ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 BS6 பைக் இந்தியாவில் அறிமுகமானது.. ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப்பு

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தனது மொத்த மோட்டார்சைக்கிள் லைன்அப்-ஐயும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து சந்தைப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் கடைசி மோட்டார்சைக்கிளாக புல்லட் 350 மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப்பு

ஸ்டாண்டர்ட் மற்றும் இஎஸ் என்ற இரு விதமான ட்ரிம்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிஎஸ்6 பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.27 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதன் பிஎஸ்4 மாடலை விட ரூ.6 ஆயிரம் அதிகம் ஆகும். இதன் ஸ்டார்ண்ட் வேரியண்ட் கருப்பு மற்றும் அடர் பச்சை என்ற இரு நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப்பு

இதனை விட சற்று ப்ரீமியம் பைக் மாடலான புல்லட் 350 எக்ஸ் இஎஸ் (எலக்ட்ரிக் ஸ்டார்ட்) பிஎஸ்6 ரூ.1.37 லட்சத்தில் விலையை சந்தையில் பெற்றுள்ளது. இந்த விலை இதன் முந்தைய தலைமுறை பைக்கை விட ரூ.7 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பிஎஸ்6 பைக்கிற்கு ஜெட் ப்ளாக், ரீகல் சிவப்பு மற்றும் ராயல் நீலம் என்ற மூன்று நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப்பு

இந்த இரு வேரியண்ட்களுடன் புல்லட் மாடலுக்கு புதிய மூன்றாவது வேரியண்ட்டையும் ராயல் எண்ட்பீல்டு கொண்டுவரவுள்ளது. இதன் விலை ரூ.1.21 லட்சமாக சந்தையில் நிர்ணயிக்கப்படவுள்ளது. இதற்கு வழங்கப்படவுள்ள நிறத்தேர்வுகளாக புல்லட் சில்வர் மற்றும் ஆனிக்ஸ் ப்ளாக் உள்ளிட்ட நிறங்கள் கொடுக்கப்படவுள்ளன.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப்பு

இந்த மூன்று புல்லட் மாடல்களிலும் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 346சிசி ஏர்-கூல்டு, ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 5250 ஆர்பிஎம்-ல் 19.3 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் பைக்கிற்கு வழங்கவுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப்பு

இந்த என்ஜின் மாற்றம் தவிர்த்து புல்லட் 350 பைக்கில் வேறெந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. இதனால் இந்த பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்துடன் 35மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும் பின்புறத்தில் 153மிமீ ட்ரம்மும் அப்படியே தொடர்ந்துள்ளன.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப்பு

இதன் ஸ்டார்ண்ட் வேரியண்ட் பெரிய கேட்-கான் மற்றும் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷனால் 1 கிலோ அதிகரித்து தற்போது 186 கிலோவாக உள்ளது. அதேநேரம் புல்லட் 350 இஎஸ் 2 கிலோ உயர்ந்து 191 கிலோவாக உள்ளது.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப்பு

ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பைக்குகளின் டெலிவிரிகள் தற்சமயம் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் தணிந்தபின் ஆரம்பமாகவுள்ளது. இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Royal Enfield Bullet 350 BS6 Launched, Rs 6,800 Dearer Than BS4 Model
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X