நடிகை அசினின் கணவர் எடுத்த அதிரடி முடிவு... கலக்கத்தில் இந்திய இளைஞர்கள்... என்னங்க இப்படி பண்ணிட்டீங்க!

நடிகை அசினின் கணவர் ராகுல் சர்மா எடுத்த முடிவால் இந்திய இளைஞர் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

நடிகை அசினின் கணவர் எடுத்த அதிரடி முடிவு... கலக்கத்தில் இந்திய இளைஞர்கள்... என்னங்க இப்படி பண்ணிட்டீங்க!

நடிகை அசினின் கணவரும், ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின் தலைவருமான ராகுல் சர்மா எடுத்த அதிரடி முடிவால் இந்திய இளைஞர்கள் தற்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக இவர் இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த செல்போனின் விற்பனை அதலபாதாளத்தில் வீழ்ந்ததன் காரணத்தினால் ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தை இவர் தொடங்கினார்.

நடிகை அசினின் கணவர் எடுத்த அதிரடி முடிவு... கலக்கத்தில் இந்திய இளைஞர்கள்... என்னங்க இப்படி பண்ணிட்டீங்க!

இது ஓர் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின்கீழ் தற்போது மின்சார மோட்டார்சைக்கிள்களை அவர் விற்பனைச் செய்து வருகின்றார். இந்த இருசக்கர வாகனங்களின் விலையையே அவர் தற்போது உயர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒட்டுமொத்த மின்சார வாகன பிரியர்களுக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

நடிகை அசினின் கணவர் எடுத்த அதிரடி முடிவு... கலக்கத்தில் இந்திய இளைஞர்கள்... என்னங்க இப்படி பண்ணிட்டீங்க!

ரிவோல்ட் நிறுவனம் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ஆகிய இரு மாடல் மின்சார மோட்டார்சைக்கிள்களை இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் விற்பனைச் செய்து வருகின்றது. இவற்றின் விலையிலேயே ரிவோல்ட் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

நடிகை அசினின் கணவர் எடுத்த அதிரடி முடிவு... கலக்கத்தில் இந்திய இளைஞர்கள்... என்னங்க இப்படி பண்ணிட்டீங்க!

அதாவது, முன்னதாக ரூ. 1,08,999 என்ற விலையில் விற்பனையாகி வந்த ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக் தற்போது ரூ. 1,18,999 என்ற விலைக்கு உயர்ந்துள்ளது. இது முன்பைக் காட்டிலும் ரூ. 10 ஆயிரம் அதிகம் ஆகும். இதேபோன்று, முன்னதாக புதிய பைக்கைப் புக் செய்ய வேண்டுமானால் ரூ. 2,999 மட்டுமே செலுத்தினால் போதும் என கூறப்பட்டது. ஆனால், இப்போது ரூ. 7,199 செலுத்தினால் மட்டுமே ஆர்வி400 மின்சார பைக்கை புக் செய்ய முடியும்.

நடிகை அசினின் கணவர் எடுத்த அதிரடி முடிவு... கலக்கத்தில் இந்திய இளைஞர்கள்... என்னங்க இப்படி பண்ணிட்டீங்க!

இதேபோன்று, ஆர்வி 300 மின்சார பைக்கின் விலையும் ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மின்சார பைக் ரூ. 84,999 என்ற விலையில் விற்கப்பட்டு வந்தது. தற்போது ரூ. 94,999 என்ற விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது. புக்கிங் கட்டணத்திலும் ரூ. 4,200 உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ரூ. 2,999 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய கட்டண உயர்வால் புக்கிங் கட்டணம் ரூ. 7,199 ஆக மாறியிருக்கின்றது.

நடிகை அசினின் கணவர் எடுத்த அதிரடி முடிவு... கலக்கத்தில் இந்திய இளைஞர்கள்... என்னங்க இப்படி பண்ணிட்டீங்க!

இந்த திடீர் விலையுயர்வின் காரணமாக இந்தியர்கள் மற்றும் மின்சார வாகன பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். அதேவேலையில் தற்போது தற்காலிகமாக மின்சார இருசக்கர வாகனங்களின் புக்கிங்கையும் ரிவோல்ட் நிறுவனம் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை அசினின் கணவர் எடுத்த அதிரடி முடிவு... கலக்கத்தில் இந்திய இளைஞர்கள்... என்னங்க இப்படி பண்ணிட்டீங்க!

அதிகப்படியான புக்கிங் காரணத்தினால் தற்காலிகமாக புதிய புக்கிங்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 15ம் தேதிக்கு பின்னரே மீண்டும் புக்கிங் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சீனா நாட்டு பாகங்களுக்கு தடை விதித்தன் காரணத்தினால் பல்வேறு பாகங்கள் பிற நிறுவனங்ளிடத்தில் இருந்து வாங்கும் சூழ்நிலைக்கு ரிவோல்ட் தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இந்த உயர்வே அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட் #revolt
English summary
Revolt Increased RV300 And RV00 Electric Motorcycle Prices Up To Rs.14,000. Read In Tamil.
Story first published: Wednesday, December 2, 2020, 18:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X