விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ரிவோல்ட்டிற்கு புனே மற்றும் டெல்லி நகரங்களில் கிடைத்த மிக பெரிய அளவிலான வரவேற்பினால் இந்நிறுவனம் தற்சமயம் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சந்தையை விரிவுப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

மேற்கூறப்பட்ட இரு நகரங்களை தொடர்ந்து இன்று அகமதாபாத்திலும், வருகிற மார்ச் 2ஆம் தேதி ஹைதராபாத்திலும், 5ஆம் தேதி சென்னையிலும் ரிவோல்ட்டின் ஆர்வி400 மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

இந்த அறிமுகங்களுக்கு இடையில் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்ஷோரும் விலை ரூ.98,999-ல் இருந்து ரூ.1,03,999-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 5 ஆயிரம் ரூபாய் விலை அதிகரிப்பு முழு பணத்தையும் ஒரே நேரத்தில் செலுத்தும் முறைக்கு மட்டும் தான்.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

அதேபோல் இதே முறையில் பணம் செலுத்துவர்களுக்கு முன்பதிவு கட்டணம் ரூ.3,999 ஆகும். ஆர்வி400 பைக்கிற்கு எக்ஸ்ஷோரூம் தொகை மட்டுமில்லாமல் கூடுதலாக ஆர்டிஒ பதிவு + இன்ஸ்சூரன்ஸ் + ஸ்மார்ட் கார்டு + 3 வருட 4ஜி இணைப்பிற்கு ஒரு முறை கட்டாய கட்டணம் உள்ளிட்டவற்றையும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

இந்நிறுவனத்தின் மற்றொரு எலக்ட்ரிக் பைக் மாடலான ஆர்வி300-க்கும் ஒரு முறை பணம் செலுத்தும் தேர்வில் விலை ரூ.84,999 ஆக உள்ளது. இதனுடன் முன்பதிவு கட்டணம் ரூ.2,999-ஐயும், மேற்கூறப்பட்ட அனைத்து கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

இத்தகைய விலை அதிகரிப்பிற்கு காரணமாக இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளில் வழங்கப்பட்டுள்ள உட்புற பாகங்களின் விலையை ரிவோல்ட் நிறுவனம் குறிப்பிடுகிறது. ஒரு முறை பணம் செலுத்தும் தேர்வு மட்டுமில்லாமல் எம்ஆர்பி திட்டத்திலும் ஆர்வி400 பைக்கை வாடிக்கையாளர் சொந்தமாக்க முடியும்.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

இந்த திட்டத்தில் ரூ.3,999 என்ற ஒன்-டைம் புக்கிங் தொகையுடன் ரூ.3,999 என்ற தொகையை 38 மாதங்களுக்கு செலுத்தும் வகையில் இருக்கும். ஆர்வி300 மாடலுக்கு ரூ.2,999 தொகையை 38 மாதங்களுக்கு செலுத்த வேண்டும். மேலும் ஆர்வி300 பைக்கிற்கு காத்திருப்பு காலம் 5 மாதங்களில் இருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

இந்த இரு மோட்டார்சைக்கிள்களிலும் உள்ள முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மூலமாக பைக்கின் வேகம், பயண தூரம், ரேஞ்ச் மற்றும் பேட்டரியின் ஆற்றல் உள்ளிட்ட தகவல்களை ரிவோல்ட் ஆப்பில் அறிய முடியும்.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

சாலை பாதுகாப்பிற்காக ARAI விதிகளின் படி ரிவோல்ட்டின் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் தீவிரமாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி இந்தியன் உறுதியளிப்பு சோதனைகளிலும் இந்த எலக்ட்ரிக் பைக்குகள் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

சாய்வு திறன் சோதனையில் சுமார் 10.2 டிகிரியில் சாய்வாக உட்படுத்தப்பட்ட இந்த ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகள் கோல்டு மதிப்பை பெற்றுள்ளன. பைக் மட்டுமின்றி இவற்றின் பேட்டரிகளும் செயல்படுதிறன், தேங்கியிருக்கும் தண்ணீரால் பாதிப்படையா திறன், அதிகப்பட்ச வெப்பநிலையில் செயல்திறன் மற்றும் மொத்த ஆயுட்காலம் உள்ளிட்டவற்றை அறிவதற்காக சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி ஈக்கோ மோடில் 156 கிமீ வரை இயங்கக்கூடியது. அதுவே சிட்டி மோடில் 80-90 கிமீ வரை இயங்கும். ஸ்போர்ட் மோடில் ரைடிங் ஸ்டைல் மற்றும் நிலப்பரப்பை பொறுத்து ரேங்ச் வேறுப்படக்கூடும்.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

அதிகப்பட்சமாக 85 kmph வேகம் வரை இயங்கக்கூடிய ஆர்வி400 பைக்கில் 3.24 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி அதிகப்பட்சமாக 72 வோல்ட் பவரை சிங்கிள் சார்ஜில் 150 கிமீ தூரம் வரை வழங்கக்கூடியது.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

இந்த 400சிசி எலக்ட்ரிக் பைக்கில் ப்ரேக்கிங்கிற்காக முன் சக்கரத்தில் 240மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்குடன் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 215மிமீ, பேட்டரி முழுவதும் நிரப்புவதற்கு எடுத்து கொள்ளும் காலம் 4.5 மணிநேரங்களாகும்.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

கூகுள் நிறுவனத்துடன் ரிவோல்ட் இண்டெல்லிகார்ப் நிறுவனம் கொண்டுள்ள ஒப்பந்தத்தால் ஆர்வி400 பைக் மாடலுடன் கனெக்டட் ஹெல்மெட் வழங்கப்படவுள்ளது. இந்த ஆக்ஸசரீ தான் பைக்கை 'ரிவோல்ட் ஸ்டார்ட்' என்ற கட்டளையுடன் இயங்க அனுமதிக்கும்.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

இதுமட்டுமின்றி ரிவோல்ட் ஆப் மூலமாக சேட்லைட் நாவிகேஷன், பைக் இயங்கும் பாதை, ரியல் டைம் பைக் தகவல்கள், பைக்கில் உள்ள பிரச்சனை மற்றும் அருகில் உள்ள முக்கியமான லேண்ட்மார்க்குகள் உள்ளிட்டவற்றையும் ரைடர் அறிய முடியும்.

விலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..

ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கிற்கு 5 வருட/75,000கிமீ உத்தரவாதத்தையும், 10,000 கிமீ சர்வீஸ் இடைவெளியையும் ரிவோல்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. இவற்றுடன் பேட்டரிக்கும் 8 வருட/1.5 லட்ச கிமீ உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Revolt electric motorcycle RV400 prices increased
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X