வெறும் ரூ.10,000-ல் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகள் துவக்கம்...

கிளாசிக் 350 மாடலின் பிஎஸ்6 வெர்சனை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த பைக்கிற்கான முன்பதிவு ரூ.10,000-ற்கு டீலர்ஷிப்களில் செய்துத்தரப்படுவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த தகவலினை இந்த செய்தியில் காண்போம்.

வெறும் ரூ.10,000-ல் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகள் துவக்கம்...

மிக விரைவில் இந்த பைக் அறிமுகம் செய்யப்படவுள்ளதால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து டீலர்ஷிப்களுக்கும் புதிய கிளாசிக் 350 பைக் கிட்டத்தட்ட சென்றடைந்துவிட்டது. இதனால் டீலர்களும் இந்த புதிய பைக்கிற்கான முன்பதிவை ரூ.10,000ல் இருந்து ஏற்று வருகின்றனர்.

வெறும் ரூ.10,000-ல் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகள் துவக்கம்...

இதனால் இந்த பைக்கிற்கான டெலிவரிகள் இந்த மாதத்தில் இருந்தே துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள கிளாசிக் 350 பைக்குகளில் என்ஜினின் திறனில் மட்டும் தான் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது தற்போதைய எரிபொருள்-இன்ஜெக்டெட்-க்கு மாற்றாக கார்ப்ரேட்டட் மற்றும் கேட்டலிடிக் கன்வெர்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

வெறும் ரூ.10,000-ல் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகள் துவக்கம்...

அதேபோல் வயர்-ஸ்போக் சக்கரங்களுக்கு பதிலாக அலாய் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த பிஎஸ்6 பைக்கில் பெரியளவில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை. தற்சமயம் விற்பனையாகி வரும் கிளாசிக் 350 பைக்கின் 349சிசி பிஎஸ்4 என்ஜின் அதிகப்பட்சமாக 19.8 பிஎச்பி பவரையும் 28 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.

வெறும் ரூ.10,000-ல் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகள் துவக்கம்...

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ப்ரேக்கிங் அமைப்பாக முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க்கும் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும் பின்புறத்தில் ட்யூவல் ஷாக் அப்சார்பரும் வழங்கப்படுகிறது.

வெறும் ரூ.10,000-ல் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகள் துவக்கம்...

இந்த க்ளாசிக் 350 மாடலில் புதியதாக ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கடந்த வருட மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இது மட்டுமின்றி ஜாவா நிறுவனத்தின் புதிய பெராக் பைக் மாடலுக்கு போட்டியாக ஒற்றை இருக்கை அமைப்பை கொண்ட கிளாசிக் 350 பைக்கை இந்திய சந்தையில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.

வெறும் ரூ.10,000-ல் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகள் துவக்கம்...

கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் தற்சமயம் சில்வர், கிளாசிக் ப்ளாக், சாம்பல், லகூன் புளூ மற்றும் கிளாசிக் செஸ்ட்நட் ரெட் ஆகிய ஐந்து நிற தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே நிறத்தேர்வுகள் தான் கிளாசிக் 350-ன் பிஎஸ்6 பைக்கிற்கும் கொடுக்கப்படவுள்ளதா அல்லது கூடுதலாக எதாவது நிறத்தேர்வுகள் வழங்கப்படவுள்ளனவா என்பது இந்த புதிய பைக்கின் அறிமுகத்தின்போது தெரிந்துவிடும்.

வெறும் ரூ.10,000-ல் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகள் துவக்கம்...

முன்னதாக பிஎஸ்6 தரத்தில் எல்இடி டிஆர்எல் விளக்குகள் மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் உடன் ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்குகள் தான் கூறப்பட்டு வந்தன. ஆனால் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட பைக்குகளுக்கு ஹன்ட்டர் என பெயர் சூட்டி விரைவில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெறும் ரூ.10,000-ல் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகள் துவக்கம்...

அவை ஹன்ட்டர் பைக்காக இல்லாவிடினும், ஹன்ட்டர் என்ற பெயரில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து இந்த ஆண்டு புதிய பைக்குகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது உறுதி தான்.

வெறும் ரூ.10,000-ல் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகள் துவக்கம்...

கிளாசிக் 350 பிஎஸ்4 பைக்குகள் இந்திய சந்தையில் ரூ.1.45 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பிஎஸ்6 மாற்றத்தால் இந்த விலையில் எந்தளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன என்பதை அறிய 7ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். கிளாசிக் 350 மாடலுக்கு மார்க்கெட்டில் ஜாவா 42, பஜாஜ் டோமினார் 400 உள்ளிட்டவை போட்டி மாடல்களாக உள்ளன.

Most Read Articles
English summary
Royal Enfield Classic 350 BS6 To Launch In India On 7 January: Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X