சகல வசதிகளுடன் ஓர் அசத்தலான ஸ்மார்ட் ஹெல்மெட்!

தலைக்கவசம் என்பது மோட்டார்சைக்கிளில் செல்வோருக்கான அடிப்படை பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி இப்போது பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்கள் அதில் புகுத்துப்பட்டு வருகின்றன.

சகல வசதிகளுடன் ஓர் அசத்தலான ஸ்மார்ட் ஹெல்மெட்!

அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த ரேவன் என்ற நிறுவனம் புதிய ஸ்மார்ட் ஹெல்மெட்டை உருவாக்கி இருக்கிறது. விபத்தின்போது தலையை காப்பது மட்டுமின்றி கடமையில்லாமல், ஒவ்வொரு பயணத்தின்போது பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன் இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சகல வசதிகளுடன் ஓர் அசத்தலான ஸ்மார்ட் ஹெல்மெட்!

இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டில் முக்கிய அம்சமாக முன்புறத்திலும், பின்புறத்திலும் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு கேமராக்களும் 286 டிகிரி கோணத்தில் முன்னால், பின்னால் வரும் வாகனங்கள், ஓட்டுபவருக்கு கண்ணுக்கு புலப்படாத பகுதியில் இருந்து வாகனங்களை பார்த்துக் கொள்ளும் விதத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சகல வசதிகளுடன் ஓர் அசத்தலான ஸ்மார்ட் ஹெல்மெட்!

இந்த கேமராக்களை மோட்டார்சைக்கிளின் கைப்பிடியில் பொருத்திக் கொள்ளும் வகையிலான ரிமோட் மூலமாக கட்டுப்படுத்த முடியும். இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை ஹெல்மெட்டின் முன்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மூலமாக பார்த்துக் கொள்ள முடியும்.

சகல வசதிகளுடன் ஓர் அசத்தலான ஸ்மார்ட் ஹெல்மெட்!

அதாவது, கேமராவிலிருந்து நிகழ்நேர முறையில் இந்த திரையில் பார்க்க முடிவதால், பின்னால் வரும் வாகனங்களை திரும்பி பார்க்காமலேயே, ஓட்டுபவர் தெரிந்து கொள்ள முடியும்.

சகல வசதிகளுடன் ஓர் அசத்தலான ஸ்மார்ட் ஹெல்மெட்!

மேலும், இந்த ஹெல்மெட்டில் நண்பர்கள், சக ஊழியர்களுடன் குழுவாக பேசுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், பாடல் கேட்பது, சமூக வலைதளங்களில் ஹெல்மெட் கேமராவில் பதிவாகும் காட்சிகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

சகல வசதிகளுடன் ஓர் அசத்தலான ஸ்மார்ட் ஹெல்மெட்!

நேவிகேஷன் வசதியும் உள்ளது. இந்த ஹெல்மெட்டை இதுவரை 3,000 மைல் தூரம் வைத்து பரிசோதித்துள்ளதாக ரேவன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஹெல்மெட்டில் 7,000 எம்ஏஎச் பேட்டரி இருப்பதால், 12 மணிநேரம் வரை பயணித்தாலும், துல்லியமாக வேலை செய்யும்.

சகல வசதிகளுடன் ஓர் அசத்தலான ஸ்மார்ட் ஹெல்மெட்!

இந்த புதிய ஸ்மார்ட் ஹெல்மெட்டானது கிரவுண்ட் ஃபண்டிங் முறையில் நிதி சேகரிக்கப்பட்டு உற்பத்திக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கிரவுண்ட் ஃபண்டிங் மூலமாக நிதி அளித்தவர்களுக்கு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்த ஹெல்மெட் முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Revan has developed a advanced smart helmet and likely to start delivery from December 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X