அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ்!! 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் மற்றும் ஆர்டிஆர் பைக்குகள் கணிசமான விற்பனை எண்ணிக்கைகளுடன் குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றத்தை விற்பனையில் கண்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ்!! 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை

2020ஆம் ஆண்டு முடியவுள்ள தற்போதைய சூழலில் ஊரடங்கினால் முடங்கி கிடந்த இந்திய ஆட்டோமொபைல் துறை சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் வாகன விற்பனை முன்னேற்றத்தை கண்டு வருகிறது.

அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ்!! 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை

குறிப்பாக இருசக்கர வாகனங்கள் கடந்த சில மாதங்களாக ஆச்சிரியமளிக்கும் விதத்திலான விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்து வருகின்றன. இந்த வகையில் சிறிது இலாபத்தை பார்த்துவரும் நிறுவனம், டிவிஎஸ்.

அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ்!! 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை

சென்னையில் தலைமையிடம் அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் மட்டும் 41,439 அப்பாச்சி பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதில் 40,943 ஆர்டிஆர் மாடல்களும், 496 ஆர்ஆர்310 பைக்கின் யூனிட்களும் அடங்குகின்றன.

அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ்!! 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை

41,439 என்ற எண்ணிக்கை டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் 2019 அக்டோபர் மாத 34,281 (34,059 ஆர்டிஆர் மாடல்கள் + 222 ஆர்ஆர்310 பைக்குகள்) என்ற விற்பனை எண்ணைக்கையை காட்டிலும் சுமார் 20.88 சதவீதம் ஆகும். அதேபோல் 2020 செப்டம்பர் மாதத்தை காட்டிலும் இந்த எண்ணிக்கை 8.3 சதவீதம் அதிகமாகும்.

அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ்!! 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை

ஏனெனில் அப்போது 38,263 டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டிவிஎஸ் மோட்டார்ஸின் அப்பாச்சி ஆர்டிஆர் வரிசையில் ஆர்டிஆர் 160, ஆர்டிஆர் 180, ஆர்டிஆர் 160 4வி மற்றும் ஆர்டிஆர் 200 4வி உள்ளிட்ட பைக்குகள் அடங்குகின்றன.

அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ்!! 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை

இந்த அனைத்து ஆர்டிஆர் பைக்குகளிலும் நிலையாக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட, ‘4வி' வேரியண்ட்கள் மட்டும் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட், ஸ்லிப்பர் க்ளட்ச், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் க்ளைட் த்ரூ ட்ராஃபிக் வசதிகளையும் பெறுகின்றன. அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கில் மட்டும் கூடுதல் தேர்வாக இரட்டை-சேனல் ஏபிஎஸ்-உம் வழங்கப்படுகிறது.

அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ்!! 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை

டிவிஎஸ்-இன் ஆர்ஆர் வரிசையில் தற்போதைக்கு ஆர்ஆர்310 என்ற ஒற்றை மாடல் மட்டுமே உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் உடனான கூட்டணியினால் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகளின் அடிப்படையில் டிவிஎஸ் ஆர்ஆர்310 பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Report says over 41,000 units of TVS Apache RTR sold in October 2020
Story first published: Wednesday, November 25, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X