சைடு காருடன் உருமாறிய ராயல் என்பீல்டு பைக்... முன்பைவிட இப்போ அட்டகாசமா இருக்கு...

சைடு காருடன் உருமாறிய ராயல் என்பீல்டு ஜிடி650 பைக் பற்றிய தகவல் வ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விமான மூக்கின் அமைப்புடன் சைடு காராக உருமாறிய ராயல் என்பீல்டு பைக்... முன்பைவிட இப்போ அட்டகாசமா இருக்கு!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகனங்களில் ஒன்று கான்டினென்டல் ஜிடி650. இந்த பைக்கையே இளைஞர்கள் சிலர் சைடு காராக மாற்றியமைத்துள்ளனர். சைடு கார் ரக மோட்டார்சைக்கிள்கள் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போதே அதிகமாகக் காணப்பட்டன. வளர்ந்து வரும் வாகனத்துறையால் இம்மாதிரியான வாகனங்களைத் தற்போது பார்ப்பதே அரிதாகிவிட்டது.

விமான மூக்கின் அமைப்புடன் சைடு காராக உருமாறிய ராயல் என்பீல்டு பைக்... முன்பைவிட இப்போ அட்டகாசமா இருக்கு!

எனவேதான் இதுபோன்ற வாகனங்களைக் காண்போர், ஏதோ காணாததைக் கண்டதைப் போன்று வியப்புடன் கண்ணைவிட்டு மறையும் பார்க்கின்றனர். அம்மாதிரியான பார்வைாளர்களைப் பெறுவதற்காகவும், அதாவது பலரின் கவனத்தை ஈர்க்கவும், பைக்கை புதுவிதமான உருவத்திற்கு மாற்றியமைக்கும் விதமாக ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி650 பைக்கிற்கு சைடு கார் உருவம் வழங்கப்பட்டிருக்கின்றது.

விமான மூக்கின் அமைப்புடன் சைடு காராக உருமாறிய ராயல் என்பீல்டு பைக்... முன்பைவிட இப்போ அட்டகாசமா இருக்கு!

இந்த உருமாற்ற சம்பவம் இந்தியாவில் அரங்கேறியது அல்ல. இது ஜெர்மன் நாட்டின் கக்ஸ்ஹெவன் எனும் பகுதியிலே செய்யப்பட்டுள்ளது. வால்டர் ஹேரியஸ் எனும் புகழ்வாய்ந்த மாடிஃபிகேஷன் நிறுவனமே இந்த மாற்றத்திற்கு உரித்தான நிறுவனமாகும். இவர்கள்தான் ராயல் என்பீல்டு ஜிடி650 பைக்கை பழங்கால சைடு காராக மாற்றியவர்கள் ஆவர்.

விமான மூக்கின் அமைப்புடன் சைடு காராக உருமாறிய ராயல் என்பீல்டு பைக்... முன்பைவிட இப்போ அட்டகாசமா இருக்கு!

சைடு கார் அமைப்பு

இந்த சைடு கார் அமைப்பிற்கான பாகங்கள் பிற நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களிடத்தில் பெறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, பைப்புகள் டிரையம்ப் 1200 பைக்கிடம் இருந்தும், வீல்கள் ஹார்லி டேவிட்சன் பைக்கில் இருந்தும், பிரேக்குகள் யமஹா பைக்கில் இருந்தும் பெறப்பட்டு பொருத்தப்பட்டிருக்கின்றன. அதேசமயம், சைடு கார் அமைப்பானது தனித்துவமாக, பைக்கிற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

விமான மூக்கின் அமைப்புடன் சைடு காராக உருமாறிய ராயல் என்பீல்டு பைக்... முன்பைவிட இப்போ அட்டகாசமா இருக்கு!

இந்த சைடு காரின் இருக்கை இரு நிறத்தில் காணப்பட்டாலும் அதன் முக்கிய நிறமாக கருப்பு உள்ளது. இந்த நிறம்தான் பைக் மற்றும் சைடு காரின் பெரும்பாலான பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக சைடு காருக்கு விமானத்தின் மூக்கு பகுதியைப் போன்ற உருவ அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு கவர்ச்சியானதாகவும், கண் கவர் தோற்றத்திலும் இருக்கின்றது.

விமான மூக்கின் அமைப்புடன் சைடு காராக உருமாறிய ராயல் என்பீல்டு பைக்... முன்பைவிட இப்போ அட்டகாசமா இருக்கு!

இதைத்தொடர்ந்து பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக கோல்டு நிறம் லைன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று, பயணத்தின்போது எந்த அசௌகரியமான உணர்வும் ஏற்படக்கூடாது என்தற்கான அதிக மிருதுவான இருக்கைகள் உட்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதில், கால்களை நீட்டியோ அல்லது மடக்கியோ நமது சௌகரியத்திற்கு ஏற்பவாறு எப்படி வேண்டுமானாலும் அமர்ந்துக் கொள்ளலாம்.

விமான மூக்கின் அமைப்புடன் சைடு காராக உருமாறிய ராயல் என்பீல்டு பைக்... முன்பைவிட இப்போ அட்டகாசமா இருக்கு!

ஆனால், இதில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சைடு காரின் ஒட்டுமொத்த தோற்றமும், ராயல் என்பீல்டு நிறுவனம் புதிதாக ஓர் பைக்கை விற்பனைக்குக் களமிறக்கியதைப் போன்று காட்சியளிக்கின்றது. அந்தவகையில் அனைத்து அம்சங்களும் மிக நேர்த்தியாக ராயல் என்பீல்டு ஜிடி 650 பைக்குடன் பொருந்தியிருக்கின்றன.

விமான மூக்கின் அமைப்புடன் சைடு காராக உருமாறிய ராயல் என்பீல்டு பைக்... முன்பைவிட இப்போ அட்டகாசமா இருக்கு!

இந்த கூடுதல் உடல் அமைப்பு பைக்கின் திறனில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது கூடுதல் சிறப்பளிக்கும் தகவலாக உள்ளது. அதாவது, சைடு கார் உடல்பகுதியைப் பொருத்திய பின்னரும் இந்த பைக் உச்சபட்சமாக 140 கிமீ வேகத்தில் மிகவும் ஸ்மூத்தமாக செல்வதாக மாற்றியமைத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

விமான மூக்கின் அமைப்புடன் சைடு காராக உருமாறிய ராயல் என்பீல்டு பைக்... முன்பைவிட இப்போ அட்டகாசமா இருக்கு!

மேலும், இந்த சைடு காரின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் தேவைப்பட்டால் கூடுதல் உடலமைப்பாக அமர்ந்திருக்கும் சைடு காரை எளிதில் நீக்கவும் முடியும். இதற்கு வெறும் 10 நிமிடங்களே போதும். அதாவது, ஜிடி650 பைக்குடன் தனித்து செல்ல விரும்பினால், வெறும் பத்து நிமிடங்கள் செலவு செய்தால் போதும் சைடு கார் உடல்பகுதியை நீக்கிவிடலாம் என்கின்றார் அதன் உரிமையாளர்.

விமான மூக்கின் அமைப்புடன் சைடு காராக உருமாறிய ராயல் என்பீல்டு பைக்... முன்பைவிட இப்போ அட்டகாசமா இருக்கு!

கான்டினென்டல் ஜிடி650 ஓர் கஃபே ரேஸர் ரகமாகும். இந்த மோட்டார்சைக்கிளில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய புதிய 648 சிசி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Royal Enfield 650 GT Modified Into Sidecar. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X