ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் ரூ.15,000 வரையில் அதிகரிப்பு!! இனி இவற்றின் விலை இதுதான்..

ரிவோல்ட் இண்டெல்லிகார்ப் நிறுவனம் அதன் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் ரூ.15,000 வரையில் அதிகரிப்பு!! இனி இவற்றின் விலை இதுதான்..

ரிவோல்ட் பிராண்டில் இருந்து ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் இவற்றின் முதல் விலை அதிகரிப்பு கடந்த 2020 பிப்ரவரி மாதத்தில் கொண்டுவரப்பட்டது.

ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் ரூ.15,000 வரையில் அதிகரிப்பு!! இனி இவற்றின் விலை இதுதான்..

அப்போதில் இருந்து இவை இரண்டின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.84,999 மற்றும் ரூ.1,03,999 என்ற அளவில் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இவற்றின் விலைகளை ரூ.15,000 வரையில் ரிவோல்ட் அதிகரித்துள்ளது.

ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் ரூ.15,000 வரையில் அதிகரிப்பு!! இனி இவற்றின் விலை இதுதான்..

இதன்படி ரிவோல்ட் ஆர்வி300 பைக்கின் விலை ரூ.10,000 அதிகரிக்கப்பட்டு ரூ.94,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்வி400 பைக்கின் விலை ரூ.15,000 உயர்த்தப்பட்டுள்ளதால் இனி இந்த எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.19 லட்சமாகும்.

ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் ரூ.15,000 வரையில் அதிகரிப்பு!! இனி இவற்றின் விலை இதுதான்..

எக்ஸ்ஷோரூம் விலை மட்டுமின்றி இந்த பைக்குகளின் முன்பதிவு தொகையையும் தயாரிப்பு நிறுவனம் அதிகரித்துள்ளது. இதனால் ஆர்வி300 பைக்கின் முன்பதிவு தொகை ரூ.2,199-ல் இருந்து ரூ.7,199 ஆகவும், ஆர்வி400 பைக்கின் விலை ரூ.3,999-ல் இருந்து ரூ.7,999 ஆகவும் உயர்ந்துள்ளது.

ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் ரூ.15,000 வரையில் அதிகரிப்பு!! இனி இவற்றின் விலை இதுதான்..

இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கைகளுடன் இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளுக்கான இஎம்ஐ திட்டங்களையும் ரிவோல்ட் திருத்தியமைத்துள்ளது. முன்பு இந்த மோட்டார்சைக்கிள்களுக்கு 38-மாத திட்டம் வழங்கப்பட்டு வந்தது.

ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் ரூ.15,000 வரையில் அதிகரிப்பு!! இனி இவற்றின் விலை இதுதான்..

அது தற்போது 24-மாதம் மற்றும் 36-மாத காலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றின்படி வாடிக்கையாளர்கள் ரிவோல்ட் ஆர்வி400 பைக்கை 24 மாதத்திற்கு ரூ.6,075 மற்றும் 36 மாதத்திற்கு ரூ.4,399 என்ற மாதத்தவணை திட்டங்களில் வாங்கலாம்.

ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் ரூ.15,000 வரையில் அதிகரிப்பு!! இனி இவற்றின் விலை இதுதான்..

அதேபோல் ஆர்வி300 பைக்கை 24 மாதத்திற்கு ரூ.4,384 மற்றும் 36 மாதத்திற்கு ரூ.3,174 என்ற திட்டங்களில் வாங்க முடியும். ரிவோல்ட்டின் இந்த இரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் தற்சமயம் சென்னை உள்பட இந்தியாவில் மொத்தம் 6 நகரங்களில் கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட் #revolt
English summary
Revolt RV400 & RV300 Electric Bike Prices Increased By Rs 15,000: Here Is The New Price List!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X