புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்.. கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் அப்கிரேட் செய்யப்பட்ட கிளாசிக் 350 மாடலை அறிமுகம் செய்யும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்... கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாக கிளாசிக் 350 இருக்கின்றது. இது இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த மாடல் என்பதால் இதில் அவ்வப்போது சிறிய சிறிய அப்டேட்டுகளை வழங்கி பல ஆண்டுகளாக அந்நிறுவனம் விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றது.

புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்... கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

ஆகையால், இந்த பைக் எப்போதும் இந்திய இளைஞர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்ற மாடலாக காட்சியளிக்கின்றது. இதற்கு இந்த பைக்கின் கவர்ச்சிகரமான கிளாசிக் தோற்றமே மிக முக்கியமான காரணம் உள்ளது.

ஆனால், இந்த பைக்கின்மீது இருந்த மோகம் சற்றே குறைந்ததைப் போன்று அண்மைக் காலங்களாக இதன் விற்பனைத் தொடர் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்... கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

இதற்கு இந்திய வாகனத்துறையின் மந்த நிலை ஓர் காரணமாக இருந்தாலும், ஜாவாவின் மறுமலர்ச்சி மற்றும் பெனல்லி நிறுவனத்தின் மலிவு விலை பைக் ஆகியவற்றின் அறிமுகம் ராயல் என்பீல்டிற்கு தொடர் சரிவை ஏற்படுத்தியது. ஆகையால், இந்த சரிவில் இருந்து மீள்வதற்காக ராயல் என்பீல்டு பல்வேறு முயற்சிகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்... கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

அந்தவகையில், மலிவு விலை பைக், பெண்கள் மற்றும் மெல்லிய தேகமுடைய ஆண்கள் இயக்குகின்ற வகையிலான இலகு ரக பைக்கை தயாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அது மேற்கொண்டு வருகின்றது.

இதைத்தொடர்ந்து, தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களில் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திலான எஞ்ஜின்களையும் அப்கிரேட் செய்து வருகின்றது.

புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்... கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

அவ்வாறு, புதிய உமிழ்வு தரத்திற்கு அப்கிரேட் செய்யப்படும் பைக்குகளில் புதிய ஸ்டைல் மற்றும் நிறத்தையும் வழங்க ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, உருவாக்கப்பட்ட பைக்குகள் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்... கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

அந்தவகையில் உருவாக்கப்பட்ட கிளாசிக் 350 மாடலை வருகின்ற செவ்வாய்கிழமை (ஜனவரி 7) அன்று அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவல் மற்றும் புகைப்படத்தை ஜிக்வீல்ஸ் ஆங்கில தளம் வெளியிட்டு உறுதிச் செய்துள்ளது.

புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்... கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

அந்தவகையில், புதிய அப்டேட் செய்யப்பட்ட கிளாசிக் 350 பைக்குகள் டீலர்கள் ஷோரூமை வந்தடைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது வெளியாகியிருக்கின்றது. ஆகையால், இதன் அறிமுகம் உறுதி என்பது தெரிகின்றது.

அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள ராயல் என்பீல்டு பைக்கின் டீலர்கள் புதிய கிளாசிக் 350 மாடலுக்கான புக்கிங்கை ரூ. 10 ஆயிரம் முன் தொகையுடன் ஆரம்பித்துள்ளனர்.

புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்... கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

இந்த பைக்கில் காணப்படும் மாற்றங்களிலேயே மிக முக்கியமானதாக பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தப்பட்ட எஞ்ஜினே காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி, புதிய விதமான வண்ணப்பூச்சு மற்றும் தனித்துவமான வேலைப்பாடுகள் கிளாசிக் 350-க்கு கவர்ச்சியான தோற்றத்தை சேர்த்துள்ளது.

இதைத்தவிர, வெறெந்த மாற்றத்தையும் இந்த பைக்கில் ராயல் என்பீல்டு மேற்கொள்ளவில்லை.

புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்... கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

தற்போது, விற்பனையில் இருக்கும் பிஎஸ்-4 தரத்திலான 350 கிளாசிக் மாடலில் 346 சிசி திறன் கொண்ட ஏர் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. தற்போது, பிஎஸ்-6 தரத்தில் அறிமுகம் செய்யப்படும் கிளாசிக் 350 மாடலிலும் இதே எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்... கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

ஆனால், இதில் கூடுதலாக ப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது, பிஎஸ்-4 எஞ்ஜினைக் காட்டிலும் அதிக மைலேஜ் மற்றும் குறைவான மாசை வெளிப்படுத்தும்.

புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்... கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

தொடர்ந்து, கிளாசிக் மட்டுமின்றி மற்ற அனைத்து தயாரிப்புகளையும் பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் பணியை ராயல் என்பீல்டு மேற்கொண்டு வருகின்றது. இந்த பைக்குகள் அனைத்தும் 2020 ஏப்ரல் 1ம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புது கலர், மினு மினுக்கும் ஸ்டைல்... கிளாசிக் 350-ன் புதிய அத்தியாயம்... அறிமுகம் எப்போது தெரியுமா..?

தற்போது விற்பனையில் இருக்கும் பிஎஸ்-4 தரத்திலான எஞ்ஜினைக் கொண்ட கிளாசிக் 350 ரூ. 1.45 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் இதைக்காட்டிலும் ரூ. 10 ஆயிரம் அதிக விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் விலை மற்றும் மற்ற தகவல் அனைத்தும் வருகின்ற 7ம் தேதி அந்த பைக்கின் அறிமுகத்தின் வெளியிடப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Royal Enfield Classic 350 BS6 Launch Date. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X