற்கு புதிய அவதாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் தண்டர்பேர்டு பைக்கிற்கு ஸ்கவுட் ரக தோற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உருவத்திற்காக பல்வேறு புதிய மாற்றங்களை அப்-பைக் பெற்றிருக்கின்றது. அலாய் வீல் முதல் புகைப் போக்கும் குழாய் வரை பல்வேறு பாகங்கள் நீக்கப்பட்டு புதிய கூறுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவையே ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு பைக்கின் உரு மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.

பைக்கின் முகப்பு பகுதியில் கருப்பு நிற அலாய் வீல் காட்சியளிக்கின்றது. இந்த வீலில் 150 பிரிவிலான டயர் மற்றும் ட்வின் டிஸ்க் பிரேக்குகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், கஸ்டமைஸ் செய்யப்பட்ட மட்டுகுவார்ட்கள் பொருத்தப்பட்டிருக்கின்றது. மேலும், பைக்கின் உயரத்தை மாற்றியமைக்கும் விதமாக முன் பக்க ஃபோர்க்கும் மாற்றப்பட்டிருக்கின்றது.

இவையனைத்தும் சேர்ந்தே தண்டர்பேர்டை ஸ்கவுட் ரக பைக்காக மாற்றியமைத்திருக்கின்றன. இதுமட்டுமின்றி முகப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் எல்இடி ரக ஹெட்லேம்ப் மின் விளக்கு மற்றும் இன்டிகேட்டர் மின் விளக்குகள் பைக்கை வேற லெவல் தோற்றத்திற்கு முன்னேற்றியிருக்கின்றது. இத்துடன், இந்த ஸ்டைலை கூடுதலாக மெருகேற்றும் வகையில், சிங்கிள் பீஸ் ஹேண்டில், முன்னோக்கிய கால் ஆப்புகள் (Foot Pegs) உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, எரிபொருள் நிரப்பும் தொட்டி, முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில், எரிபொருள் தொட்டிக்காக தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆம், பைக்கிற்கு அட்டகாசமான பாபர் ஸ்கவுட் தோற்றத்தை வழங்க வேண்டும் என்பதற்காக அதிக அகலம் மற்றும் மேலோட்டமான உருவ அமைப்புடைய தொட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொட்டி விற்பனையில் இருக்கும் இந்தியன் பைக்குகளில் இருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி,பைக்கின் எஞ்ஜினைப் பாதுகாப்பதற்காக வி அமைப்பிலான கவசம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்தே, சிங்கிள் சிலிண்டர் கொண்ட எந்திரத்திற்கு இரு குழாய் அமைப்புடைய புகைப் போக்கும் கருவி பொருத்தப்பட்டிருக்கின்றது.

இந்த குழாயின் இறுதி முனையில் வெள்ளி பூச்சுக் கொண்ட வளையங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது புகைப்போக்கும் குழாய்க்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்க உதவியாக இருக்கின்றது. மேலும், இதன் மூலம் ஓர் மிருகம் உறுமுவதைப் போன்று சத்தம் வெளியேறுவதையும் நம்மால் உணர முடிகின்றது. இருப்பினும், ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கே உரித்தான சத்தத்தை அதனால் மறைக்க முடியவில்லை என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

இந்த பைக்கில் ஒருவர் மட்டுமே அமரக்கூடிய இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இதில் இருவராலும் அமர முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏனெனில் இது சற்று நீளமானதாக உள்ளது. அதேசமயம் இருவர் அமர்ந்து செல்வாதானால் சற்று நெறுக்கமாகவே அமர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், ரைடிங்கில் எந்தவித பிரச்னையும் இருக்காது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் பின்பக்கத்திற்கு 250மிமீ அளவுடைய டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சற்று அகலமானது. இத்துடன் பின் பக்க வீலிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான நிறுத்தத்திற்கு உதவும். இதுமாதிரியான பாகம் மாற்றத்தைத் தொடர்ந்தே பைக்கிற்கு முழுவதுமாக கருப்பு நிற பெயிண்ட் பூச்சு செய்யப்பட்டுள்ளது.
இத்துடன், எந்தவகையிலும் பைக்கின் உண்மைத் தோற்றம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தியன் மற்றும் ஸ்கவுட் எனும் பேட்ஜ்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதில் பொருத்தப்பட்டிருக்கும் பெரும்பாலான பாகங்கள் கைவினை பொருட்களாக இருக்கின்றன. ஆகையால், இந்த ஒட்டு மொத்த மாற்றத்திற்கும் ரூ. 12 லட்சம் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த மாற்றத்தை தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பிட்டூ பைக் மாடிஃபிகேஷன்/வேம்ப் வீடியோ எனும் நிறுவனமே செய்திருக்கின்றது. இந்நிறுவனத்தினாலயே ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு பைக் தற்போது அட்டகாசமான உருவத்தைப் பெற்றிருக்கின்றது.