ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்..!

ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸ் பைக்குகளின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிறுத்தத்திற்கு, புல்லட் ட்ரைல்ஸ் 350 மற்றும் புல்லட் ட்ரைல்ஸ் 500 பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலானது ஒரு காரணம் ஆகும்.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்..!

இந்த இரு ட்ரைல்ஸ் பைக்குகளின் விற்பனை நிறுத்தத்திற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனால் சில டீலர்களோ இந்த மோட்டார்சைக்கிள்கள் சந்தையில் பெரிய அளவில் விற்பனை எண்ணிக்கை பெறாதது தான் முக்கியமான காரணமாக கூறுகிறார்கள்.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்..!

புல்லட் ட்ரைல்ஸ் 350 மற்றும் புல்லட் ட்ரைல்ஸ் 500 மாடல்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதால் இவற்றின் பெயர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்..!

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் புல்லட் ட்ரைல்ஸ் 350 மற்றும் புல்லட் ட்ரைல்ஸ் 500 பைக்குகள் இந்தியாவில் முறையே ரூ.1.62 லட்சம் மற்றும் ரூ.2.07 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்..!

அறிமுகத்திற்கு முன்னர் இந்த இரு ஆஃப்-ரோடு ரக மோட்டார்சைக்கிள்கள் சந்தையில் மிக பெரிய அளவில் விற்பனை எண்ணிக்கையை பெறும் என ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கணித்திருந்தது. ஆனால் புல்லட் ட்ரைல்ஸ் பைக்குகளுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்..!

புல்லட் ட்ரைல்ஸ் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டிருந்த சிங்கிள் இருக்கை தான் இந்த பைக்கின் குறைபாடாக பார்க்கப்பட்டது. இதற்கிடையில் இந்த மோட்டார்சைக்கிள்களில் அப்டேட்களை கொண்டுவரும் பணியிலும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஈடுப்பட்டது.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்..!

இதன் விளைவாக சில டீலர்கள் வழங்கிய, பில்லன் இருக்கையை சேர்த்தல் மற்றும் கிளாசிக் மோட்டார்சைக்கிளில் இருந்து மேற்புறமாக வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய்களை பெறுதல் உள்ளிட்ட யோசனைகளால் புல்லட் ட்ரைல்ஸ் பைக்குகள் கிளாசிக் ட்ரைல்ஸாகவும் சந்தைப்படுத்தப்பட்டது.

இந்த மாடிஃபிகேஷன் மாற்றங்களால் இந்த பைக்குகள் சில டீலர்ஷிப்களில் விறுவிறுப்பாக விற்பனையானது மட்டுமில்லாமல், கிளாசிக் பைக்கின் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு தேர்வாக வழங்கவும் உதவிகரமாக அமைந்தது.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்..!

ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற வகையில் இந்த இரு புல்லட் ட்ரைல்ஸ் மோட்டார்சைக்கிள்களிலும் சில தொழிற்நுட்பங்கள் ஒற்றுமையாக வழங்கப்பட்டிருந்தன. இதில் முக்கியமானது, ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பு.

மற்ற ராயல் எண்ட்பீல்டு பைக்குகளில் இருந்து வேறுபடுவதற்காக சிங்கிள்-இருக்கை, நீளம் குறைவான ஃபெண்டர்கள், நீளமான சஸ்பென்ஷன், மேற்புறமாக வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் உயரத்தில் பொருத்தப்பட்ட ஹேண்டில் பார்கள் உள்ளிட்டவை இந்த ட்ரைல்ஸ் பைக்குகளில் வழங்கப்பட்டு உள்ளன.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்..!

இயக்க ஆற்றலுக்கு புல்லட் ட்ரைல்ஸ் 350 பைக்கில் 346சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 19 பிஎச்பி பவரையும் 28 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கவல்லது.

புல்லட் ட்ரைல்ஸ் 500 பைக்கில் 499சிசியில் அதிகப்பட்சமாக 27 பிஎச்பி பவர் மற்றும் 41.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு என்ஜின் தேர்வுகளுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு புல்லட் ட்ரைல்ஸின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்..!

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் புல்லட் ட்ரைல்ஸ் மாடல்களை உலகம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற இந்த ட்ரைல்ஸ் பைக்குகளின் விற்பனை இந்தியாவில் மட்டும் தான் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த பைக்குகளை ஏற்றுமதி செய்யும் பணி தொடரவுள்ளது. இந்த இரு பைக்குகளும் எடையை மிகவும் குறைவாக கொண்டிருப்பதால் கடினமான சாலைகளிலும் எளிதாக ஓட்டி செல்ல முடியும். மேலும் இத்தகைய பயணங்களுக்கு இனி ஹிமாலயன் மாடலை மட்டும் தான் ராயல் எண்ட்பீல்டு வாடிக்கையாளர்கள் ஒரே தேர்வாக பெற முடியும்.

Most Read Articles
English summary
Royal Enfield Bullet Trails Discontinued In India: Sold For Less Than A Year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X