Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அண்டை நாடுகளுக்கு சந்தையை விரிவுப்படுத்தும் ஜாவா- இவரே சொல்லிட்டாரா!
உலகளவில் சந்தையை விரிவுப்படுத்த கிளாசிக் லெஜண்ட்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் ஜாவா மோட்டார்சைக்கிள் பிராண்டை சொந்தமாக கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிறுவனம் ஜாவா பிராண்டை நமது அண்டை நாடுகளுக்கு மட்டுமின்றி ஐரோப்பாவிற்கு கொண்டு செல்ல தற்சமயம் திட்டமிட்டு வருகிறது.

ஐரோப்பாவில் தற்போதைக்கு ஜாவா மோட்டார்சைக்கிள்கள் ஜாவா மோட்டோ ஸ்போல் s.r.o. பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இந்த வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் புதிய 300சிசி ஜாவா மோட்டார்சைக்கிளும் ஐரோப்பாவில் இதே பிராண்டில் தான் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்றும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஒ-வான அஷிஷ் சிங் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜாவா மோட்டோ ஸ்போல் s.r.o. முதன்முதலாக 1997ல் அசல் ஜாவா நிறுவனத்தின் வாரிசாக நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேலும் பேசிய அஷிஷ் சிங் ஜோஷி, "ஐரோப்பாவில் ஜாவா பிராண்டை வைத்திருக்கும் நிறுவனம், அவர்கள் எங்களிடமிருந்து ஒரு சில மோட்டார் சைக்கிள்களை எடுத்திருக்கிறார்கள், அவர்கள் அவற்றை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அத்தகைய தயாரிப்புகளில் நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறோம்.

நாங்கள் நேபாளத்திற்கு எங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளோம், இது எங்களது வெளிநாட்டு சந்தைகளுள் ஒன்று. இந்தியாவுக்கு நெருக்கமான இன்னும் சில சந்தைகளை நாங்கள் தொடர்ந்து திறப்போம், மேலும் ஐரோப்பிய பகுதிகளைப் பொறுத்தவரை, செக் குடியரசின் மீது எங்களது கவனம் உள்ளது" என்றார்.

ஜாவா மோட்டோ ஸ்போல் அதன் சொந்த அளவிலான மோட்டார் சைக்கிள்களையும் கொண்டுள்ளது. இதில் 350சிசி மோட்டார்சைக்கிள்கள், அத்துடன் அர்ஜென்டினா பிராண்டான ஆர்விஎம் உடன் இணைந்து 500சிசி அட்வென்ஜெட்ர் டூரிங் மாடல் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இந்தியாவில், கிளாசிக் லெஜண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஜாவா 300 பைக்கை தயாரித்து வருகிறது, இது ஐரோப்பாவில் ஜாவா மோட்டோ ஸ்போலால் வழங்கப்படுகிறது. கிளாசிக் லெஜண்ட்ஸ் ஏற்கனவே தனது இந்த 300சிசி ஜாவா மோட்டார் சைக்கிள்களை நேபாளத்தில் வழங்கத் தொடங்கிவிட்டது.

மேலும் புதிய அளவிலான ஜாவா மோட்டார் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் பிஎஸ்ஏ பிராண்டிற்காகவும், யெஸ்டி பிராண்டிற்காகவும் கிளாசிக் லெஜண்ட்ஸ் என்ன செய்யவுள்ளது என்பது இன்னமும் கேள்வி குறியாகவே உள்ளது. இந்த பிராண்ட்கள் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு மாறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை பற்றி ஜோஷி எதுவும் பேசவில்லை.