இந்திய ட்ரையம்ப் பைக் பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி! வருகிறது மலிவான ட்ரையம்ப் பைக்

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் புதிய ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிளை தயாரிக்க ஆயத்தமாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்போம்.

இந்திய ட்ரையம்ப் பைக் பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி! வருகிறது மலிவான ட்ரையம்ப் பைக்

உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்டான ட்ரையம்ப் ஏகப்பட்ட புதிய மோட்டார்சைக்கிள்களை தற்சமயம் தயாரித்து வருகிறது. அதில் புதிய டைகர் 850 ஸ்போர்ட் பைக்கும் ஒன்று.

இந்திய ட்ரையம்ப் பைக் பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி! வருகிறது மலிவான ட்ரையம்ப் பைக்

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான டைகர் 900 பைக்கின் அடிப்படையில் உருவாகும் இந்த விலை குறைவான ட்ரையம்ப் பைக் முழுக்க முழுக்க நகர சாலைகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது வெளியிடப்பட்டுள்ள படத்தின் மூலமாக அறியலாம்.

இந்திய ட்ரையம்ப் பைக் பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி! வருகிறது மலிவான ட்ரையம்ப் பைக்

டைகர் 900 பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், டைகர் 850 ஸ்போர்ட் பைக் வித்தியாசமான டிசைன் மொழியினை ஏற்றுள்ளது. இதனால் இந்த ட்ரையம்ப் பைக்கும் டைகர் 900-ஐ போல் இந்தியாவில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.

இந்திய ட்ரையம்ப் பைக் பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி! வருகிறது மலிவான ட்ரையம்ப் பைக்

படத்தில், பைக்கின் முன்பக்கம் மிகவும் பெரியதாக உள்ளது. இதனால் இந்த பைக்கில் இரட்டை-ஹெட்லேம்ப் வழங்கப்படலாம். அதேபோல் அகலமான எதிர்காற்று தடுப்பு கண்ணாடியையும் இந்த பைக் பெற்றுவரலாம். இதனால் இந்த பைக்கில் பயணம் ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கான உணர்வை தரும் என்பது உறுதி.

இந்திய ட்ரையம்ப் பைக் பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி! வருகிறது மலிவான ட்ரையம்ப் பைக்

என்ஜின் அமைப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை, டைகர் 900 பைக்கில் வழங்கப்படும் என்ஜின் அமைப்புடன் தான் புதிய டைகர் 850 பைக்கும் விற்பனைக்கு வரும் என கூறப்படுக்கிறது. இதன் காரணமாக இந்த புதிய ஸ்போர்ட் பைக்கும் அதிகப்பட்சமாக 94 பிஎச்பி என்ஜின் ஆற்றலில் இயங்கும். டார்க் திறனிலும் மாற்றம் இருக்காது.

இந்திய ட்ரையம்ப் பைக் பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி! வருகிறது மலிவான ட்ரையம்ப் பைக்

மேலும் இந்த பைக் நவீன தொழிற்நுட்பங்களையும் அதிகளவில் பெற்றுவரும். அறிமுகத்திற்கு பிறகு, ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் பைக்கிற்கு பிஎம்டபிள்யூ எஃப்900 எக்ஸ்ஆர் பைக் விற்பனையில் முக்கிய போட்டியாக விளங்கும். இந்த பிஎம்டபிள்யூ பைக் சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகமானது.

இந்திய ட்ரையம்ப் பைக் பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி! வருகிறது மலிவான ட்ரையம்ப் பைக்

டைகர் ஸ்போர்ட் பிராண்ட் இதுவரை இந்தியாவில் அறிமுகமாகவில்லை. ஆனால் அதிகரித்து வரும் பிஎம்டபிள்யூ பைக்குகளின் போட்டியினால் ட்ரையம்ப் நிறுவனம் அடுத்த ஆண்டில் இந்த பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Triumph Tiger 850 Sport under development
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X