சென்னையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு!

சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு துவங்க்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு!

கடந்த 2019ம் ஆண்டு ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 என்ற இரண்டு மாடல்களில் எலெக்ட்ரிக் பைக்குகளை ரிவோல்ட் களமிறக்கியது.

சென்னையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு!

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் மாதத் தவணை திட்டத்தின் கீழ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆர்வி300 பைக்கிற்கு ரூ.2,999, ஆர்வி400 மாடலுக்கு ரூ.3,999 என்ற மாதத் தவணையும் நிர்ணயிக்கப்பட்டு 37 மாதங்களில் திருப்பிச் செலுத்தும் வகையில் கால அவகாசம் வழங்கப்பட்டது.

சென்னையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு!

அபரிமிதமான புக்கிங் வந்ததையடுத்து, அவ்வப்போது புக்கிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு!

இந்த நிலையில், சென்னை, ஹைதராபாத், ஆமதாபாத், மும்பை, டெல்லி மற்றும் புனே ஆகிய நகரங்களில் ரிவோல்ட் பைக் மாடல்களுக்கு புக்கிங் துவங்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு!

இந்த நிலையில், ரிவோல்ட் பைக்குகளின் விலை உயர்த்தப்பட்டதையடுத்து, புக்கிங் செயவதற்கான முன்பணம் மற்றும் மாதத் தவணைகள் மாறி இருக்கின்றன. இதன்படி, ஆர்வி300 பைக்கிற்கு ரூ.7,199 முன்பணமும், ரூ.3,174 மாதத் தவணையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு ரூ.7,999 புக்கிங் தொகையும், ரூ.4,399 மாதத் தவணையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு!

ரிவோல்ட் ஆர்வி300 எலெக்ட்ரிக் பைக்கில் 2.7kWh லித்தியம் அயான் பேட்டரியும், 1.5kW மின் மோட்டாரும் உள்ளது. இந்த பைக் மணிக்கு 65 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

சென்னையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு!

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கில் 3.24kWh லித்தியம் அயான் பேட்டரியும், 3kW மின் மோட்டாரும் உள்ளது. இந்த பைக் மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

சென்னையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு!

ரிவோல்ட் ஆர்வி வரிசை பைக் மாடல்கள் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட மாடல்களாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. வாகனத்தின் வேகம், பேட்டரி சார்ஜில் எவ்வளவு தூரம் பயணிக்கலாம்.

சென்னையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு!

இந்த பைக்கில் ஏற்படும் பழுதுகளை கண்டறிவதற்கான தொழில்நுட்ப வசதி, அருகிலுள்ள சார்ஜ் நிலையத்தை கண்டறியும் வசதி, ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்லாதவாறு கட்டுப்படுத்தும் ஜியோ ஃபென்சிங் தொழில்நுட்ப வசதியும் உள்ளது.

சென்னையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு!

புதிய ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்குகளில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் 4ஜி இணைய வசதியை அளிக்கும் இ-சிம் கார்டு பொருத்தப்பட்டு வருவதால், நேரடியாக நிறுவனத்திடம் இருந்து அப்டேட்டுகள் வழங்குவதற்கும், ஜிபிஎஸ் நேவிகேஷன் மற்றும் வாகனத்தின் பழுதுகளை கண்டறிவதற்கும் உதவும்.

சென்னையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு!

இந்த பைக்கில் இருக்கும் பேட்டரியை சார்ஜ் தீர்ந்து போனால், கழற்றிவிட்டு சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியை மாற்றி செல்லும் வசதியும் உள்ளது. இதனால், சில நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிய பேட்டரியுடன் பயணத்தை தொடர வாய்ப்பு உள்ளது. இந்த பைக்குகள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இதர முக்கிய நகரங்களிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட் #revolt
English summary
Revolt Intellicorp reopens booking of the RV300 and RV400 electric motorcycle in the existing cities in the market. It includes cities such as Delhi, Pune, Ahmedabad, Chennai, Hyderabad & Mumbai.
Story first published: Wednesday, December 16, 2020, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X