ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை அதிரடி உயர்வு!

ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

 ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை அதிரடி உயர்வு!

இந்திய மின்சார வாகன மார்க்கெட்டில் ரிவோல்ட் நிறுவனம்தான் மட்டுமே இப்போது மின்சார பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. ஆர்வி300 மற்றும் ஆர்வி400 என்ற பெயரில் இரண்டு தேர்வுகளில் ரிவோல்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டிசைன், செயல்திறன், ரேஞ்ச் மற்றும் விலை என அனைத்தும் நிறைவை தருவதால், விற்பனையில் உள்ள அனைத்து நகரங்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

 ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை அதிரடி உயர்வு!

இந்த நிலையில், இந்த இரண்டு எலெக்ட்ரிக் பைக் மாடல்களும் முதற்கட்டமாக மாதத் தவணை திட்டத்தின் கீழ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதைதொடர்ந்து, முழுமையாக பணம் செலுத்தி வாங்கும் வாய்ப்பையும் ரிவோல்ட் அறிவித்தது.

 ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை அதிரடி உயர்வு!

இந்த நிலையில், முதல்முறையாக ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது, ஆர்வி300 விலை ரூ.10,000 வரையிலும், ஆர்வி400 விலை ரூ.15,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை அதிரடி உயர்வு!

இதுவரை ரிவோல்ட் ஆர்வி300 பைக் ரூ.84,999க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இனி ரூ.94,999 விலையிலும், இதுவரை ரூ.1,03,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட ஆர்வி400 பைக் ரூ.1,18,999 விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். ஃபேம்-2 மானியத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தள்ளுபடி போக, மேற்கண்ட டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

 ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை அதிரடி உயர்வு!

மேலும், இந்த இரண்டு மின்சார பைக்குகளுக்குமான புக்கிங் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக் மாடல்களுக்கான புக்கிங் தொகை ரூ.7,999 என்ற அளவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது, ரூ.5,200 வரை கூடுதலாகி இருக்கிறது.

 ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை அதிரடி உயர்வு!

புதிய ரிவோல்ட் ஆர்வி300 எலெக்ட்ரிக் பைக்கிற்கு 24 மாதங்களுக்கான திருப்பி செலுத்துவதற்கான மாதத் தவணை ரூ.4,384 ஆகவும், 36 மாதங்களுக்கு ரூ.3,174 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோன்று, ஆர்வி400 பைக்கிற்கு 24 மாதங்களுக்கான திருப்பி செலுத்தும் கால அளவுக்கான மாதத் தவணை ரூ.6,075 ஆகவும், 36 மாதங்களுக்கு ரூ.4,399 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை அதிரடி உயர்வு!

ரிவோல்ட் ஆர்வி300 பைக்கில் 2.7kWh பேட்டரியும், 1.5kW மின் மோட்டாரும் உளஅளன. இந்த பைக் மணிக்கு 65 கிமீ வேகத்தில் செல்வதுடன், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

 ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை அதிரடி உயர்வு!

அதேபோன்று, ஆர்வி400 பைக்கில் 3.24 kWh பேட்டரியும், 3kW மின் மோட்டாரும் உள்ளது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட் #revolt
English summary
Revolt Intellicorp has hiked the prices of its RV300 and RV400 electric motorcycles across the country. Prices for the two electric motorcycles have gone up by a total amount of Rs 14,200 for each model. This includes the booking amount and the one-time payment price.
Story first published: Saturday, December 19, 2020, 12:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X